இறையாண்மை என்ற பெயரில் தேசிய உணர்வாளர்களைத் தண்டிக்கும் இந்தியம் நாட்டு மக்களைக் காப்பாற்ற எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் இருந்து கற்றுக் கொள்ளட்டும்! வல்லரசாக ஆசைப்பட்டால் போதாது. தன் நாட்டு மக்களுக்கான நல்லரசாகவும் செயல்பட வேண்டும் என்பதை இந்தியம் புரிந்து கொள்ளட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இஸ்லாமாபாத், பிப்.11: லாகூர் போலீஸôரால் கைது செய்யப்பட்ட அமெரிக்க அதிகாரி ரேமாண்ட் டேவிஸ் (36) உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால், பாகிஸ்தான் தூதரை வாஷிங்டனிலிருந்து வெளியேற்றுவோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், டேவிûஸ 14 நாள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருப்பதால், இருதரப்பு உறவில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. டேவிஸ் கைது தொடர்பாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானியை நேரில் அழைத்துக் கண்டித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன், "உடனடியாக டேவிûஸ விடுவிக்காவிட்டால், உங்களை நாட்டை விட்டு வெளியேற்றிவிடுவோம், பாகிஸ்தானிலுள்ள தூதரகத்தை உடனடியாக மூடுவோம். உங்கள் அதிபர் ஜர்தாரியின் வாஷிங்டன் பயணத்தை ரத்து செய்வோம்' என்று எச்சரித்ததாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அமெரிக்க தூதரகம் விளக்கம்: இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் யாரும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. எனினும் இதுபற்றி இஸ்லாமாபாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,"தனிப்பட்ட அரசுமுறை பேச்சு பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது. எனினும் வெளியாகியிருக்கும் தகவல் துல்லியமானது அல்ல' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி கேட்டபோது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டாமி வைட்டர், எதுவும் கூற மறுத்துவிட்டார்.ஹக்கானி மறுப்பு: இதனிடையே, அமெரிக்கா எச்சரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹக்கானி மறுத்திருக்கிறார். "அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட எந்த அமெரிக்க அதிகாரியும் எனக்கு தனிப்பட்ட வகையில் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை, வரம்புமீறிப் பேசவும் இல்லை' என ட்விட்டர் இணையதளம் மூலமாக அவர் கூறியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த டேவிஸ் கடந்த ஜனவரி 27-ம் தேதி லாகூரில் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதையடுத்து அவரை லாகூர் போலீஸôர் கைது செய்தனர். லாகூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிப்ரவரி 3-ம் தேதி வரையும், பின்னர் பிப்ரவரி 11-ம் தேதி வரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கப்பட்டது. தான் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஆயுதமேந்திய இருவர் தன்னைப் பின் தொடர்ந்து வந்து, கொள்ளையடிக்க முயன்றதாகவும், அதன் பிறகே தற்காப்புக்காக தாம் துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீஸôரிடம் டேவிஸ் தெரிவித்தார். போலீஸ் விசாரணையின்போது தான் ஒரு கன்சல்டன்ட் எனத் தெரிவித்த டேவிஸ்,அமெரிக்க வெளியுறவுத் துறை அளித்த ஆவணங்களையும் போலீஸôரிடம் காட்டியிருக்கிறார். போலீஸ் காவல் முடிந்த நிலையில், போலீஸôர் அவரை லாகூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர். விசாரணையின் போது ஆஜரான லாகூர் நகர காவல்துறை ஆணையர் அஸ்லாம் தரீன், டேவிஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தற்காப்புக்காகச் சுட்டதாக டேவிஸ் கூறுவதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, டேவிûஸ 14 நாள் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது லக்பத் சிறையில் டேவிஸ் அடைக்கப்பட்டிருக்கிறார். டேவிஸ் விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஏற்கெனவே, பாகிஸ்தானுடனான உயர்நிலைத் தொடர்புகளை அமெரிக்கா துண்டித்துக் கொண்டிருப்பதாகவும், டேவிஸ் விடுவிக்கப்படும்வரை இதே நிலை தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டதால் இனி சட்டப்படியே எதுவும் செய்ய முடியும் என பாகிஸ்தான் தலைவர்கள் கூறுவதாகவும் தெரிகிறது.
கருத்துகள்
அவன் உளவாளியாக இருந்தாலும் பாகிஸ்தான் அவனை எதுவும் செய்து விட முடியாது. பாகிஸ்தான் என்பது அமேரிக்கா விட்டெறியும் பிஸ்கட்டை பிடித்து சாப்பிட்டு வாழும் நாய்.
By Kapil
2/12/2011 3:04:00 PM
2/12/2011 3:04:00 PM
திரு. சி. ஜெய குமார், அப்படியானால் போபால் எரிவாயு சம்பத பட்டவர்களை இந்தியா தப்பவிட்டது சரி என்று கூருகிரிகளா.
By ஜபருல்லாஹ்
2/12/2011 1:51:00 PM
2/12/2011 1:51:00 PM
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்ற கொள்கையை மறந்துவிட்டதோ பாகிஸ்தான். கொலை செய்தவனை கொலை செய்வதுதானே முறை. இதையே ஒரு அமெரிக்கனை உலகில் உள்ள எந்த நாட்டினராவது அமெரிக்காவில் வைத்து சுட்டு சாகடித்திருந்தால் அடுத்தவனை ஏமாற்றி,கொள்ளையடித்து, சுரண்டி வாழும் அமெரிக்க சும்மா இருந்திருக்குமா? அந்த நாட்டின்மீதே அணுஆயுத பதுக்கல் என்ற ஒரு பொய்யான தகவலை வெளியிட்டு அந்த நாட்டையே சின்னாபின்னாவாக்கிருக்காதா? எனவே இந்த உளவாளி டேவிஸ்சை உடனே தூக்கில் போடுவதுதான் முறை.
By பூமி
2/12/2011 11:49:00 AM
2/12/2011 11:49:00 AM
அமெரிக்கர்களுக்கு பாகிஸ்தானை பற்றி தற்போது நன்கு தெரிந்திருக்கும். சி.ஜெய குமார்
By சி.ஜெய குமார்
2/12/2011 8:27:00 AM
2/12/2011 8:27:00 AM