திங்கள், 14 மார்ச், 2011

Inida helps to Japan: சப்பானுக்கு இந்தியா உதவி

விரைந்து உதவுக! நிறைவாக உதவுக! அரசியல் நோக்கமின்றி உதவுக! உற்றுழி உதவுக! 
துயரத்துடன்
 இலக்குவனார் திருவள்ளுவன் 
/தமிழே விழி! தமிழா விழி! /

ஜப்பானுக்கு இந்தியா உதவி

First Published : 13 Mar 2011 02:18:50 PM IST


புதுதில்லி, மார்ச்.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கம்பளிப் போர்வைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை இந்தியா அளிக்க உள்ளது.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட செண்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான கம்பளிப் போர்வைகளுடன் இந்தியாவில் இருந்து முதல் விமானம் புறப்படத் தயாராக உள்ளது என வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.தில்லியில் உள்ள ஜப்பான் தூதருடன் இதுகுறித்து விவாதித்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குளிரைத் தாங்கக்கூடிய கம்பளிப்போர்வைகள் பயனுள்ளதாக இருக்கும் என நிருபமா கூறினார்.ஹரியானா, பஞ்சாப் அரசுகள் கம்பளிப்போர்வைகளை அளித்து உதவிவருவதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.நிருபமா ராவ் ஜப்பான் மக்களின் தேவைகள் தொடர்பாக இந்தியத் தூதரகத்துடனும், ஜப்பான் அதிகாரிகளுடனும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். அவர்களுக்கு சாத்தியமுள்ள அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படும் என வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஏற்பட்டு கடல்நீர் நிலப்பரப்புக்குள் புகுந்தது. சுனாமியால் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.மினாமிசன்ரிகு நகரில் சுமார் 10 ஆயிரம் பேரைக் காணவில்லை என்று அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக