திங்கள், 14 மார்ச், 2011

Tigers in ilangai investigation dept.? : இலங்கைப் புலனாய்வுத்துறையில் புலிகளின் தளபதிகள்?

கருணாக்கள் பலரை உருவாக்கச் சிங்களம் முயல்கிறது.  இவர்கள் மாறியதாக நடித்துச் சிங்களப் படையில் ஊடுருவி தமிழ் ஈழ வாகைக்கு உதவட்டும்! உண்மைக் கருணாக்கள் ஒழியட்டும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/தமிழே விழி! தமிழா விழி! /

இலங்கை புலனாய்வுத்துறையில் புலிகளின் தளபதிகள்?

First Published : 13 Mar 2011 02:56:43 PM IST


கொழும்பு, மார்ச் 13- விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் சிலர் இலங்கை அரசின் புலனாய்வுத்துறையில் விரைவில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.2009-ல் போரின் இறுதிக்கட்டத்தில் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் புலனாய்வுத்துறையில் சேர்க்கப்படவுள்ளதாகவும், ஒருசிலர் ஏற்கெனவே சேர்க்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."லங்கா கார்டியன்" என்னும் பத்திரிகையின் தகவலை மேற்கோள் காட்டி அந்த இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக