முதல்வரின் பாராட்டப்பட வேண்டிய பண்புகளில் இதுவும் ஒன்றாகும். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தங்க மகுடம், வீரவாள் ஏலத்தால் கிடைத்த தொகை ம.பொ.சி. வாரிசுகளுக்கு அளிப்பு
First Published : 14 Feb 2011 03:45:07 AM IST
சென்னை, பிப். 13: முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட தங்க வீரவாள், தங்க மகுடத்தை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த தொகை ம.பொ.சி.யின் மரபுரிமையர்களுக்கு (வாரிசுகளுக்கு) ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.ஏலத்தின் மூலம் கிடைத்த ரூ.55 லட்சத்தை ம.பொ.சி.யின் மகன் மறைந்த சி. திருநாவுக்கரசின் மனைவி ஜெகதீஸ்வரி, பேத்திகள் தி. பரமேஸ்வரி, சுந்தரி நித்தியானந்தம், நந்தினி, பேரன்கள் திருஞானம், ஞானசிவம் ஆகியோருக்கு தலா ரூ.3.05 லட்சம் வழங்கப்பட்டது.ம.பொ.சி.யின் மகள்கள் கண்ணகி, மாதவி ஆகியோருக்கு தலா ரூ.18.33 லட்சம் வழங்கப்பட்டது.இதற்கான வரைவு கேட்போலைகளை முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் வழங்கினார். செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் ரா. சிவக்குமார், தமிழ் வளர்ச்சி இயக்குநர் எழிலரசு ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக