திங்கள், 14 பிப்ரவரி, 2011

tamil daily for singhalam at yaazhppaanam: யாழ்ப்பாணத்தில் தமிழ் நாளிதழ் பதிப்பை தொடங்க இலங்கை முடிவு


த் தினகரன் தமிழைப் பழித்து எழுதி வரும் நாளிதழ். அப்பொழுதே சிங்களக் கைக்கூலியாகச் செயல்படுவது புரிந்தது.  இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிறது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

யாழ்ப்பாணத்தில் தமிழ் நாளிதழ் பதிப்பை தொடங்க இலங்கை முடிவு
Publish Post
First Published : 13 Feb 2011 04:30:11 PM IST


கொழும்பு, பிப்.13- இலங்கையில் தமிழர்களிடையே அரசுத் தரப்பு செய்திகளை பரப்பும் வகையில், லேக் ஹவுஸ் ஊடக நிறுவனத்தின் "தினகரன்" நாளிதழ் பதிப்பை யாழ்ப்பாணத்தில் தொடங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிபர் ராஜபட்சவின் உத்தரவின்படி இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ தமிழ் நாளிதழான "தினகரன்" யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரவுள்ளது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.யாழ்ப்பாணத்தில், அடுத்த மாதம் 2-ம் தேதி முதல் "தினகரன்" நாளிதழ் வெளியாகும் என்றும் அந்த இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.யாழ்ப்பாணத்தில் இருந்து தினக்குரல், தினமுரசு, வலம்புரி, உதயன் ஆகிய நான்கு நாளிதழ்கள் ஏற்கெனவே வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக