நினைவு கூர்தல் என்றால் நினைவில் கொள்ளுதல் என்று பொருள். நினைவு கூறுதல் என்றால் நினைவைச் சொல்லுதல் என்று பொருள். நினைவு கூரவோம் என்றே பதாகைகளில் இருக்க வேண்டும். நற்பணியாற்றும் பண்பாட்டு நடுவம் இனி வருங்காலங்களில் திருத்திக் கொள்ளட்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
மே 18 தமிழினப் படுகொலை நாள் பற்றி சென்னை மக்களிடம் இளைஞர்கள் பரப்புரை. (படங்கள்)
மீனகம் பதியப்பட்ட நாள்May 13th, 2012 நேரம்: 23:17
தமிழர்
பண்பாட்டு நடுவம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மே 18 நாள் குறித்து பொது
மக்களிடம் கருது கேட்க முடிவு செய்து சென்னை மெரீனா கடற்கரைக்கு சென்று
மக்களிடம் இந்த நாளை பற்றி கருத்து கேட்பதோடு ,
இது குறித்து பிரச்சாரம் செய்தனர். இது குறித்து தமிழர் பண்பாட்டு நடுவத்தின் அறிக்கை வருமாறு:
தமிழனத்தை கருவறுத்த நாள் மே 18 . 2009
ஆம் இலங்கை அரசால் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொன்று ஒழிக்கப்பட்ட நாள்
இந்நாளை தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத நாள். ஆனால் எத்தனை
தமிழர்களுக்கு அது தெரியும். அதை அறிவதற்கு மெரீனா கடற்கரைக்கு தமிழர்
பண்பாட்டு நடுவத்தின் தோழர்கர்களும் , தமிழ் உணர்வாளர்களும் சென்று மே 18
நாளை பற்றி தமிழர்கள் என்ன நினைகிறார்கள் என கேட்டோம். தெரிந்தவர்களுக்கு
பாராட்டுக்கள். தெரியாதவர்களுக்கு துண்டறிக்கை கொடுத்து மே 18 தினத்தின்
முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினோம்.இந்த இனப் படுகொலை தினத்தில்
தமிழ் மக்கள் எந்த வகையிலாவது நினைவஞ்சலி செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்
கொண்டோம் . அன்று நடக்கும் நிகழ்வுகளுக்கு சென்று கலந்து கொள்ள வேண்டும் என
கேட்டுக் கொண்டோம் . வர முடியாதவர்கள் தங்கள் இல்லத்தில் ஒரு
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என அறிவுறிதினோம். பலரும்
நிச்சயம் அஞ்சலி செலுத்துவோம் என வாக்குறுதி கொடுத்தனர்.
தமிழர்கள் எப்படி மற்ற பண்டிகைகளை
மறக்காமல் இருக்கிறார்களோ, அவ்வாறு தமிழர்கள் அனைவரும் இந்த நாளை தமிழ்
தேசிய துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்பதற்கு இந்த விழிப்புணர்வு
பிரச்சாரம் மேற்கொண்டோம். நல்ல வெற்றியும் கிடைத்தது . பலரும் நம்மை
பாராட்டினார்கள். பலரும் இந்த நாளை நிச்சயம் நினைவு கூறுவோம் என்று பதாதை
ஏந்தி படம் எடுக்க அனுமதியும் கொடுத்தனர்.
இனி வரும் காலங்களின் மே 18 தமிழகமெங்கும்
அனுசரிக்கப் படும். இந்த நாளை உலகத் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் துக்க
நாளாக அனுசரிக்க உள்ளனர். நியூயார்க் ஐ நா சபை கட்டிடத்தின் முன்னே,
அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில்,, கனடா , லண்டன், ஐரோப்பா நகரங்களில்
ஆஸ்திரேலியா, சுவிசர்லாந்து, மற்றும் இந்தியாவிலும் பல நகரங்களில் இந்த
நாள் அனுசரிக்கப் படுகிறது.
தமிழக தமிழர்கள் அவர்கள் இல்லங்களில் ஒளி
ஏந்தி இந்த நாளில் உயிரிழந்த சொந்தங்களுக்கு நினைவஞ்சலி செய்தல் வேண்டும்.
வெளியே ஏதாவது நினைவஞ்சலி கூடம் இருந்தாலும் அங்கு செல்ல வேண்டும். மத
வழிபாட்டிற்கு செல்பவர்கள் இந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்தல் வேண்டும்.
கருப்பு நிற சட்டையோ, அல்லது கருப்பு குறியீடுகளையோ அணியவேண்டும்.
இல்லங்களில் உள்ள அனைவரும் குடும்பமாக அஞ்சலி செய்தல் வேண்டும், களிப்பு,
சுப காரியங்கள் முதலியவற்றை இந்நாளில் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்
கொள்கிறோம்.
சென்னையில் உலகத் தமிழ் அமைப்பின் சார்பாக
மே 18 ஆம் தேதி அன்று தி நகரில் உள்ள செ.தெ. நாயகம் பள்ளியில் மாலை 5
மணிக்கு தமிழினப் படுகொலைக்கு நினைவஞ்சலி கூட்டம் நடக்கிறது. இனப்படுகொலையை
நினைவு கூறும் வகையில் நாட்டியம், நடனம், பாடல்கள், உரை, மெழுகுவர்த்தி
ஒளி ஏந்தல் போன்ற நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. சென்னையில் உள்ளவர்கள்
இதில் கலந்து கொண்டு தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும்
கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக