மீண்டும் தமிழீழப் போர் தொடரும்: இயக்குநர் புகழேந்தி தங்கராசு!
மீனகம் பதியப்பட்ட நாள்May 16th, 2012 நேரம்: 10:40
எங்கள்
தலைவர் அவர்கள் எங்கோஒரு மூலையில் நம்பிக்கை நெருப்பாக எங்களுடன்
இருந்துகொண்டிருக்கின்றார்கள் மீண்டும் விடுதலைக்கான போர் தொடரும் என்று
முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவுகருத்தின்போது இயக்குனர் புகழேந்தி
தெரிவித்துள்ளார்.
எவ்வளவு பெரிய இன அழிவிற்கு இந்தியா துணை போயிருக்கிறது அதனை தடுத்து நிறுத்த முடியாது
ஊமைகளாய் குருடர்களாய் இருந்து கொண்டு வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையில் இருந்துகொண்டு ஒவ்வொரு வார்த்தைகளை நாம் உச்சரிக்கவேண்டியதாக இருக்கின்றது.
ஊமைகளாய் குருடர்களாய் இருந்து கொண்டு வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையில் இருந்துகொண்டு ஒவ்வொரு வார்த்தைகளை நாம் உச்சரிக்கவேண்டியதாக இருக்கின்றது.
மிகப்பெரிய கொடுமை தமிழ்நாட்டு
தமிழர்களின் மௌனம் ஏழுஅரை கோடி தமிழர்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில்
ஒன்றரைக்கோடி தமிழர்கள் நடுத்தெருவில் நின்றிருந்தால் எங்கள் சொந்தங்கள்
கொல்லப்பட்டதை தடுத்திருக்க முடியும்.
எத்தனை விடுலைப்போராட்டம் அப்படி ஒரு விடுதலைப்போராட்டத்தினை இந்த உலகு எங்காவது கண்டதுண்டா பிரபாகரன் என்கின்ற உன்னதமான தலைமையின் கீழ் தோழர்கள் நடத்திய வீரம்செறிந்த அந்த போரினை நினைத்துபார்க்க மெய்சிலிர்க்கின்றது.

ஒரு அறம் சார்ந்த போர் ஒரு வரையறுத்து
போரினை நடத்தினார்கள் ஒரு அறம் சார்ந்த போரினை நடத்திய அந்த மாவீரர்களை
எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தினார்கள்.என்று இயக்குனர் புகழேந்தி
தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக