தொலையட்டும் வஞ்சககர்கள்(துரோகிகள்)! மலரட்டும் மனித நேயம்! வெல்லட்டும் தமிழ் ஈழம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
First Published : 15 Mar 2011 02:56:23 PM IST
கொழும்பு, மார்ச் 15- இலங்கையில் அமைச்சர் கருணாவுக்கும் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெருமளவில் லஞ்சம், ஊழலில் ஈடுபட்டுள்ளதாக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கருணா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.இந்நிலையில், கருணாவுக்கு அரசியல் எதிர்காலமே கிடையாது. அப்படிப்பட்டவர் கூறிய கருத்துக்கு நான் பதில் தெரிவிக்க விரும்பவில்லை என்று பிள்ளையான தனது பிரசாரக் கூட்டங்களில் பேசி வருகிறார்.உள்ளாட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் அனைத்திலும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பேசி வருவதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக