திங்கள், 26 ஜூலை, 2010

மத்திய அரசு மானியத்தில்தான் ஒரு ரூபாய் அரிசி: இளங்கோவன்
கம்பம்,ஜூலை 25: மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான், தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.தேனி மாவட்டம், சின்னமனூரில் காமராஜர் சிலையைத் திறந்துவைத்து, அவர் மேலும் பேசியதாவது:"காமராஜர் ஆட்சியில் கக்கன் உள்பட 5 அமைச்சர்கள் சுயநலமில்லாமல் உழைத்ததால்தான், திமுக உள்பட அனைத்துக் கட்சியினரும் காமராஜர் ஆட்சியை இன்றுவரை பெருமையாகப் பேசுகின்றனர். காமராஜர் தொழில்துறை அமைச்சராக இருந்தபோதுதான், தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் உருவாகின.இன்று ஆட்சியில் இருப்பவர்கள், தங்களது குடும்பத்தினரை எவ்வாறு ஆட்சிப்  பொறுப்புக்குக் கொண்டு வருவது என்பதில்தான், அதிக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். நான் பஞ்சாப் அரசியலை சொன்னேன், நீங்கள் எதாவது நினைத்தால் நான் பொறுப்பல்ல. காமராஜர் 10 ஆயிரம் நாள்கள் மக்களுக்காகச் சிறையில் இருந்துள்ளார்.இன்றைய ஆட்சியாளர்களைப் போல் மக்களுக்கு பணம் கொடுத்தாலோ, நிலம் கொடுத்தாலோ, பெண்களுக்கு நகை கொடுத்தாலோ ஆட்சி நிலைக்காது என்று  தெரிந்துதான் காமராஜர் கல்வியைத் தந்தார், மாணவர்களுக்குச் சீருடையும், மதிய  உணவையும் தந்தார். அப்போது,மதிய உணவுத் திட்டத்திற்கு பல எதிர்ப்புகளையும்  மீறி 100 கோடியில் திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், திட்டத்திற்கு மத்திய அரசு மானியம் ஒரு பைசா கூட வழங்கவில்லை.இன்று, தமிழக அரசின் 1 ரூபாய் ரேஷன் அரிசித் திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ. 7 மானியம் வழங்குகிறது. 108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் மத்திய அரசு  அளித்து வருகிறது. தமிழகத்தின் நகர்ப்பகுதிகளில் செல்லும் மிதவை பஸ், சொகுசு பஸ்கள் மத்திய அரசின் ஜெயபால் ரெட்டி வழங்கியது. ஆனால், இதுபோன்ற செய்திகள் மக்களைச் சென்றடையாமல் தடுக்கப்படுகின்றன.பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏறினால், அதை எப்படித் தக்கவைப்பது என தில்லி முதல்வரிடம் இடதுசாரிக் கட்சிகளும், பாஜகவும், பிற மாநிலக் கட்சிகளும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.காங்கிரஸ் கட்சி குடும்பப் பாசத்தைவிட நாட்டுப் பாசம் மிகுந்த கட்சி. சோனியாகாந்தி நினைத்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பார். அவரது மகன் ராகுல்காந்தி துணைப் பிரதமராகி விட முடியும். மகள் பிரியங்கா தில்லி முதல்வர் ஆகியிருக்கலாம். மருமகன் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஆகியிருக்க முடியும்.ஆனால், பதவிகளை விரும்பாத சோனியா, நாட்டின் மீது பாசமாக உள்ளார்.காங்கிரஸ் மீது அக்கறை உள்ளவர்களும், காங்கிரஸ் கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புபவர்களும் மதுரைக்கு ஜூலை 31-ம் தேதி வாருங்கள்' என்றார் இளங்கோவன்.
கருத்துக்கள்

பஞ்சாப்பில் பேச வேண்டியதைஇங்கு ஏன் பேச வேண்டும் கோவன்? துணிவிருந்தால் நேரடியாகத் தாக்கட்டுமே! மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் பொழுது தன் மகளைக் காங்.கட்சியின் தலைவராக நியமித்தது காங். ஆட்சிதானே! கட்சியில் குடும்பத்தினருக்குப் பதவி கொடுத்த முன்முறைக்கட்சி காங்.தானே! மத்திய அரசுதான் பணம் தருகின்றது என்றால் காங்.ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டியதுதானே! இன்றைய காங்.தலைவர்களும் அமைச்சர்களும் முந்தைய காங். தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் வழிமுறையினர்தானே! ஊழலை அறிமுகப்படுத்தியதும் நீதிமன்றத் தீர்ப்புகளை மிதித்ததும் காங்.தானே! தமிழ்நாட்டின் நிலப் பகுதியும் மொழி உரிமையும் பறிபோனதற்குக் காரணம் காங்.தானே! கட்சி அரசியலில் வன்முறையைப் புகுத்தியதும் காங்.தானே!இந்திய நிலப்பகுதியை அயலவரிடம் பறி கொடுத்ததும் காங்.தானே! தேர்தலில் பேரம் பேசும் கோவன் பேரம் படிந்ததும் முடங்கிக் கிடப்பார் என்பது தெரிந்த செய்திதானே! கோவனுக்கெல்லாம் மறுப்பு எழுத வேண்டியுள்ளதே என்ற வேதனையுடன் இலக்குவனார திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/26/2010 3:35:00 AM
soniya makal methu mukaoum anbaka ouilar athanal than tamil makal 2lakes kondar
By tamilan
7/25/2010 11:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக