செவ்வாய், 27 ஜூலை, 2010

ஜெயலலிதாவுக்கு எதிராக ஆகஸ்ட் 4-ல் திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின்


சென்னை, ஜூலை 26: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக இளைஞர் அணி சார்பில் ஆகஸ்ட் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இதை துணை முதல்வரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்தார்."அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 13 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் தொடர்ந்து வாய்தா வாங்கப்பட்டு வருகிறது. மக்களைத் தொடர்ந்து அவமதித்து வரும் அவருடைய போக்கினை திமுக இளைஞர் அணி சுட்டிக் காட்ட விழைகிறது. இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.மாவட்ட இளைஞர் அணியின் அமைப்பாளர்கள் தலைமையிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்' என்று அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
கருத்துக்கள்

துணை முதல்வர் உடனடியாக இப்போராட்டத்தைக் கைவிட வேண்டும். அரசிற்கு எதிராக அல்லது ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் போராடுவது இயற்கை. எதிர்க்கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி போராடினால் 1) எதிர்க்கட்சியை ஆளுங்கட்சிக்கு இணையாகக் கருதுகிறீர்கள், 2) போட்டி அரசாங்கம் நடத்துவதாகக் கருதுகிறீர்க்ள, 3)நீதி மன்றத்தில் அரசு குறுக்கிடுகிறது, 4.) அரசு குறுக்கிட்டும் பயனின்மையால் ஆளுங் கட்சியினரை வைத்து மிரட்டுகிறது, 5.) அரசு கையாலாகாத அரசு, 6.) கட்சித் தொண்டர்கள் சோர்வில் உள்ளமையால் போராட்டம் தேவைப்படுகிறது என்றெல்லாம் பிறரை எண்ண வைத்து விடும். மேடைகளில் பேசுங்கள்! தவறல்ல!இதழ்களில் எழுதுங்கள்!பிழையல்ல! ஆப்பு என்னும் பெயரில் குறிப்பிட்டாற் போன்று மக்களிடம் அவருக்கு எதிராகப் பதிந்துள்ள எதிர் விளைவுகள் இருக்கும் பொழுது ஆளுங் கட்சி போராடுவது அழகல்ல! முறையல்ல! நன்றல்ல! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/27/2010 1:13:00 PM
விடுங்க. இதை கொஞ்சம் யோசியுங்கள். கிரமத்தில் தொடங்கி நகரம் தேசம் எங்கும் ஊழல். தெகல்க, பார்லிமேன்றில் கேள்விகேட்க ஊழல் , கத்தாமல் கொலை/ பாபர் மசூதி இடிப்பு/ கோத்ரா ரயில் எரிப்பு/ டான்சி/ சுடுகாடு/டிவி/ நில மோசடி/ அடம்பர திருமணம்/ கொடநாடு , ச்பெக்ட்றோம் -தொலைபேசி துறை ஊழல், வாட்டர் கேட் ஊழல், கோதுமை/ பூச்சி மருந்து ஊழல், போபார்ஸ் ஊழல். கிராம கர்ணம் முதல் டெல்லி வரை ஊழல். ரோடு போடுவதில் இருந்து அணை கட்டுவது வரை ஊழல். மக்களுக்கு பாதுகாப்பு தரும் காவல்துறை ஊழலில் நாறிபோச்சு. சாதரண மக்கள் ஒட்டு பொட காசு வாங்கி ஊழல் செய்கிறார்கள். இன்னும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டுமா தேசத்தை சுத்த படுத்த. ஆகஸ்ட் 11,2010 at 3 p.m மெரினா கடல் கரையில். லஞ்சம் எதிர்த்து ஒரு கால்நடை பயணம். வாருங்கள். தேசத்தை சுத்தமாக்க. மேலும் விவரம்களுக்கு.லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் . Visit. www.factindia.org . லஞ்சத்திற்கு எதிராக நல்ல பணிகள் செய்கிறோம் . ஒரு இயக்கமாக. இன்று இணயுங்கள். விவரம்களுக்கு கூப்பிடுங்கள் 9094024005/9094024005/9094024006/9884562812. Federation of Anticorruption Campaign India.
By T.Arulmony
7/27/2010 11:45:00 AM
NO BODY IS REPLYING TO APPHU
By SANEESWAR
7/27/2010 10:21:00 AM
If Stalin says that he is purer than the purest, he should subject himself to a public audit to show how he and his all family members could possess so much of wealth.Time will come for the law to take its own course.
By ankandasamy
7/27/2010 10:08:00 AM
Thirukuvalai jameen kudumbam solvathi tamil makkal appadiye nambuvanga
By paamaran
7/27/2010 9:59:00 AM
உன்னை விடச் சிறியவர்கள் ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குமாரசாமி இவங்க எல்லாம் முதல்வரா இருந்தும் நீ ஏன் முன்னேறாமயே இருக்கன்னு இப்பத் தெரியுது தம்பி.குடுகுடு கிழவனாய்ப் போனாலும் உன்னை உங்கப்பா முதல்வரா ஆக்க மாட்டாரு.. சொந்தமா யோசிக்கிறதே கிடையாது.அதிமுக ஸ்டைலிலேயே ஆர்ப்பாட்டம்..அடுத்துக் கண்டனப் பொதுக்கூட்டம். இப்படி போ...ஆட்சி மாறினதுக்கப்புறமா நாலாவது வரிசையில மூலையில இருக்கிற சீட்ல ஒக்காந்துக்கிட்டு சட்டசபை நடக்கறத வேடிக்கை பாரு..தளபதிங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத உன் கட்சிக்காரனுங்க வாழ்க கோஷம் போடுவானுங்க..
By லிங்கம்
7/27/2010 6:35:00 AM
JJ-வின் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக மக்களிடம் எடுத்துச்செல்லப்படும். சில சாம்பிள்கள். 1) கவர்னர் கையைப்பிடித்து இழுத்தார் என புகார் கூறியது. 2) முன்னாள் தேர்தல் கமிஷனர் சேசன் அவர்களை தாக்கியது 3) வக்கீல் விஜயனை கவனித்தது. 4) IAS சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீச்சு 5) MGR அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது ராஜீவ்காந்தியிடம் சென்று தம்மை முதல்வராக்க வேண்டியது. 6) ராஜீவ் அனுதாப அலையில் வெற்றியடைந்து விட்டு பின் தம்மால்தான் வெற்றியடைந்தோம் எனக்கூறியது. 7) தன் கையொப்பத்தையே இல்லையென்று நீதிமன்றத்தில் பொய்சொன்னது. 8) வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணம். 9) 1989-ல் தி.மு.க ஆட்சி கவிழ்ப்பு நாடகம். 10) தருமபுரி பஸ் எரிப்பில் மூன்று மாணவியரை கொளுத்தியது. 11) லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது. 12) தற்பெருமை, ஆத்திரம், ஆணவம் இவற்றின் மொத்த உருவம்.
By ஆப்பு
7/27/2010 6:32:00 AM
அறுபது வயசுல நீ இளைஞர் அணி தலைவனா இருக்க. இந்த கூத்த எங்க போய் சொல்றது. நீ உன் வாழ்க்கைல செஞ்ச ஒரே வேலை ஒரு பதினஞ்சி வருஷத்துக்கு முன்னாடி டிவி சீரியல்ல நடிச்ச. அதுக்கு மிஞ்சி போனா உனக்கு ஒரு 500 ரூபா கெடச்சிருக்கும். நீ எப்படி இவ்வளவு கோடீஸ்வரனா இருக்க. உன் மகன் எப்படி இவ்வளவு கோடிகள கொட்டி படம் எடுக்குறான். இதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா போராட்டம் நடத்து. தெரியாம தான் கேக்குறேன் உன் குடும்பத்துக்கே சூடு சொரண எதுவுமே கெடயாதா....
By Bharath
7/27/2010 5:29:00 AM
அய்யா அம்மா மக்களே கேட்டுக்குங்க முதன் முதல மக்களின் நாளுக்காக இல்லாமல் , தமிழர் நலனுக்காவும் இல்லாமல், மீனவர் நலனுக்காகவும் இல்லாமல், இலங்கை தமிழர்காகவும் இல்லாமல் , தளபதி போராட்டம் பன்னபோறார் பாத்துக்குங்க இதெல்லாமே உரிமையை விட்டுகுடுக்ககுடதுன்னுதான் வேறே எதுக்கும் இல்லங்க தனது சொத்து குவியல்களை மக்கள் தெரிஞ்சிகிட்டாங்கலோன்னு ஒரு பயம் அதான் இப்படி இதனாலேயே முதன் முதலா ஆளும் கட்சி எதிர் கட்சிக்கு எதிர போராட்டம் செய்யபோறாங்க இது மக்களுக்காக இல்ல தயவு செஞ்சி தப்ப எடுத்துக்காதிங்க இது முற்றிலும் சொந்த நலனுக்காக மட்டும்தாங்க சொத்து நலனுக்கத்தான் இவனுங்க கொள்ள அடிச்சத மக்கள் மறக்கத்தான் ஜெய கோவைல பெசிட்டாங்கள்ள அதான் இங்க இவங்க
By அரசு
7/27/2010 2:08:00 AM
தேன் எடுத்த போது புறங்கையை ஆசைப் பட்டு நக்கிப் பார்த்தவனை ......தேனை குடம் குடமாக திருடி குடும்பத்துடன் சேர்ந்து குடித்துக் கொண்டிருப்பவன் குறை சொல்கிறான் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் !....தம்பி ஸ்டாலின் ....உன் அப்பன் "ஸ்டன்ட்டையே" ...மக்கள் பார்த்து சிரித்தவர்கள் ....உன் ஸ்டன்ட் எடுபடாதையா !!!..எடுபடாது !!!@ rajasji
By rajasji
7/27/2010 1:11:00 AM
ஜெயலலிதா குற்றம் சுமத்தப் பட்டவர் தான் !...குற்றவாளியல்ல !!!...வழக்கு சம்பந்தமாக வாய்தா கேட்பது ஜெயலலிதா அவர்களின் அடிப் படை உரிமை !!!...அதனைக் கொடுப்பதும் நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் தனிப்பட்ட முடிவு ! நீதி மன்றத்திற்குத் தெரியும் கொடுக்கலாமா? வேண்டாமா?-என்று ...இந்நிலையில் இவன் மந்திரியாக இருப்பதால் ...குண்டர்களை விட்டு நீதி மன்றத்தை மிரட்ட முயற்சிப்பது சட்ட விரோதமானது ! அனுமதிக்க ஜீரணிக்க முடியாதது ! கொஞ்சம் கூட பொது அறிவு சிறிதேனும் இன்றி மந்திரியானால் இப்படித்தான் சில ஜீவன்கள் அறியாமையால் கத்தும் !இப்படி ஏதேனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் ...இதற்க்கு நீதிமன்றம் அதன் நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் ! இந்த கிறுக்கன்கள இப்படியே விட்டா.... வயிற்ருப்போக்கு நோய் வந்தவன் அடிக்கடி கக்கூசுக்குப் போவதையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் பண்ணக் கெளம்பிடுவாங்க @ rajasji
By rajasji
7/27/2010 1:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக