புதன், 16 மார்ச், 2011

Sathiq basha, friend of A.Raja, expired: ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் சாவு

குற்றமற்றவர் என மெய்ப்பிக்க வழியில்லை. குற்றத்தை ஒப்புக்கொண்டால் - தொடர்புள்ள  பிறரால் - உயிர் வாழ வழியில்லை.  என்ற எண்ணத்தில் தற்கொலையை நாடியிருக்கலாம். அல்லது  இறந்த முறையைக் குடும்பத்தினர் மறைத்து இருக்கலாம். இருந்தாலும் ஆழந்த  இரங்கல்கள். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /

ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் சாவு
First Published : 16 Mar 2011 02:36:39 PM IST

Last Updated : 16 Mar 2011 04:38:24 PM IST

சென்னை, மார்ச்.16: தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா சென்னையில் இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். எனினும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.பிற்பகல் 1.30-க்கு இறந்த நிலையில் அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவர் தூக்கிட்டுக் கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். போலீசார் இதுவரை எதையும் உறுதிசெய்யவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.47 வயதான பாட்சா மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது இறந்திருந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.ராசாவுக்கு நெருக்கமானவரான பாட்சா, கிரீன்ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.முன்னதாக 2ஜி ஊழல் தொடர்பாக சாதிக் பாட்சாவிடம் சிபிஐ விசாரணை நடத்தி இருந்தது. 2ஜி ஊழல் தொடர்பாக பாட்சா முக்கிய துப்புகளை சிபிஐயிடம் வழங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.ஊழல் பணத்தில்தான் கிரீன்ஹவுஸ் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என சிபிஐ சந்தேகித்தது. ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்தவர் பாட்சா. அவரின் சென்னை அலுவலகங்களும், வீடுகளும் சிபிஐயால் கடந்த டிசம்பரில் சோதனையிடப்பட்டன.கிரீன்ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ராசாவின் மனைவி 2008-ல் ராஜிநாமா செய்துவிட்டார்.  எனினும் அவரது நெருங்கிய உறவினர்களான பரமேஷ்குமார் மற்றும் ராசாவின் சகோதரர் கலியபெருமாள் ஆகியோர் இயக்குநர்களாக பதவியில் நீடித்து வந்தனர்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் பதவிக்காலத்தின்போது ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்ற பின்னர் 2004 ஆகஸ்டில் கிரீன் ஹவுஸ் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.ராசா தொலைத்தொடர்பு அமைச்சரான பின்னர் 2007-ல் சிங்கப்பூரில் கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டது.வெளிநாட்டில் கிளை தொடங்கப்பட்டதில் அந்நிய நிதி மேலாண்மை சட்டமும், ரிசர்வ் வங்கி விதிமுறைகளும் பின்பற்றப்பட்டனவா என்பதை சிபிஐ விசாரித்தது. கிரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கும், அதன் சிங்கப்பூர் கிளைக்கும் நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தியது.ரூ 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் எப்படி 600 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்ட முடிந்தது என்பது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக