சனி, 1 அக்டோபர், 2011

சர்வேந்திர சில்வா வீட்டுக் கதவை தட்டிய தமிழர்கள்

சர்வேந்திர சில்வா வீட்டுக் கதவை தட்டிய தமிழர்கள் : 

அதிர்ச்சியில் சர்வேந்திர சில்வா!

வெள்ளிக்கிழமை, 30 புரட்டாசி 2011.
savendra-sillva-america-30-09-11
சமீபத்தில் அமெரிக்காவில் தங்கியுள்ள சர்வேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டமை யாவரும் அறிந்ததே. 58ம் படைக்கு தளபதியாக இவர் இருந்த கால கட்டத்தில் யுத்தக்குற்றங்கள் இழைத்தார் என இவர்மேல் வழக்கு தொடரப்பட்டு நஷ்ட ஈடும் கோரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு விடுத்த அழைப்பாணையின் பிரதியை சர்வேந்திர சில்வாவின் வீட்டிற்குச் சென்று சிலர் வழங்கியுள்ளனர். நியூயோர்க்கில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வசித்துவரும் அவர் வாசல்ஸ்தலதைத் தட்டி அங்கே இருந்த அவரது உதவியாளிடம் இந்த அழைப்பாணையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது. இதனை இவர் இனி மறுக்க முடியாது. காரணம் அனைத்தும் படமாக்கப்பட்டு அவை ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க சட்டத்துக்கு அமைவாக நீதிமன்றத்தால் வழங்கப்படும் சில அழைப்பாணை 120 நாட்களுக்கே செல்லுபடியாகும். அதனை 120 நாட்களுக்குள் குறிப்பிட்ட நபரின் கைகளில் சேர்க்கவேண்டும். அப்படி சேர்க்காவிட்டால் போட்ட வழக்கு காலாவதியாகிவிடும். எனவே சர்வேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கை தொடுத்த அலி பவுடா என்னும் வழக்கறிஞர் சாதூரியமான முறையில் இந்த அழைப்பாணையை சர்வேந்திர சில்வாவிடம் ஒப்படைத்துள்ளார். அதுமட்டுமல்லாது அதனை படமாக்கி ஆதாரத்தையும் திரட்டிவிட்டார். எனவே இனி நிச்சயமாக சர்வேந்திர சில்வா நீதிமன்ற வாசல் ஏறியே தீரவேண்டும்.  அது உறுதியாகிவிட்டது. இவ்வழக்கைத் தொடுக்க உலகத் தமிழர் பேரவை(GTF) வழக்கறிஞர் அலி பவுடாவுக்கு உறுதுணையாக நின்றமை பாரட்டத்தக்கவிடையமாகும்.

இதனையே செயல் திறன் என்று அழைப்பார்கள். அதை விடுத்து நான் வழக்கைப் போட்டு விட்டேன். போடப் போகிறேன் என்று கதை அளப்பதும் கண்ணாம்பூச்சி காட்டுவதையும் விடுத்து ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுவது நல்லது. ஆதாரங்களை தகுந்த முறையில் வெளியிடுவது நல்லது. அறிக்கையை மட்டும் விட்டு விட்டு செயல் திறன் இல்லாமல் இருக்கும் ஒரு சில அமைப்புகளைப் பற்றி நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தோம். அவர்களுக்கு இது நல்லதொரு முன் உதாரணமாக அமையும். தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு அதனை இதனைச் சொல்லி ஏமாற்றுவதை விடுத்து செயல்திறன்கொண்ட இனமாக நாம் மாறவேண்டும். உண்மையை எழுதினால் “பொய் கூறும் இனமாக எம்மைச் சித்தரிக்கவேண்டாம்” என கவிதைகளை பாடுகிறார்கள். கவிதை கட்டுரை எல்லாவற்றையும் ஒரு புறம் மூட்டை கட்டிவிட்டு 40,000 தமிழர்களைக் கொன்ற சிங்களதேச அரசியல்வாதிகளையும் இராணுவத்தையும் யுத்தக் குற்றக் கூண்டில் ஏற்ற அனைவரும் ஒன்றாக முயலுவோண்டும்.

 .

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக