வெள்ளி, 18 மே, 2012

உணவை மீதி வைத்தால் தண்டத் தொகை

இது போட்டியாகும். உரூபாய்௧௪௦௦ அளவிலான கட்டணத்தைச் செலுத்திவிட்டு யார் மிகுதியாக உண்கிறார்கள் என்னும் போட்டி. பெயரளவிற்குப் போட்டியில் பங்கேற்று  உணவுப்பொருளை வீணாக்க்க்கூடாது என்பதற்காக ஒறுப்புத் தொகை விதிக்கிறார்கள்.  இதுவே நானறிந்த செய்தி.செய்தியை முழுமையாக அறிந்து உண்மையான தகவலை வெளியிட வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /




லண்டன், மே.18: பிரிட்டனில் சீன ஹோட்டல்களில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட பின்னர் உணவுகளை மீதம் வைத்துச் சென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பிரிட்டனில் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியில் சீன ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் சாப்பிட்ட தட்டில் உணவு பொருட்களை மீதம் வைத்தால் அவர்களுக்கு 20 பவுண்டு வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.முன்னதாக இந்த ஹோட்டல் சர்வர்கள் சாப்பிட வருபவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்து விடுகின்றனர். சாப்பாட்டை மீதம் வைத்தால் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி சாப்பிட்ட தட்டில் உணவை வீணாக்குபவர்களுக்கு உணவு கட்டணத்துடன் அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. சாப்பாடு பிடிக்காமல் மீதம் வைத்த பலரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதால், அவர்கள் இந்த ஹோட்டல் நிர்வாகத்தை திட்டி விட்டு செல்கின்றனர்.
 
இங்கிலாந்தில் அதிக உணவு சாப்பிடும் போட்டி: மிச்சம் வைத்தால் அபராதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக