ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

கவிஞர் வாலிக்கு எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது

கவிஞர் வாலிக்கு எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது

First Published : 25 Sep 2011 02:39:07 AM IST


எஸ்.வி. சண்முகம் கவிஞர் வாலி எம்.பி. இராமச்சந்திரன்
சென்னை, செப். 24: எம்.ஏ.சி. அறக்கொடை நிறுவனம் சார்பில் 2011-ம் ஆண்டுக்கான டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருதுக்கு கவிஞர் வாலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  எம்.ஏ. சிதம்பரம் அறக்கொடை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை அறக்கொடை அறிவித்துள்ளது.  டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது: தமிழ் இலக்கியம் மற்றும் மொழி பங்களிப்பில் சிறந்து விளங்கும் தமிழ் அறிஞர்களுக்கான டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது தமிழறிஞர் டாக்டர் எஸ்.வி. சண்முகத்துக்கு வழங்கப்பட உள்ளது.  டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது: நுண்கலைகளான சித்திரம், சிற்பம், இசை, நாடகம், நாட்டியம், படைப்பிலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது தமிழ் கவிதைத் துறையில் சிறந்து விளங்கும் கவிஞர் வாலிக்கு வழங்கப்பட உள்ளது.  டாக்டர் ஏ.சி. முத்தையா விருது: சிறந்த முதல் தலைமுறை தொழில் முனைவோராக சிறந்து விளங்கும் சாதனையாளருக்கான டாக்டர் ஏ.சி. முத்தையா விருது தொழிலதிபர் எம்.பி. ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட உள்ளது.  இந்த விருதுகள் டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியாரின் 93-வது பிறந்த நாளான அக்டோபர் 12-ல் ராஜா அண்ணாமலை மன்றத்தில் வழங்கப்படும். விருது பெறுவோருக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக