வியாழன், 29 ஜூலை, 2010

பாலம் கல்யாணசுந்தரத்துக்கு விருது

சென்னை,ஜூலை 28: பாலம் கல்யாணசுந்தரத்துக்கு சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. அறவாணன் அறக்கட்டளையின் சார்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி லயோலா கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது வழங்கப்படும். தமிழிலும், தமிழ் பற்றி ஆங்கிலம் முதலான மொழிகளிலும் தொண்டாற்றியவர்களுக்கு அறவாணன் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, விருத்தாசலத்தில் திருக்குறளுக்கு என தனி நூலகம் அமைத்துள்ள பல்லடம் மாணிக்கம், "அறிக அறிவியல்' என்ற இதழை நடத்தி வரும் காரைக்குடி செக்ரி விஞ்ஞானி நோயல் ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
கருத்துக்கள்

தக்கவர்களுக்கு விருதுகள் வழங்கப் பெறுகின்றன.விருதாளர்களுக்கும் விருது வழங்குநருக்கும் பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/29/2010 4:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக