ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

தஞ்சாவூர் பொம்மை


தஞ்சாவூரு பொம்ம

சித்திரசேனன்.க
பதிவு செய்த நாள் : 23/09/2011


எனது நண்பன் செந்தில் ராசாவின் திருமணத்திற்குச் சென்றான் மாரிமுத்து. அவனை செந்தில் ராசாவின் பெற்றோர் வரவேற்று நன்றாக உபசரித்தனர். திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்ததும் பெற்றோர், உறவினர்கள் சூழ அமர்ந்திருந்த மணமக்களிடம், தான் கொண்டு சென்ற பரிசுப் பொருளைக் கொடுத்தான் மாணிக்கம். அதை ஆவலுடன் பிரித்த மணமகளுக்கு உள்ளே இருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அருகில் இருந்த ஒருவர் மணமகளிடம் “நீ சொல்றதுக்கெல்லாம் செந்தில் ராசாவும் இந்த பொம்மையைப் போலத்தான் தலையாட்டுவான்” என்றதும் இன்னும் சிரிப்பு அதிகமானது. எல்லோரும் சிரித்ததும் மணமகன் செந்தில்ராசாவுக்கு என்னவோ போல் இருந்தது. என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
நண்பனின் முகத்தைப் பார்த்து அவன் மனதை உணர்ந்த மாரிமுத்து, “என்ன தலையாட்டி பொம்மையை அவ்வளவு கேவலமாக சொல்லிட்டீங்க? இந்த பொம்மையை எப்படி கீழே தள்ளினாலும் எழுந்து நிற்கும். அதுபோல வாழ்க்கையில எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், இவனும் எழுந்து நிற்பான்” என்றான் பெருமையாக. இதைக் கேட்டதும் சுற்றியிருந்தவர்கள் வாயடைத்து நின்றனர். செந்தில் ராசா முகத்தில் மலர்ச்சி.
0

வாசகர் கருத்துகள் (1)
நன்று. கண்ணோட்டம்தான் கருத்தை முடிவு செய்கிறது. தலைகுனிவு தந்த தஞ்சாவூர் பொம்மை புதிய விளக்கத்தால் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார்திருவள்ளுவன் /எழுததைக் காப்போம்! மொழியைக்காப்போம்! இனத்தைக் காப்போம்! /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக