விடுதலை வேட்கையைத் தடுக்க பேரின அழிவுகளை இந்தியத் துணையுடன் ஏற்படுத்திய சிங்களத்தின் கொடுஞ் செயல் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவதே பொருத்தமாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
(அது சரி! அப்புறம் ஏன், இன்னும் போர் அபாயம் உள்ளதாகக் கூக்குரல் இடுகிறது.)
இலங்கை பாதுகாப்பு மாநாடு: அமெரிக்கா புறக்கணிப்பு?
First Published : 15 Mar 2011 02:31:27 PM IST
Last Updated : 15 Mar 2011 02:36:09 PM IST
கொழும்பு, மார்ச் 15- இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டை அமெரிக்கா புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன."பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவம்" என்ற தலைப்பில் மே 31-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் கொழும்பில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு 54 நாடுகளுக்கு இலங்கை அழைப்பு அனுப்பியது.இந்நிலையில், போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மறுத்துவரும் நிலையில், கொழும்பில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், ராணுவ நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற கொள்கையின்படி ஜப்பானும் கொழும்பு மாநாட்டில் பங்கேற்காது என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக