கொடுமையிலும் கொடுமை. தமிழ் வழிக் கல்விக்கூடங்களைத் தரமானவையாக ஆக்காமல் ஆங்கிலவழிக் கல்வியைத் திணித்து மாணாக்கர்களிடம் தாழ்வு மனப்பாலன்மையை உண்டாக்கி, வாழ்வது தமிழால் என்றாலும் வீழ்த்துவதும் தமிழைத்தான் என நடந்து கொள்ளும் கல்வித்துறையும் அரசியல்வாதிகளும் உடனே திருந்தட்டும்! அறிஞர்களும் அறிவியலாளர்களும் உருவாக அன்னைத் தமிழ் மொழி வழியிலேயே அனைத்துக் கல்விக்கூடங்களும் இயங்க வகை செய்யட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
தினமலர் பதிவு செய்த நாள் : மே 14,2012,00:48 IST
வரும் கல்வியாண்டில், 320 பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில்,
தலா இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் துவக்க, பள்ளிகளை தேர்வு செய்யும் பணி
நடந்து வருகிறது.
அறிவிப்பு:பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் சிவபதி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில், வரும் கல்வியாண்டு முதல், ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், தலா இரண்டு ஆங்கிலவழிப் பிரிவு வகுப்புகள் துவங்கப்படும். முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவு வகுப்புகள் துவக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெற்றது.பணி தீவிரம்:இன்னும், 15 நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள், தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் தீவிரமாக நடந்து வருகின்றன.தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஐந்து பள்ளிகள்; பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள ஐந்து பள்ளிகள் என, ஒவ்வொரு மாவட்டத்திற்குமான 10 பள்ளிகள், தேர்வு செய்யப்படுகின்றன.ஓரிரு நாளில் தயார்:எந்தெந்த பள்ளிகளை தேர்வு செய்வது என, இரு துறைகளை சேர்ந்த

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக