சரியான தகவல் தெரிவிக்கப்படவில்லை. தேவையற்ற அழைப்புகளை நிறுத்துவது முன்பே நடைமுறைக்கு வந்து விட்டது. இப்பொழுது ஒரு நாளைக்கு ஒருவர் ஓர் அலை பேசியில் இருந்து நூறு குறுந்தகவல் மட்டுமே அனுப்ப இயலும். அதற்கு மேல்தடை செய்யப்படும். நல்ல பொன்மொழிகளைப் பகிர்ந்து கொள்ள உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ள, இலக்கிய, கலை, பிற நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள எனப் பலவகையில் பயன்பட்டு வரும் குறுந்தகவல் தொண்டினைக் கட்டுப்படுத்தியிருப்பது கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கையாகும். இதை எதிர்த்துத் தினமணியில் ஆசிரியவுரை வர வேண்டும். தவறான செய்தி வரக்கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
First Published : 27 Sep 2011 12:03:05 PM IST
Last Updated : 27 Sep 2011 12:24:19 PM IST
புதுதில்லி, செப்.27: வாடிக்கையாளர்களுக்கு வரும் தேவையற்ற வணிக அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை தடுத்து நிறுத்துமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.மொபைல்போன் இணைப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விவரங்கள் என தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இந்த பிரச்சனையைத் தீர்க்க டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது. தேவையற்ற அழைப்புகளின் பதிவு என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ. 2. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று டிராய் எச்சரித்துள்ளது.
கருத்துகள்
START 0 என்பது "ஓ" என்று எடுத்து கொள்ளவா "பூஜியம்" என்று எடுத்து கொள்ளவா. வேற எழுத்தே கிடைக்க வில்லையா?
By manoharan
9/27/2011 2:18:00 PM
9/27/2011 2:18:00 PM
அப்பாடா விட்டதடா தொல்லை
By வே.காளீஸ்வரன்
9/27/2011 12:41:00 PM
9/27/2011 12:41:00 PM