பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு வகையில் தங்கள் அளவில் ஊழல்புரிபவர்களாகத்தான் உள்ளனர். ஊழலின் உறைவிடம் என்பதற்காகவோ கொள்ளைக்காரன் அல்லது கொலைகாரன் என்பதற்காகவோ ஒருவனுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற நிலையிலும் இல்லை. எல்லாத் தேர்தல் முடிவுகளும் இவற்றைத்தான் மெய்ப்பிக்கின்றன. இருப்பினும் ஊழலுக்கு எதிராகவும் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாகவும் வாக்காளர்களைத் திரட்டக் கடுமையாக உழைத்தால் மன நிறைவான வெற்றி காணலாம்.அணியில் நின்று வெற்றி காண்பதை விடத் தனியாய் நின்று தோல்வி கண்டாலும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறளுக்கு இணங்க அதுவே நன்று. தனித்திரு! விழித்திரு! வென்றிடு!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது. (குறள்772 )
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது. (குறள்772 )
சென்னை, மார்ச்.15: அதிமுக கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடு முடிவடையாத நிலையில் மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் மார்ச் 19-ம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கை: மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் மார்ச் 19-ம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 19-ம் தேதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கும் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெறும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
By க.வெங்கடேசன்
3/15/2011 12:41:00 PM
3/15/2011 12:41:00 PM
By balaji
3/15/2011 12:02:00 PM
3/15/2011 12:02:00 PM
By சார்லஸ் அந்தோனி
3/15/2011 12:01:00 PM
3/15/2011 12:01:00 PM