<நடிகர் சிரஞ்ஜீத்> இவ்வாறு, மீண்டும் மீண்டும் தினமணி கிரந்தத்திணிப்பில் ஈடுபட்டு வருவது அதற்கு நல்லதல்ல.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அக்கட்சித் தலைவரும்,
கொல்கத்தா, மார்ச் 18: மேற்கு வங்க மாநிலத்தில், பேரவைத் தேர்தலுக்கான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை தன்னிச்சையாக வெளியிட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18 முதல் மே 10 வரை 6 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் இடதுசாரி கூட்டணியை வீழ்த்துவதற்காக இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸýம், திரிணமூல் காங்கிரஸýம் பேச்சு நடத்திவந்தன. 90-க்கும் அதிகமான தொகுதிகளை கோரிவந்த காங்கிரஸ், கடைசியாக குறைந்தபட்சம் 70 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், வெள்ளிக்கிழமை வரை எந்த முடிவும் எட்டப்படாததால் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 64 தொகுதிகளை காங்கிரஸýக்கும், 2 தொகுதிகளை மற்றொரு கூட்டணிக் கட்சியான எஸ்யூசிஐ-க்கும் ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 228 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மம்தா அறிவித்தார். திங்கள் வரை கெடு: பட்டியலை வெளியிட்டபின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒதுக்கப்பட்ட 64 தொகுதிகளுக்கு தனது வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்தால் மகிழ்ச்சி. இல்லையெனில் அந்த தொகுதிகளுக்கும் எங்கள் வேட்பாளர்களை திங்கள்கிழமை அறிவிப்போம். காங்கிரஸ் தலைவர்களுடன் வியாழக்கிழமை இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புக் கொண்டதன் அடிப்படையிலேயே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பேச்சு நடத்த மேலும் கால அவகாசம் கேட்பது சரியல்ல. வேட்பு மனு விண்ணப்பங்கள் கடைசித் தொகுதி வரை சென்று சேர வேண்டியுள்ளது. போதுமான அளவு காத்திருந்தாகிவிட்டது. காங்கிரஸ் தலைமை விரும்பியபோதெல்லாம் பேசியாகிவிட்டது என்றார் மம்தா. முக்கிய வேட்பாளர்கள்:ஜாதவ்பூர் தொகுதியில் முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யவுக்கு எதிராக முன்னாள் தலைமைச் செயலர் மனீஷ் குப்தாவும், கார்தாஹா தொகுதியில் மாநில நிதியமைச்சர் அசிம் தாஸ் குப்தாவுக்கு எதிராக ஃபிக்கி பொதுச் செயலர் அமித் மித்ராவும் திரிணமூல் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர நடிகை தேபஸ்ரீ ராய், நடிகர் சிரஞ்ஜீத், நாடக நடிகர் விரத்ய பாசு, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ரச்பால் சிங், சுல்தான் சிங், சாஃப்வி, அபானி ஜோர்தார், லாலு பிரசாத் மீதான தீவன ஊழல் வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் மண்டல இயக்குநர் உபேன் பிஸ்வாஸ் உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 2007-ல் ஹிந்து தொழிலதிபரின் மகளைத் திருமணம் செய்தபின் மர்மமான முறையில் இறந்த ரிஸ்வானூர் ரெஹ்மானின் சகோதரர் ருக்பானூர் ரெஹ்மானுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த 42 பேருக்கும், மகளிர் 34 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மம்தா போட்டியில்லை: இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்திருந்தார். திரிணமூல் ஆட்சியைப் பிடித்தால் 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆவேன் என்றும் அவர் அறிவித்திருந்தார். மேலிடம் முடிவு செய்யும்- காங்கிரஸ்: மம்தாவின் முடிவு குறித்து மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளர் ஷகீல் அகமது கூறியதாவது: திரிணமூல் ஒதுக்கியுள்ள 64 தொகுதிகளில் போட்டியிடுவதா அல்லது 294 தொகுதிகளிலும் போட்டியிடுவதா என்பது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவே விரும்புகிறோம். இரு கட்சிகளும் இணைந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக