சென்னை,ஜூலை 25: தொழில் ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லும் நடிகர்களை யாரும் தடுக்க கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை செல்லும் நடிகர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 58-வது பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அசின் உள்ளிட்ட சில நடிகைகளின் இலங்கை பயணம், திரைப்படங்களின் தோல்விகளுக்கு நடிகர்கள் பொறுப்பேற்பது குறித்த திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கை, படப்பிடிப்பு மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்காக இலங்கை செல்லும் நடிகர்களின் நிலைமை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துக் கொண்ட ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நடிகர், நடிகைகள் அசினின் இலங்கை பயணத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசினார்கள். இன உணர்வு இல்லாமல் இலங்கை சென்றுள்ள அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சிலர் வலியுறுத்தினார்கள். துணைத் தலைவர் மனோரமா, துணைச் செயலாளர்கள் காளை, கே.ஆர்.செல்வராஜ், நடிகர்கள் ஓய்.ஜி.மகேந்திரன், சார்லி, எஸ்.வி.சேகர், சீதா, நளினி, மும்தாஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் நடிகர்கள் இலங்கை செல்வதை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். திரைப்படத்தின் வர்த்தகத்தில் ஏற்படும் லாப, நஷ்டங்களுக்கு நடிகர்கள் பொறுப்பல்ல. நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல் இருப்பவர்கள் ஆகஸ்ட் 15-க்குள் உறுப்பினர் ஆக வேண்டும். திரைப்படங்களின் தோல்விகளுக்கு நடிகர்கள் நஷ்டஈடு தர முடியாது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/27/2010 3:32:00 AM
7/27/2010 3:32:00 AM
By தேசநேசன்
7/26/2010 8:27:00 PM
7/26/2010 8:27:00 PM
By Daniel
7/26/2010 6:51:00 PM
7/26/2010 6:51:00 PM
By Moorthi
7/26/2010 6:05:00 PM
7/26/2010 6:05:00 PM
By yakkubai
7/26/2010 6:03:00 PM
7/26/2010 6:03:00 PM
By வாடா மன்னாரு
7/26/2010 4:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 7/26/2010 4:56:00 AM