லண்டன், ஜூலை 25: நான்கு மாதக் கருவாக இருந்தபோதே தாயின் உயிரைக் காப்பாற்றி ஒரு குழந்தை சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியைச் சேர்ந்த சிட்கப் நகரைச் சேர்ந்தவர் கிளாரி (26). அழகுகலை நிபுணரான அவர் கருவுற்று 4 மாதங்களானபோது ரத்தப்போக்கு ஏற்பட்டது. தாய்மையின் பூரிப்பில் இருந்த அவர், கரு கலைந்து விட்டதாகக் கருதி சோகத்தில் மூழ்கினார். இதற்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றபோது, அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த தகவல்கள் வெளிவந்தன. அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதின் காரணம், வயிற்றில் வளர்ந்த புற்றுக் கட்டி என்பது தெரியவந்தது. அவரது கரு கலையவில்லை என்பதும், வயிற்றில் வளரும் 4 மாதக் குழந்தை எட்டி, எட்டி உதைத்ததில் புற்றுக் கட்டி உடைந்துள்ளது என்பதையும் டாக்டர்கள் கண்டறிந்தனர். கருவைக் கலைத்து புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கிளாரியிடம் டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால், கிளாரி அதனை ஏற்க மறுத்து விட்டார். 4 மாதக் குழந்தை எட்டி உதைக்கவில்லை என்றால் வயிற்றில் புற்றுக்கட்டி வளருவதை கண்டுபிடித்திருக்க முடியாது. எனது உயிரைக் காப்பாற்றிய என் குழந்தையை அழிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். புற்றுக் கட்டியை வளரவிட்டால், குழந்தை பிறக்கும்போது அவர் உயிர் பிழைப்பதற்கு 40 சதவீத வாய்ப்புகளே உள்ளது என்று டாக்டர்கள் கூறியும் கருவைக் கலைக்க கிளாரி சம்மதிக்கவில்லை.
கருத்துக்கள்
God Will Save both of you.Dont worry.
By Sankar
7/26/2010 3:17:00 PM
7/26/2010 3:17:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்