வியாழன், 29 ஜூலை, 2010

டாஸ்மாக் ஊழியர்கள் விரைவில் பணி நிரந்தரம்: முதல்வர் கருணாநிதி


சென்னை, ஜூலை 28: தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவது குறித்தும், பணி நிரந்தரம் கோரும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்தும் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.÷இதுகுறித்து, கேள்வி-பதில் வடிவில் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:÷டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.÷ஊழியர்களின் கோரிக்கைகளை மாத்திரமல்ல - மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகின்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுபற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்.÷பத்திரிகை ஆசிரியர் கைது: தினபூமி பத்திரிகை ஆசிரியரின் கைது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து, உடனடியாக காவல் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டேன்.÷என்ன காரணம் இருந்தாலும், உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் கூறினேன். அவர்களும் ஒருசில மணி நேரத்துக்குள் விடுவிக்கப்பட்டு விட்டனர். இது என்னுடைய நடைமுறை.÷எந்தவொரு பிரச்னை என்றாலும் மார்க்சிஸ்டுகள் தமிழக அரசைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள். அவர்கள் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் என்ன நிலை என்பதை அவர்கள் நினைத்தே பார்க்க மாட்டார்கள்.÷ஐ.நா.வின் சர்வதேச மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் இருபதாவது ஆண்டு நிறைவை ஒட்டி, வறுமை ஒழிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.÷இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாடு முனையத் திட்டத்துடன் இணைந்து பல்நோக்கு ஆய்வு நடத்தப்பட்டது.÷அதில், இந்தியாவில் 8 மாநிலங்கள் ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளை விட, அதிக அளவில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 42 கோடி மக்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மார்க்சிஸ்டுகள் உணர வேண்டும்.÷மத்திய அரசின் மானியமா? மத்திய அரசு மானியத்தில்தான் ஒரு ரூபாய் அரிசி வழங்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருக்கிறார். ÷மத்திய அரசு மானியத்தில்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால் அனைத்து மாநிலங்களிலுமே அதை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே? மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் வழங்கும் அரிசியைத்தான் நமது மாநிலத்துக்கும் அதே விலையில் வழங்குகிறது.÷ஆனால், தமிழக அரசு மட்டும்தான் இந்தியாவிலேயே ஒரு மாநிலமாக ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மேலும், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, இந்த ஆண்டு மட்டும் ரூ.3 ஆயிரத்து 750 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.  108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் கூட மத்திய அரசு அளித்து வருவதாகப் பேசியிருக்கிறார் இளங்கோவன். அதுவும் தவறான செய்திதான்.÷அந்தத் திட்டம் உலக வங்கியிடம் இருந்து நிதி கடனாகப் பெற்று செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான நடைமுறைச் செலவிலே ஒரு பகுதியை மட்டும்தான் மத்திய அரசு வழங்குகிறது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

தலைப்பு சரயில்லையே! மதுவிலக்கு மீண்டும் வரலாம் என்று கூடக் குறிப்பிட்டிருக்கலாம். 
அன்புடன் இலக்குவனார் 
                                               திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
7/29/2010 3:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக