computer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
computer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 நவம்பர், 2012

மீச்சிறு கணிணி அறிமுகம்

"ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி' அறிமுகம்

புதுதில்லி: குறைந்த விலை, "ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி' டில்லியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம், ஐபேட் என்ற பெயரில், "டேப்ளட் பிசி'யை (சிறிய அளவிலான பர்சனல் கம்ப்யூட்டர்) அறிமுகம் செய்தது. குறைந்தபட்சம், 27 ஆயிரம் ரூபாய் முதல், விலை கொண்டுள்ள அந்த சிறிய கம்ப்யூட்டரைப் போலவே, "டேட்டாவிண்ட்' என்ற இந்திய தனியார் நிறுவனம், "ஆகாஷ் - 1' என்ற பெயரில், டேப்ளட் பிசியை தயாரித்தது. அதற்கு, துவக்கத்தில், அதிகபட்சம், 3,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.முதற்கட்டமாக, 2011, அக்டோபரில், 20 ஆயிரம் டேப்ளட் பிசிக்கள், ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. மும்பை ஐ.ஐ.டி., மற்றும் சி - டி.ஏ.சி., என்ற மத்திய அரசின் நிறுவனங்கள் இணைந்து, "ஆகாஷ் டேப்ளட் பிசி' தயாரிப்பில் இறங்கின.ஆனாலும், சில தொழில்நுட்ப கோளாறுகளால், "ஆகாஷ் - 1 டேப்ளட் பிசி', மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், "ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி' அறிமுக நிகழ்ச்சி, டில்லியில் நேற்று நடந்தது. 2,700 ரூபாய் விலை கொண்ட, "ஆகாஷ் டேப்ளட் பிசி'களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு, பத்திரிகையாளர்களை சந்தித்த, "டேட்டாவிண்ட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுனில் துலி கூறியதாவது:எங்களிடம் இருந்து, "ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி'யை, மத்திய அரசு, 2,263 ரூபாய்க்கு வாங்குகிறது. அதை, 50 சதவீத விலை குறைப்பில், 1,130 ரூபாய்க்கு, மாணவர்களுக்கு வழங்குகிறது. இந்த விலையையும் குறைத்து, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு வழங்கப்படுமானால், இலவசமாகவே, மாணவர்களை ஆகாஷ் சென்றடையும்.இன்னும், நான்கைந்து ஆண்டுகளில், நாட்டில் உள்ள, 22 கோடி உயர்கல்வி மாணவர்களுக்கும், ஆகாஷ் வழங்கப்பட்டுவிடும். நாளை (இன்று), 20 ஆயிரம் டேப்ளட் பிசிகள் மத்திய அரசிடம் வழங்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி, லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டது. ஒரு, கிகா ஹெர்ட்ஸ் புராசசர், 512 எம்.பி., ராம், ஏழு அங்குல திரை போன்ற அம்சங்களை கொண்டது.
-தினமலர்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கணித் தட்டச்சசு முறைக்கு எவ்விசைப்பலகை தேவை?


தமிழ் 99  என்பது தேவையற்ற ஒன்று. (தமிழில் தட்டச்சிடத் தெரியாதவர்களுக்குத் தொடக்க நிலையில் உதவலாம்.) தட்டச்சு முறையில்  விரல் பயன்பாட்டிற்கு ஏற்ப விசைப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதே முறையில்தான் கணிணி விசைப்பலகையும் இருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கில் தட்டச்சு வெற்றியாளர்களை உருவாக்கிக் கொண்டு அதற்கு முரணான கணி விசைப்பலகையைப்பயன்படுத்த வேண்டும் என்பது  உளவியலுக்கும் மூளை வளர்ச்சிக்கும் எதிரானது.  பயன்பாட்டு நடைமுறையை உணராமல் அறிவிக்கப்படும் தமிழ் 99 என்பதும்  வேறு வணிகர்களுக்கு நன்மை தரக்கூடியதே. எனவே, புதிய தட்டச்சு முறை, முந்தைய தட்டச்சு முறை,  பரிந்துரைக்கப்படும் தமிழ் ௯௯ முறை என எவ்வகையிலும் தட்டச்சிடலாம் எனத் தற்பொழுது இருக்கும் நடைமுறையே தொடரலாம். எழுத்துருக்களும் சீருரு ( யூனிகோடு) என்றெல்லாம் வரையறுக்காமல்  குறிப்பிடத் தகுந்த எழுத்துருக்களில் எதைப் பயன்படுத்தினாலும் அனைவரும் அறியும் வண்ணம் கணியமைப்பை உருவாக்க வேண்டும். தட்டச்சு நிறுவனங்கள் அனைத்தும் கணித்தட்டச்சு பயிற்றுவிக்கப்படும் வகையில் உரிய தேர்வு முறை மாற்றங்கள் தேவை.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

தமிழில் கணினியைப் பயன்படுத்த, பொதுவான எழுத்துருக்களும், விசைப்பலகையும் வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மறுபுறம், இவற்றை தயாரித்து, அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டும், அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழ் 99: கணினிகள் பயன்பாட்டுக்கு வந்தபோது, தமிழில் எழுத்துருக்கள் இல்லை. ஆங்கிலத்தில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. தனியார் பதிப்பகங்களும், ஏடுகளும், தங்கள் பயன்பாட்டிற்காக, தமிழ் எழுத்துருக்களையும், அதற்கான விசைப் பலகைகளையும் உருவாக்கினர். ஆனால், ஒருவர் உருவாக்கிய முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை, மற்றொருவர், சிறப்பு மென்பொருட்களின் உதவி இல்லாமல் பார்க்க இயலவில்லை. இது, பொறியியல் ரீதியாக ஒவ்வுமை இல்லாதல் எனக் குறிக்கப்படுகிறது. இதே முயற்சியில், தமிழக அரசும் ஈடுபட்டது. அதன் விளைவாக, "தமிழ் 99' என்ற விசைப்பலகை முறையும், அதற்கான எழுத்துருவும் உருவாக்கப்பட்டது. இது, உலகம் எங்கும் ஏற்கப்பட்டு உள்ள ஒருங்குறி (யுனிகோட்) முறையில் தயாரிக்கப்பட்டது என்பதால், தகவல் பரிமாற்றத்திற்கு உகந்ததாக உள்ளது. அதாவது, இதை வைத்து தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் இணைய தளங்களை, உலகில் எந்த பகுதியில் இருந்தும், சிறப்பு மென்பொருட்களின் உதவி இல்லாமல், ஆங்கிலத்தைப் பார்ப்பது போலவே பார்க்கலாம். "தமிழ் 99' முறையை, தமிழக அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டும் என, ஜூலை 1999ல், அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தில் இல்லை: ஆனால், அரசு அலுவலகங்களில், இந்த முறை, இதுவரை பயன்பாட்டுக்கே வரவில்லை. இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ""அரசுப் பணிகளுக்காக, "தமிழ் 99' பயன்படுத்துவது பற்றிய அரசு ஆணை இருப்பதே, பெரும்பாலான அரசு அலுவலர்களுக்கு தெரியாது. தனியார் எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்,'' என்கிறார். அரசு துறைகளிலும் சரி, மக்கள் பயன்பாட்டுக்கும் சரி, "தமிழ் 99' இதுவரை கொண்டு சேர்க்கப்படவில்லை. ஆனால், மலேசியாவில், "தமிழ் 99' அரசு மற்றும் தனியார் பயன்பாட்டிற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளில், அதிகாரப்பூர்வமாக, "தமிழ் 99' அமல்படுத்தப்பட்டுள்ளது.

தயக்கம் ஏன்? தமிழகத்திலோ, தமிழ் கணினி பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் மாநாடுகளை நடத்துதல்; சிறப்புக் குழுக்களை அமைத்தல்; தமிழ் கணினி எழுத்துரு மற்றும் விசைப்பலகையை உருவாக்க ஆய்வுகளை ஊக்குவிக்க நிதி அளித்தல் என, தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம், தமிழக அரசு, நிதி மட்டும் செலவழித்த வண்ணம் உள்ளது. அரசு துறைகளில், "தமிழ் 99' முறையை அமல்படுத்தினால் தான், அது தனியார் பயன்பாட்டிற்கும் பரவும். தற்போது பொதுவான முறை இல்லாததால், தமிழ் விசைப்பலகை கூட எளிதில் கிடைப்பதில்லை. பொதுவான முறை ஏற்கப்பட்டு, பரவலாக்கப்பட்டால், பல பெரிய தனியார் நிறுவனங்கள் கூட, தமிழில் மென்பொருட்கள் தயாரிக்க முன் வருவர். தமிழில் உள்ள இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலைபேசிகள் முதலான மின்னணு சாதனங்கள், தமிழிலேயே இயங்க வழி பிறக்கும். இவ்வளவு நன்மைகள் இருந்தும், அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது, வெவ்வேறு முறைகளால் ஏற்படும் ஒவ்வுமை பிரச்னையை வைத்து, லாபம் பார்க்கும் சில தனியாருக்காக எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கணினி தமிழ் அறிஞர்கள் கூறும்போது, "தமிழ் விசைப்பலகை மற்றும் எழுத்துரு முறைகளில், தனியார் கொடிகட்டிப் பறக்கின்றனர். இந்த நிலையில், "தமிழ் 99' மட்டுமே, தமிழின் பொதுவான எழுத்துரு; இதை மட்டுமே பன்படுத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டால், தற்போது கொடிகட்டிப் பறக்கும் தனியாரின் வியாபாரம் நின்று விடும். இதனால் தான், "தமிழ் 99' பொதுவானது என அறிவிக்க, அரசு தயக்கம் காட்டி வருகிறது' என்கிறார். இந்த நிலை நீடித்தால், எந்த காலத்திலும், தமிழுக்கு பொதுவான விசைப்பலகை மற்றும் எழுத்துரு முறையை கொண்டு வர முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆங்கிலம் படித்தவர்கள் தான், கணினியைப் பயன்படுத்தி சம்பாதிக்கலாம் என்ற நிலையை மாற்றி, தமிழர்களின் நலன் காக்க, தன் 13 ஆண்டு உறக்கத்தில் இருந்து, அரசு விழிக்குமா?
கல்வி கழகத்தின் செயல்பாடு: தமிழ் இணைய கல்விக் கழகத்தில், தமிழ் மென்பொருட்களை மேம்படுத்த, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மென்பொருள் மேம்பாட்டுக்காக, தகவல் தொழில்நுட்பத் துறை மூலம், தனி நிதியத்தையும் அரசு உருவாக்கியுள்ளது. இந்த நிதியத்துக்கு, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. மென்பொருள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, தமிழ் இணைய கல்விக் கழகம் நிதி உதவி பெற, அரசு அனுமதி அளித்து வருகிறது. இதுவரை, 17 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 12 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன; ஐந்து திட்டங்கள் நடந்து வருகின்றன. முடிக்கப்பட்ட திட்டங்கள், தமிழ் இணைய கல்விக் கழக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் வெளியிடப்பட்டு, இலவச பதிவிறக்கத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சனி, 31 மார்ச், 2012

Elephant handling computer: கணிணியைக் கையாளும் யானை

கணிணியைக் கையாளும் யானை

தினேஷ் கார்த்திக்
-  நட்பு இணைய இதழ் : பதிவு செய்த நாள் : 30/03/2012

இன்றைய தொழில் நுட்பம் என்பது அனைவரையும் கவர்ந்தது என்பதை விட அனைத்து உயிரினங்களையும் கவர்ந்திருகிறது என்பது தான் உண்மை ஏனெனில் இங்கே பாருங்கள் ஒரு யானை என்ன மோகத்தில் என்ன பண்ணுகிறது என்று இலத்திரனியல் பொருளொன்றை மிகவும் எளிதாகக் கையாள்வதற்கு நீண்ட நாள் அனுபவம் வேண்டும். ஆனால் யானை ஒன்று இலத்திரனியற் பொருளான notebook மோகம் பிடித்தது போல் அதனைக் கையாள்கின்றது. அதாவது Samsung நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Noteஐ தனது தும்பிக்கை கொண்டு தனது உருவத்தை வரைவதுடன் அதில் காணப்படும் பியானோ, ட்ரம்ஸ் என்பவற்றையும் மிகவும் எளிதாக கையாள்கின்றது.
இக்காணொளிகள் Samsung Galaxy Note-ன் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
0

புதன், 2 நவம்பர், 2011

இலவசத் தமிழ்க்கணினிப் பயிற்சிப் பட்டறை

இலவசத் தமிழ்க்கணினிப் பயிற்சிப் பட்டறை

பதிவு செய்த நாள் : 02/11/2011



இலவசத் தமிழ்க்கணினிப் பயிற்சிப் பட்டறை
நாள்; 12.11.2011 (சனிக்கிழமை)
நேரம் : காலை மணி 10
இடம் : சாஃப்ட்வியூ மீடியா கல்லூரி
117, 2வது மாடி, நெல்சன்மாணிக்கம் சாலை,
மேத்தா நகர், சென்னை – 600 029.


மா.ஆண்டோ பீட்டர்
தலைவர்
கணித்தமிழ்ச் சங்கம்
வலைப்பூ: http://antopeter.blogspot.com
இணையம்: www.kanithamizh.in

ஞாயிறு, 22 மே, 2011

computer operating by eye movements :விழி அசைவுக்கு ஏற்பச் செயல்படும் கணினி

பாராட்டுகள். செப்பமான முறையி்ல் குறைவான கட்டணத்தில் இவ்வகைக் கணிணிகள் கிடைக்கவும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசே மிகக் குறைந்த சலுகை விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


விழி அசைவுக்கு ஏற்ப செயல்படும் கணினி

First Published : 22 May 2011 03:16:55 AM IST


திருவண்ணாமலை, மே 21: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவிகள், விழி அசைவுக்கு ஏற்பட செயல்படும் கணினியை வடிவமைத்துள்ளனர்.அருணை பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பின் நிறைவாக புதிய கண்டுபிடிப்புகளை வடிவமைத்து சமர்ப்பிக்கின்றனர். அதற்கு ஏற்ப அவர்களுக்கு மதிப்பெண்களும் தரப்படுகின்றன. மேலும் சிறந்த வடிவமைப்புகள் தேசிய அறிவியல் மாநாட்டுக்கும், இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்துக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு கணினியை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதைக் களையும் வகையில் அருணை பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு இறுதி ஆண்டு மாணவிகள் சோ.கெüரி பிரியா, ஜீ.ஜீவிதா, ரா.மிரோஷினி ஆகியோர் 4 மாதங்கள் கடும் முயற்சியில் கண்களாலேயே கட்டுப்படுத்தப்படும் கணினியை வடிவமைத்துள்ளனர். கணினியின் மெüஸ் கருவியை இயக்குவதில் சிரமம் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இக் கண்டுபிடிப்பு உதவும்.இதுதொடர்பாக அம்மாணவிகள் கூறியதாவது: எங்கள் துறை பேராசிரியர்கள் உதவியோடு இக்கணினியை வடிவமைத்துள்ளோம். கண் மற்றும் முக அசைவைக் கொண்டு (முக அசைவில் குறிப்பாக மூக்கு) இயங்கும் வகையில் இக்கணினி உருவாக்கப்பட்டது. இத்தகைய அசைவுகளை மின்திரையில் பதிவு செய்து அதற்கேற்ப கணினி இயங்குகிறது. மேலும் வலது கண் சிமிட்டல் மூலம் வலது புறமும், இடது கண் சிமிட்டல் மூலம் இடதுபுறமும் மெüஸ் கர்ஸர் இயக்கப்படுகிறது.கைகள் செயலிழந்த மாற்றுத் திறனாளிகள் தங்களை கண்கள் மூலம் கணினிகளை இயக்கி தங்கள் கட்டளைகளை நிறைவேற்றலாம். இந்த கணினி வடிவமைக்க எங்களுக்கு ரூ.18 ஆயிரம் செலவானது. அதிகளவில் தயாரித்தால் தயாரிப்புச் செலவு குறையும் வாய்ப்புள்ளது என்றனர்.இதேபோல் தனிப்பட்ட அடையாள எண் முறையில் மனிதர்களை வானொலி அதிர்வெண் மூலம் சான்றளிக்கும் முறை, தடைகள் மற்றும் போக்குவரத்து இயக்கத்தை கண்டறியும் பார்வையற்றோர் கைத்தடி, வளாகத்தின் உள்ளே செல்போனை கண்டுபிடிக்கும் கருவி, வாகனம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கருவி, வாகன விபத்து உயிர்காக்கும் திட்டம் போன்றவற்றையும் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

புதன், 28 ஜூலை, 2010

அரசு அலுவலகங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சர் பூங்கோதை

சென்னை, ஜூலை 27: தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு  தமிழகத்திலுள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் விரைவில் கணினிமயமாக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மின் ஆளுமை குறித்த "சிஇடிஐடி' இரண்டு நாள் (ஜூலை 27, 28) மாநாடும் கண்காட்சியும் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.தமிழக மின் ஆளுமைத்துறை, எல்காட் நிறுவனங்களுடன் இந்தியத் தொழில் வர்த்தக கூட்டமைப்பு (ஃபிக்கி) இணைந்து நடத்தும் இந்த இரண்டாவது மாநாட்டை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகத்தை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்துள்ளது. புறாக்கள் மூலம் தூது, ஓலை, முரசு, கடிதம், தொலைபேசி, மொபைல் ஃபோன், இண்டர்நெட், மெயில் என தகவல் தொடர்புத்துறை அபரிமிதமான வளர்ச்சியை  எட்டியுள்ளது.இந்தியாவைப் பொருத்தவரை அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை அளித்து வருவதில் தமிழகம்தான் முன்னோடியாகத் திகழ்கிறது. பின்தங்கிய கிராமங்களிலும் கணினி மூலம் மின் ஆளுமை வசதியைக் கொண்டு வருவதில் தமிழக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. கல்வி, மின் வாரியம், ரயில்வே, போக்குவரத்து, வருவாய், பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதன்முதலாக தமிழகத்தில்தான் கணினிமயமாக்கப்பட்டன. கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்காக மிகக் குறுகிய காலத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகளைத் தயார் செய்தது தகவல் தொழில்நுட்பத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது.தமிழகத்தில் "இ-டிஸ்ட்ரிக்ட்' (கணினிமய மாவட்டம்) திட்டத்தின் மூலம் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வருவாய்த்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவை கணினிமயமாக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தினை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி கோவையில் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் அரசின் திட்டங்களும் சலுகைகளும் மக்களை விரைவில் சென்றடையும்.படித்த, மேல் தட்டு மக்களைத் தாண்டி சமூகத்தின் எல்லா தரப்பினரையும் சென்றடைந்து, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்துவதில்தான் தகவல் தொழில்நுட்பத்தின் உண்மையான வளர்ச்சியைக் காண முடியும் என்றார்.இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு விரைவில் கணினிமயமாக்கப்படும் என்றார்.மாநாட்டில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் www.itintn.com என்ற இணைய தளத்தையும் EC​Z​I​TE  என்ற மாதாந்திர இ-பேப்பரையும் அமைச்சர் பூங்கோதை அறிமுகப்படுத்தினார்.தமிழக தகவல் தொழில்நுட்பத்துறையின் முதன்மைச் செயலர் டேவிதார், எல்காட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் சந்தோஷ்பாபு, காக்னிஸன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மேலாண்மைத் தலைவர் லட்சுமி நாராயணன், ஃபிக்கி அமைப்பின் தலைவர் ரஃபீக் அஹமது, அதன் ஆலோசகர் முராரி உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கருத்துக்கள்

பாராட்டப்பட வேண்டிய திட்டம். ஆனால், கணிணியில் தமிழை முழுமையாகப் 
பயன்படுத்தலாம் என்னும் உணர்வின்றிக் கணிணி இருக்குமிடமெல்லாம் ஆங்கிலமே ஆட்சி செய்கின்றது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கூடத் தமிழில் விவரத்தைத் தந்து ஆங்கிலத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்னும் கொடுமையை அரங்கேற்றியிருந்தார்கள். 
எனவே,தமிழ் சிறிதளவும் புறக்கணிக்கப்படாமல் கணிணியை அறிமுகப்படுத்த வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/28/2010 5:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்