திங்கள், 14 மே, 2012

தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல்

தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல் – மே 18 ஆம் தேதி சென்னையில் கூடுவோம்

may 18 profile1
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் நாளில், பல்லாயிரம் அப்பாவித் தமிழர்கள் தமிழீழத்தில் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டார்கள். 21ம் நூற்றாண்டின் மிக பெரிய இனப்படுகொலையாக இது கருதப்படுகிறது. இந்த இனப்படுகொலையில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என தமிழன மக்கள் ஈவிரக்கமின்றி அழித்து ஒழிக்கப்பட்டார்கள். இன்று வரை இதற்கான நியாயம் கிடைக்காமல், அனைத்தையும் இழந்த இனமாக தமிழினம் இலங்கை அரசிடம் சிறைபட்டு இருக்கிறது.
உலகெங்கும் எட்டுக்கோடித் தமிழர்கள் இருந்தும் இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தமுடியவில்லை. இன்றும் இனப்படுகொலைக்கான நீதிகேட்டு பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க ஒற்றை குரலில் நமது கோரிக்கையை வெளிப்படுத்தக்கூட முடியவில்லை. தமிழ்ச் சமூகம் எங்குமே செல்வாக்கு இன்றியும் தத்தம் நாடுகளில் வாழும் சக குடிகளுக்கு இணையான அந்தஸ்து இன்றியும் இரண்டாந்தர குடிமக்களாக வாழ்வதாக அறியப்படுகிறது. இந்த நிலை மாற தமிழகத் தமிழர்கள் போர்சமயத்தில் மெளனமாய் அழுதது போலல்லாமல் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடுதல் அவசியமாகும்.
தமிழீழ தமிழர்கள் தங்கள் நாட்டை தங்கள் மக்களை தாங்களே ஆளும் வகையில் சுதந்திர தமிழீழ தேசத்தை கட்டியெழுப்ப தமிழர்களாகிய நாம் எல்லா வகையிலும் பாடுபடவேண்டும். அதற்கு அடித்தளமாய் தமிழக தமிழர்களாகிய நாம் ஒன்றினைந்து படுகொலை செய்யப்பட்ட அந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். இந்தப் இனப்படுகொலை போரில் உயிரழிந்த மக்களின் நினைவேந்தலுக்காக மே18 அன்று தியாகராயர் நகர் வெங்கட்நாராயணா தெருவில் உள்ள செ.த.நாயகம் பள்ளி மைதானத்தில் மாலை 5 மணிக்கு ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்துவோம்.
நிகழ்ச்சி நிரல்
மாலை
5.00 : ஒன்றுகூடல்
5.10 : நினைவேந்தல் பாடல்
5.30 : நினைவேந்தல் நடனம்
6.15 : நினைவேந்தல் உரை
6.30 : நினைவு ஒளியேந்தல்
7.00 : நிகழ்ச்சி நிறைவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக