செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

S.samy about the Control of the Teples: அரசின் கட்டுப்பாட்டிலிருந்து கோயில்கள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுபடும்: சுப்பிரமணியன் சுவாமி

தமிழகக் கோயில்கள் ஆரியக் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடும் நாளே உண்மையான  இறைநெறி நாளாகும். தமிழர்கள் தமிழர்களுக்காகத் தமிழர்கள் பொருளிலும் தமிழர்கள் உழைப்பிலும் தமிழர் நாட்டில் கட்டப்பட்ட கோயில்களில் தமிழர் தெய்வங்களை வணங்கத் தமிழ் மொழித் தகுதியில்லை எனத் தவறாகக் குறிக்கப்பட்டுப் புறக்கணிக்கப் படுவது முறை அல்ல. இறைவா! இறைவா! நீயே சொல்வாய்! 
முறைதானா இதுவும்!  அறம்தானா இதுவும்! 
உனை வாழ்த்த உன் தமிழுக்குத் தடையா?
உனைப் போற்ற தாய்த் தமிழுக்குத் தடையா?
சொல்வாய் நீ சொல்வாய்! இறைவா நீ சொல்வாய்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அரசின் கட்டுப்பாட்டிலிருந்து கோயில்கள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுபடும்: சுப்பிரமணியன் சுவாமி

வேலூர், பிப்.14: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 45 ஆயிரம் இந்து கோயில்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இவ்வாண்டு இறுதிக்குள் வெளிவந்துவிடும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்தார்.வேலூரில் திங்கள்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நகைகள் உள்ள பெட்டக சாவியை அரசிடம் தரவேண்டும் என்ற மதுரை பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து இந்து தர்ம ஆச்சாரிய சபா அமைப்பிற்காக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளேன்.சிதம்பரம் நடராஜர் கோயிலை திமுக அரசு கைப்பற்றியது தொடர்பான வழக்கில்  இறுதி வாதம் இம்மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது. அதில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.  தமிழகத்தில் 45 ஆயிரம் கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. இது சட்டத்துக்கு புறம்பானது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இவ்வாண்டு இறுதிக்குள் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவரும். இஸ்லாமிய வங்கி வரக் கூடாது என நான் போட்ட வழக்கு கேரளத்தில் தோல்வி அடைந்ததாக தவறாக செய்தி பரவியுள்ளது. இந்திய சட்டப்படி இஸ்லாமிய வங்கியை ஏற்படுத்த முடியாது என்ற எனது கோரிக்கையை கேரள உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. நாட்டின் சட்டவிதிகள் படி இஸ்லாமிய வங்கி நடத்த முடியாது என்பதை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டதை அடுத்தே வழக்கு தள்ளுபடி ஆனது என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக