First Published : 26 Sep 2011 10:14:55 AM IST
நியுயார்க், செப்.26: தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவுக்கு நியுயார்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது எனத் தெரிய வருகிறது.விடுதலைப்புலிகளின் தளபதியாக இருந்த ரமேஷின் மனைவி நியுயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிலேயே ராஜபட்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கர்னல் ரமேஷின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 -ம் தேதி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.ரமேஷின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே ராஜபட்ச மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ராஜபட்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அவர் அவசரமாக இலங்கை திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக