சனி, 1 அக்டோபர், 2011

Anna University: அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைப்பு: அரசிதழ் வெளியீடு

ஆணை பிறப்பிக்கவுடன்தான் அரசிதழில் வெளியிடுவார்கள். இங்கே அரசிதழில் வெளியிட்டபின்பு  ஆணை பிறப்பிக்கப்படும் என உள்ளதே!. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!

அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைப்பு: 
அரசிதழ் வெளியீடு

First Published : 01 Oct 2011 02:59:46 PM IST


சென்னை, அக். 1: அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து, ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக உருவாக்கும் சட்டத் திருத்த அரசிதழ் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.இது அரசாணையாக வெளியிடப்பட்ட உடன், அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுவிடும்.கடந்த திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என 5 பல்கலைக்கழகங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் இந்த 5 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் கீழ் கொண்டுவரப்பட்டன.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், அதன் உறுப்புக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக் கலை மற்றும் திட்டக் கல்லூரி (எஸ்.ஏ.பி.) உள்ளிட்ட நான்கு கல்லூரிகள் மட்டும் இணைவு பெற்றிருந்தன.சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்தற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக அரசு அறிவித்தது.இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களாக பிரிக்கப்பட்டதால் கல்வித் தரம் குறைந்துவிட்டது. ஒவ்வொரு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் வெவ்வேறு பாடத் திட்டங்கள், பிற நடைமுறைகளை பின்பற்றுகின்றன. எனவே, பிரிக்கப்பட்ட 5 அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, மீண்டும் மூன்பிருந்ததுபோல் ஒரே சென்னை அண்ணா பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும் என அறிவித்தது.தொடர்ந்து இதற்கான சட்டத் திருத்த மசாதோவும் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இப்போது இந்த சட்டத் திருத்தம் அரசிதழாக வெளியிடப்பட்டுள்ளது.இது ஒரிரு நாள்களில் அரசாணையாக வெளியிடப்படும். அவ்வாறு அரசாணையாக வெளியிடப்பட்ட உடன், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு விடும். அன்றைய தினமே இந்த 5 அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள், இயக்குநர்கள் ஆகியோரும் பதவி இழந்துவிடுவர். இவர்கள் அனைவரும், அவரவர்களுடைய முந்தைய பணிக்கு சென்று விடுவர்.பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மட்டும் அவர்களுடைய பணியை தொடர்வர்.
கருத்துகள்

good for higher education. no corruption hereafter.
By muthu
10/1/2011 4:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக