செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

nidhi awards: photoon: நிதியூட்டும் நிதி விருதுகள்

<<விருதுகள் பெயர சுத்த தமிழ்ல வெச்சிக் கொடுத்தா ரொம்ப நல்லாருக்கும்.>>எனக் குறிப்பிட்டு விட்டுப் பாசா, போசனா முதலான சொற்களில் பட்டங்களைக் குறிப்பது ஏன்? கற்பனையிலும் தாய் மொழியை மறக்கலாமா? எனினும் உங்களுக்கு வாசகர்கள் சார்பில் கிண்டல் நிதி என்னும் பட்டம் வழங்குகின்றேன். அழிவு நிதி என்னும் பட்டம் வழங்குவதற்குள் மொழி அழிவு எண்ணங்களை வி்ட்டு விடுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


நிதியூட்டும் நிதி விருதுகள்

என்னவோ போங்க... மணிமணியா பட்டங்கள கொடுத்தாலும், ஆணியில சட்டம் போட்டு மாட்டத்தான் முடியுது. நிதிநிதியா பட்டங்கள கொடுங்க... அப்படியாவது எங்க நிதி நிலை மேலேறுதான்னு பாக்கலாம். எங்க பசங்க, பேரன் பேத்திகளுக்கு நிதிப் பெயரா வெச்சி என்னிக்கும் ஐயாவ நினைச்சுக்குவோம்... அப்படியே எல்லாருக்கும் ஒரே நிதிப் பட்டமா இல்லாம, தகுதி வாரியா பிரிச்சுக் கொடுத்தா நல்லாருக்கும். அதுவும், விருதுகள் பெயர சுத்த தமிழ்ல வெச்சிக் கொடுத்தா ரொம்ப நல்லாருக்கும். அதுவும், தலைமுறைகளை வாழவைத்துக் கொண்டிருக்கிற தலைவர் பெயரால இருந்தா இன்னும் நல்லாருக்கும். அதுதான்... தமிழர்களின் சொற்காலம். சோர்விலா பொற்காலம். உயிரோடு இருக்கும் உணர்வுக் காலம். உயிர்ப்போடு திகழும் உறக்க காலம். உணவுக்காய் அலைபாயும் உழவர் காலம்.கலைபேரில் கலங்கடிக்கும் கனவுக் காலம். இந்த விருதுகள் எப்பேர்ப் பட்ட விருதுகள்..?கொடுப்பவர் மகிழ பெறுபவர் நெகிழபரம்பரையே மகிழும் பட்டங்கள் ஆயிற்றே!என்ன விருதுகள்..?நம் எண்ண விருதுகள்...மொழிவல்லுநராக சுட்டப்படுபவர்களுக்கு - பாஷாநிதிகட்சிக்கு நிதி கொடுத்தவர்களுக்கு - போஷணாநிதிஆட்சியை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களுக்கு - தூஷணாநிதிஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் கவிஞர்களுக்கு - ஜால்ராநிதிபுகழ்ந்துரைத்து கவிதை படைத்தவர்களுக்கு - கற்பனாநிதிகட்சிப் பாடல் பாடகர்களுக்கு - காயகநிதிபிரசார பீரங்கி நடிகர்களுக்கு - நடிகநிதிபிரசாரமேடை நடிகையருக்கு -  நடிகையர்நிதிகுத்தாட்ட நடனக் கலைஞர்களுக்கு - நடனாநிதிஇன்னும்...கோஷம் போடும் இளைஞர்களுக்கு - யுவநிதிகவிதைகேட்டு கைத்தட்டும் இளைஞியருக்கு - யுவதிநிதிஇரட்டைஅர்த்த நகைச்சுவை நடிகர்களுக்கு - ஹாஸ்யநிதிகோள்மூட்டும் அரசியல்வாதிகளுக்கு - கலஹநிதிஎதிர்க்கட்சித் தலைவருக்கு - வாய்தாநிதிஇன்னும் இன்னும்...அடிக்கடி கூட்டணிமாறும் தலைவர்களுக்கு - சந்தர்ப்பநிதிஅடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிகளுக்கு - தாவல்நிதி எக்ஸ்ட்ரா லக்கேஜ் கூட்டணித் தலைவருக்கு - தொங்கல்நிதிஇன்னும் இன்னும் இன்னும்.... பின்குறிப்பு:வாசகர்களின் பரிந்துரையில் உள்ளது... விருதுகளின் பெயர்கள் பிறகு அறிவிக்கப்படும்!
கருத்துகள்

கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு கலாநிதி, உதவி செய்தவர்களுக்கு தயாநிதி, புத்திசாலித்தனத்தை வெளிப்படுடுத்டியவர்களுக்கு அறிவுநிதி என்றெல்லாம் பெயர் வெக்கலாமே
By பாமரன்
2/14/2011 9:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக