கொழும்பு, ஜூலை 24: கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சிறைக் காவலர்கள் மற்றும் சிங்கள கைதிகள் சேர்ந்து இத்தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.இதுகுறித்த விவரம்: கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் மீது சிறைக் காவலர்கள் சனிக்கிழமை காலையில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு சிறையில் உள்ள மற்ற தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து சிறையில் உள்ள சிங்கள கைதிகள் அனைவரும் சேர்ந்து தமிழ் கைதிகள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் சிறைக்காவலர்கள் இதை தடுக்கவில்லை என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறை சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வுத் துறை அமைச்சர் டி.குணசேகர மற்றும் சிறைத் துறை ஆணையர் ஆகியோரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரியநேத்திரன், பொன் செல்வராசா ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
கருத்துக்கள்
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/26/2010 3:49:00 AM
7/26/2010 3:49:00 AM
By thamem
7/26/2010 2:47:00 AM
7/26/2010 2:47:00 AM
By indiANA
7/25/2010 8:04:00 PM
7/25/2010 8:04:00 PM
By naam tamilar
7/25/2010 4:52:00 PM
7/25/2010 4:52:00 PM
By naam tamilar
7/25/2010 4:50:00 PM
7/25/2010 4:50:00 PM
By naam tamilar
7/25/2010 4:49:00 PM
7/25/2010 4:49:00 PM
By thavam
7/25/2010 3:37:00 PM
7/25/2010 3:37:00 PM
By தங்கராஜன்
7/25/2010 2:43:00 PM
7/25/2010 2:43:00 PM
By தங்கராஜன்
7/25/2010 2:41:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 7/25/2010 2:41:00 PM