வெள்ளி, 30 செப்டம்பர், 2011

Boycott Srilanka : கனடாவில் சிறிலங்காவின் உல்லாச பயணத்துறைக் கண்காட்சியை எதிர்ப்போம்

கனடாவில் சிறிலங்காவின்

உல்லாச பயணத்துறைக் கண்காட்சியை எதிர்ப்போம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

பதிவு செய்த நாள் : 30/09/2011


சிறிலங்கா அரசினால் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Sri Lanka Travel Show எனும் உல்லாச பயண வர்த்தக கண்காட்சிக்கு எதிர்ப்பை காட்டுவதற்கு கனடிய தமிழர்களை தாயாராகுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஒக்ரோபர் 16-17 ஆகிய இருநாட்களுக்கு Mississaugaவில் உள்ள Living Arts Center416இல் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.
கண்காட்சி இடம்பெறும் இருநாட்களும் சிறிலங்காவின் தமிழின அழிப்பு முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் ‘சிறிலங்கா புறக்கணிப்பு போராட்டம்’ ஒன்று நா.த.அரசாங்கத்தின் கனடா-மக்கள் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரிதிநிதிகளால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
தமிழர்கள் மீதான போரின் வடுக்களையும் – வலிகளையும் மறைத்து, இலங்கைத்தீவை ஒரு உல்லாசபுரியாக, சர்வதேத்துக்கு காட்ட சிறிலங்கா அரசு முற்றபட்டு வருகின்றது.
வர்த்தக, பொருளாதார முதலீடுகளைக் பெருக்கவும், உல்லாசத்துறைக்கு வருவாயை ஈட்டவும்; சிறிலங்கா அரசாங்கத்தினால், இந்த உல்லாச பயண வர்த்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறிலங்கா தொடர்பில் தனது கடுமையான நிலைப்பாட்டை கனடிய அரசு எடுத்துள்ள இவ்வேளை, தமிழர்களாகிய நாங்கள் எமது பலமான எதிர்பை சிறிலங்கா அரசுக்கு காட்டுவோம்.
‘சிறிலங்கா புறக்கணிப்பு’ எனும் மக்கள் போராட்டம் ஊடாக கண்காட்சியில் பங்கெடுப்போருக்கு சிறிலங்கா குறித்து விழிப்பை ஏற்படுத்துவோம்.
கண்காட்சி நடைபெறும் இருநாட்களும் மக்கள் திரட்சியாக ஒன்றுதிரண்டு கொட்டொலிகள், பாதாதைகள் மூலம் எமது எதிர்ப்பபை காட்டுவதோடு துண்டுப்பிரசுரங்கள் கையேடுகள் மூலம் விழிப்பையும் ஏற்படுத்துவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக