ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

குமரி அனந்தன், கௌதம நீலாம்பரனுக்கு இலக்கியப் பரிசு

குமரி அனந்தன், கௌதம நீலாம்பரனுக்கு இலக்கியப் பரிசு

First Published : 25 Sep 2011 03:28:10 AM IST


சென்னை, செப். 24: குமரிஅனந்தன், கௌதம நீலாம்பரன் ஆகியோருக்கு 2011-ம் ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது."தினத்தந்தி' நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனாரின் பிறந்த நாளில் ஆண்டுதோறும் "மூத்த தமிழறிஞர்' விருது, இலக்கியப் பரிசு ஆகியவற்றை தினத்தந்தி வழங்கி வருகிறது.வெள்ளிப் பட்டயத்துடன் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்ட மூத்த தமிழறிஞர் விருது இந்த ஆண்டு குமரிஅனந்தனுக்கு வழங்கப்பட உள்ளது.ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு கொண்ட இலக்கியப் பரிசு "புத்தர் பிரான்' என்ற நூலுக்காக எழுத்தாளர் கௌதம நீலாம்பரனுக்கு வழங்கப்பட உள்ளது.சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் செப்டம்பர் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் சி.பா. ஆதித்தனாரின் பிறந்த நாள் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. திருவாசகம் இலக்கியப் பரிசுகளை வழங்குகிறார். தினத்தந்தி இயக்குநர் பா. சிவந்தி ஆதித்தன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக