டோக்யோ, மார்ச் 12- ஜப்பானில் அணுஉலை இன்று வெடித்ததால் அந்நாட்டில் அணுசக்தி ஆபத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே, அந்நாட்டில் சுனாமிக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை ஜப்பானின் க்யோடா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.வடக்கு ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள முக்கிய அணுஉலை இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணியளவில் வெடித்தது. இதில், 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ஜப்பான் முழுவதும் அணுசக்தி ஆபத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கதிர்வீச்சு அபாயம் காரணமாக அணுமின் நிலையம் அருகே 10 கி.மீ. சுற்றளவில் வசித்து வந்த 45 ஆயிரம் பேர் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அணுஉலை குளிரூட்டப்படவில்லை. இதனால் அணுஉலையின் வெப்பம் அதிகரித்து வெடித்ததாக கூறப்படுகிறது. ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில், அணுஉலை உள்ள பிரதான கட்டடமும், வெளிப்புற சுவர்களும் முற்றிலும் சேதமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.முன்னதாக, இன்று காலை ஜப்பான் பிரதமர் நாடோ கன், ஹெலிகாப்டர் மூலம் அந்த அணுமின் நிலையத்தை பார்வையிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக