ஞாயிறு, 25 ஜூலை, 2010

சிறந்த ஆய்வறிஞர் அருளி நல்ல தமிழ்ச் சொற்களையும்  அயற்சொற்களாகக் காட்டியுள்ளார். சீர் என்னும் தமிழ்ச் சொல்லில்  இருந்தே சிரீ பிறந்தது. சீர் என்பது கடைக்குறையாகச் சீ என்றானது. சீர் (மிகு) தேவி சீ தேவி. சீமையைச் சேர்ந்தவன் சீமான்; சீமையைச் சேர்ந்தவள் சீமாட்டி. இவை யாவும் தமிழ்ச்  சொற்களே. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

1 கருத்து:

  1. வாய்ப்பு கிட்டினால் இதனை அறிஞர் அருளி அவர்களிடம் தாங்கள் கூறவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கொளத்தூர் மணி அவர்கள் சீமான் என்பது வடமொழிச் சொல் என்று அவர்களுக்குள் இருக்கும் அரசியல் வாதங்களில் வைக்க அதையே தாமரை போன்றோர்கள் பிடித்துக் கொண்டார்கள். தாமரை அவர்களும் வடமொழி என்று எழுத நான் மறுமொழியாக சீமான் என்பது தமிழ்ச்சொல்லே என்று சிறு கட்டுரை எழுதினேன். தமிழ்ச்சொல் என்பதனை பேராசிரியர் மறைமலை அவர்களும் பாவாணரை மேற்கோள் காட்டி அழுத்திச் சொன்னார்கள். வடமொழியை மறுப்பவர்களில் பலபேர்கள் வடமொழி எழுத்துக்களை தமிழில் கலந்து அடிக்கிறார்கள். ஆனால் நல்ல தமிழ்ச்சொற்களை வடமொழிச் சொற்கள் என்று கருதி தவிர்க்கிறார்கள் :-)

    நன்றி.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    பதிலளிநீக்கு