திருச்சி, பிப்.14: மறைந்த எழுத்தாளர் விந்தன் நினைவாக சிறுகதைப் போட்டி ஒன்றை திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது.போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் அரசியல் தவிர்த்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வழிகாட்டும் வகையான, சாதாரண மக்களுக்கு, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, குழந்தைகளுக்கு நற்பண்புகளையும், நம்பிக்கையும் தோற்றுவிக்கும் வகையான கருத்துகளைக் கருவாகக் கொண்டு ஏ-4 அளவு தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமல் அமைந்திருக்க வேண்டும். கதைகள் இதுவரை பிரசுரிக்கப்படாத, சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.தேர்வு பெறும் சிறந்த சிறுகதைகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். சிறுகதைகளை, வை.ஜவஹர் ஆறுமுகம், தலைவர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம், 2/97, கிருஷ்ணமூர்த்தி நகர், திருச்சி-21 என்ற முகவரிக்கு 2011, மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக