competition லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
competition லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 ஆகஸ்ட், 2011

மூவர் உயிர் காப்போம் - கருத்தைத் திரட்டும் கவிதை, கட்டுரைப் போட்டி

மூவர் உயிர் காப்போம் - கருத்தைத் திரட்டும் கவிதை, கட்டுரைப் போட்டி

பதிவு செய்த நாள் : August 27, 2011


ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (திருக்குறள் 579)
மூவர் உயிரைக் காத்திடுக !            மூவாப்புகழைப் பெற்றிடுக !
தமிழ்க்காப்புக் கழகம் தொகுக்கும்
மக்கள் முறையீட்டுக்
கவிதை, கட்டுரைப் போட்டிகள்
மனிதநேய ஆர்வலர்களே!
மரணத்தண்டனையினும் கொடியது அதனை எதிர்நோக்கிச் சிறை வாழ்க்கையைக் கழிப்பது என நீதிபதிகளாலேயே சொல்லப்பட்ட கொடுந்தண்டனையால் துன்புறுபவர்கள்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஆவர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மக்களின் கருத்துக்களைத் திரட்டி அவை, தடை வழக்கு  நீதிபதி, முதல்வர் முதலானவர்களுக்கு அனுப்பி வைக்கப் பெறும். இதனை முன்னிட்டு விடுதலை முறையீடுகளைக்  கவிதை,  கட்டுரை வடிவில்  அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
  • கவிதை 24 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • கட்டுரை 4 பக்க அளவில்  இருக்க வேண்டும்.
பிழைகளின்றியும் அயற்சொல் கலப்பும் அயலெழுத்துக் கலப்பும்  இன்றியும் படைப்புகள்  இருக்க வேண்டும்.
படைப்புகளை 5.9.2011 ஆம் நாளுக்குள் thamizh.kazhakam@gmail.com என்னும் மின்வரிக்கு அனுப்ப வேண்டும். எல்லா அகவையினரும் எல்லா நாட்டினரும் கலந்து கொள்ளலாம். தங்கள் பெயர், அகவை, பேசி எண் மற்றும் முகவரியைக் குறிப்பிடவும்.
பங்கேற்போர் எண்ணிக்கைக்கேற்ப தமிழ்க்காப்புக்கழக நிறுவனர் பேராசிரியர் சி.இலககுவனார் அவர்களின் 38 ஆவது நினைவு நாளை முன்னிட்டுப் பரிசுகளும்  வழங்கப் பெறும். பரிசுகள் அடிப்படையில்  இல்லாமல் உணர்வின் அடிப்படையில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இளந்தலைமுறையினரைப் பங்கேற்கச் செய்து தமிழ் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் படைப்புகளைப் பெற்று அனுப்பலாம்.
மக்கள் கருத்தைத் திரட்டி மூவருக்கும் விடுதலை வழங்கச் செய்வோம்.

தொடர்பிற்கு
இலக்குவனார் திருவள்ளுவன்,
தலைவர்
பேசி: 98844 81652

அரு.வள்ளியப்பன்,
செயலர்
பேசி: 98840 57744

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

விந்தன் நினைவு சிறுகதைப் போட்டி


திருச்சி, பிப்.14: மறைந்த எழுத்தாளர் விந்தன் நினைவாக சிறுகதைப் போட்டி ஒன்றை திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது.போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் அரசியல் தவிர்த்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வழிகாட்டும் வகையான, சாதாரண மக்களுக்கு, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, குழந்தைகளுக்கு நற்பண்புகளையும், நம்பிக்கையும் தோற்றுவிக்கும் வகையான கருத்துகளைக் கருவாகக் கொண்டு ஏ-4 அளவு தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமல் அமைந்திருக்க வேண்டும். கதைகள் இதுவரை பிரசுரிக்கப்படாத, சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.தேர்வு பெறும் சிறந்த சிறுகதைகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். சிறுகதைகளை, வை.ஜவஹர் ஆறுமுகம், தலைவர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம், 2/97, கிருஷ்ணமூர்த்தி நகர், திருச்சி-21 என்ற முகவரிக்கு 2011, மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது.

திங்கள், 10 ஜனவரி, 2011

Competitions conducted by Kamban Kazhagam: கம்பன் கழகத்தின் கட்டுரை, பேச்சு போட்டி

கம்பன் கழகத்தின் கட்டுரை, பேச்சு போட்டி

First Published : 10 Jan 2011 05:09:35 AM IST


சென்னை, ஜன. 9: கம்பன் கழகத்தின் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் ஜனவரி 30-ம் தேதி நடைபெறுகின்றன.  காரைக்குடி கம்பன் கழகம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இப்போட்டிகளுக்கு ஏற்பாடு செய்/ப்பட்டுள்ளது.  கம்பராமாயணம், திருக்குறள் ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள முழு நேர, பகுதி நேர கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.  இவை தவிர, சிவகங்கை மாவட்டம், அதனைச் சுற்றியுள்ள பள்ளி மாணவர்களுக்கும் கம்பராமாயண ஒப்பித்தல் போட்டிகளும் நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.  காரைக்குடியில் உள்ள கம்பன் மணி மண்டபத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.  இது குறித்து விவரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும்: 94450 22137.

ஞாயிறு, 7 மார்ச், 2010

செம்மொழி மாநாடு: "விக்கிபீடியா' தமிழ் இணைய தளத்துக்கு கட்டுரை அளிக்க மாணவர்களுக்குப் போட்டி



தமிழ் இணைய மாநாட்டில் கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது. செம்மொழி மாநாட்டில் நடத்தப்படும் ஆய்வரங்கத்தைப் போல, இணைய மாநாட்டிலும் ஆய்வரங்கம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க உள்ளனர்.இதுதவிர கணினியில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதுபற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுவிதப் போட்டி நடத்தப்படுகிறது.இப்போட்டி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகிறது. ஐ.ஐ.டி. கான்பூர் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் இணைய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.போட்டி குறித்து இணைய மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருமான ப.வி.ச.டேவிதார் கூறியதாவது:கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து கல்லூரி மாணவர்களுக்குப் போட்டி நடத்தப்படுகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடைத் துறை, விளையாட்டு துறை என 7 வகை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.கணினியில் தமிழ் பயன்பாடு குறித்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும்.இணையதளத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க இப்போட்டி வழி செய்கிறது."விக்கிபீடியா' தமிழ் இணையதளம்: எந்தவொரு தகவலையும் "விக்கிபீடியா' இணையதளத்தின் மூலம் பார்த்துவிட முடியும். இந்த இணையதளத்தில், ஒவ்வொரு மொழியிலும் பல்வேறு தலைப்பில் ஏராளமான கட்டுரைகள் உள்ளன.ஆனால், "விக்கிபீடியா' தமிழ் இணையதளத்தில் வெறும் 22,000 கட்டுரைகளே உள்ளன. இதை அதிகரித்தால்தான் இணையதளத்தில் தமிழின் பயன்பாடு அதிகமாகும். ÷அந்தவகையில் கல்லூரி மாணவர்களுக்காகப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் மாணவர்களிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.இந்தக் கட்டுரைகள் அனைத்தும் "விக்கிபீடியா' தமிழ் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.கட்டுரைகளை "யுனிகோட்' முறையில் தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். போட்டி அறிவிப்பு மற்றும் இணையதளத்தில் மாணவர் பதிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.