First Published : 13 Mar 2011 03:18:35 PM IST
Last Updated : 13 Mar 2011 03:21:46 PM IST
டோக்கியோ, மார்ச்.13: நிலநடுக்கம், சுனாமியால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஜப்பானின் வடகிழக்கு மியாகி பகுதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும் என போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.மியாகியில் இதுவரை 379 உயிரிழப்புகள் மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பலி எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் மேலாக இருக்கும் என மியாகி போலீஸ் தலைவர் மதிப்பிட்டுள்ளதாக போலீஸ் செய்தித்தொடர்பாளர் கோ சுகவாரா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக