சனி, 31 ஜூலை, 2010

நாளை காங்கிரஸில் இணைகிறார் செல்வப்பெருந்தகை


சென்னை, ஜூலை 30: பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. காங்கிரஸில் இணைகிறார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில், மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கு. செல்வப்பெருந்தகை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சித் தலைவர் திருமாவளவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் (பி.எஸ்.பி.) இணைந்தார். பி.எஸ்.பி. மாநிலத் தலைவராக இருந்த அவர் சில வாரங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதற்காக அவர் தில்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான குலாம்நபி ஆசாத், ஜனார்த்தன் துவேதி, அகமது படேல் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.செல்வப்பெருந்தகை மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால் அவரை கட்சியில் சேர்க்க சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் விழாவில் ப. சிதம்பரம், குலாம்நபி ஆசாத், தங்கபாலு ஆகியோர் முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணையப் போவதாக சென்னையில் பல இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து தங்கபாலுவிடம் கேட்டபோது, செல்வப்பெருந்தகை காங்கிரஸில் இணைய இருப்பதை உறுதி செய்தார்.காங்கிரஸில் இணைவது குறித்து செல்வப்பெருந்தகை கூறியது:ஆகஸ்ட் 1-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் விழாவில், சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் உமா சாசவி, பி.எஸ்.பி.யின் 26  மாவட்டத் தலைவர்கள், மாநிலப் பொதுச்செயலாளர் தளபதி, பொருளாளர் கிருபானந்தம் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியில் இணைகிறேன். 1967-க்கு பிறகு எம்.எல்.ஏ. ஒருவர் காங்கிரஸில் இணைவது இதுதான் முதல் தடவை என்று கூறி தில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் என்னை வரவேற்றனர் என்றார்.
கருத்துக்கள்

பணம் கை மாறியிருக்குமே! ச.ம.உ. பதவியை உதற வேண்டியதுதானே! இடைத் தேர்தல் நடைபெற்றுத் தொகுதி மக்கள் பயனுறட்டுமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/31/2010 2:53:00 AM
கட்சி தாவல் தடை சட்டத்தை பயன்படுத்தி இந்த பரதேசியின் பதவியை பறிக்க முடியாதா?
By எழில்
7/31/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக