சொல்கிறார்கள்
மரங்கள் மட்டுமே ஆறுதல்:
தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டிருக்கும் ஜெனட் எக்னேஷ்வரன்: சிறுவயதில் இருந்தே மரம், செடி, கொடி என்றால் எனக்கு உயிர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், நானும் என் கணவரும் வாடகை வீட்டில் இருந்த போது, தோட்டம் போடக்கூடாது என, வீட்டு உரிமையாளர் கறாராகக் கூறிவிட்டார். அப்போதே, தோட்டம் போடுவதற்காகவே, வீடு கட்ட வேண்டும், என எண்ணினேன். அன்று இருந்த பொருளாதார சூழ்நிலையால், வீடு கட்ட முடியவில்லை. அதனால், எனக்குப் பிடித்த தோட்டக் கலை பற்றி படித்து, வேலைக்குப் போய் சம்பாதித்தேன்.நானும், என் கணவரும் கடுமையாக உழைத்து, இரண்டே ஆண்டில் சொந்த வீடு கட்டிவிட்டோம். கடந்த 2005ல் என் கணவர் இறந்தபோது, நான் வளர்த்த செடிகளும், கொடிகளும் மட்டுமே எனக்கு ஆறுதலாய் இருந்தன. நான் மன வேதனையில் இருந்த அந்த நாட்களில் தான் தெருவெங்கும், நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற ஆசையில், 2006ம் ஆண்டு, "ட்ரீ பார் ப்ரீ' என் அமைப்பை உருவாக்கினேன். தனி மனிஷியாக ஆரம்பித்த இந்த அமைப்பு, நிறைய நண்பர்களாலும், சமூக ஆர்வலர்களாலும், வலுப்பெற்று, இன்று பெங்களூரு முழுவதும் 35 ஆயிரத்து 415 மரங்களை நட்டிருக்கிறோம்.இயற்கை வேளாண்மைக் கழகம் அறிவுறுத்தும் மரங்களையும், இயற்கை உரங்களையும் மட்டுமே பயன்படுத்தினேன். கன்றை நடுவதுடன் சிறந்த முறையில் பராமரித்தேன். இதனால், எங்களின் தெருவே, பூஞ்சோலையாக மாறியுள்ளது. இதைப் பார்த்து, பக்கத்து தெருக்களிலும், மரம் நடுமாறு கேட்டு, எனக்கு உதவியாக பலர் இணைந்தனர். என்னுடைய இந்த சேவையைப் பார்த்து, தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், சாத்தூர் ஆகிய ஊர்களிலும் அழைப்பு வர, அங்கும், 2,550 கன்றுகள் நட்டிருக்கிறோம். என் உழைப்பையும், விடாமுயற்சியையும் கவனித்த பெங்களூரு மாநகராட்சி, நாங்கள் நட்ட மரங்களின் பராமரிப்பை ஏற்றுக்கொண்டுவிட்டது. இது, என் சமூக அக்கறைக்கு கிடைத்த வெற்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக