செவ்வாய், 27 ஜூலை, 2010


மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இலங்கை செல்கிறார் இந்திய அதிகாரி: கருணாநிதிக்கு மன்மோகன் கடிதம்


சென்னை, ஜூலை 26: இலங்கைத் தமிழர்களின் இப்போதைய நிலை, இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகள் ஆகியவை குறித்து அறிய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி இலங்கைக்குச் செல்ல உள்ளார்.÷இந்தத் தகவலை முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களின் இப்போதைய நிலை, போர் முடிந்த பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வுப் பணிகள், இந்தியா அளிக்கும் நிதி உதவி முறையாகச் செலவிடப்படுகிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள கண்காணிப்புக் குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார்.÷நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திலும் திமுக இதே கோரிக்கையை வலியுறுத்தியது.அந்தக் கூட்டத்தில் இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், "இலங்கைக்கு கண்காணிப்புக் குழு அனுப்பப்படும்' என்று தெரிவித்திருந்தார்.÷இந்த நிலையில், முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:÷இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவது குறித்து தாங்கள் எழுதிய கடிதத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்னையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு, பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது.÷இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுகிறார்.  அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்


இந்திய உதவி / கண்காணிப்பு குறித்துச் சிங்களத் தலைவர்கள் பேசுவதே இதன் பயனின்மையைக் காட்டும். ஏமாற்றம் இன்றி மாற்றத்தை விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/27/2010 2:49:00 AM
இதற்கு முன்பு சென்றவர்கள் போரை எவ்வாறு விரைவில் முடிவிற்குக் கொண்டு வருவது என வழி காட்டவும் உதவவும் சென்றார்கள். முடிவிற்குக் கொண்டு வருவது என்றால் போரை நிறுத்துவது என நாம எண்ணிக் கொ்ண்டிருந்தோம். மக்களைக் கொனறொழித்து நாட்டை எரிகாடாக்கவும் சுடுகாட்டாக்கவும் புதைகாடாக்கவும் உள்ள வழிமுறைகளைச் சொல்லி வன்படைகளும் எரிகுண்டுகளும் கொத்துக் குண்டுகளும் வழங்கி மக்கள் இல்லா நாட்டை உருவாக்குவது. அதில் வெற்றியும் கண்டாரகள். இப்பொழுது செல்பவர் எவ்வளவு விரைவில் தமிழ்ப் பகுதிகளைச் சிங்களப் பகுதிகளாக மாற்றுவது, கண்துடைப்பு ஏமாற்று வேலைகளை எவ்வாறு திறமையாகச் செய்வது, கொத்தடிமைகளாகவே எவ்வாறு நடத்துவது என வழிகாட்டச் சென்றார் எனில், யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் நிலைதான் இந்தியத்திற்கு ஏற்படும். குழு அனுப்புவதாகச் சொல்லிததனி மனிதரை அனுப்புவதில் இருந்தே இந்தியத்தின் சறுக்கல் புரிகிறது. தமிழ் நலனுக்கு எதிராதமிழரல்லாத அதிகாரியை அனுப்பி என்ன பயன்? சாதனையாகச் சொல்லி மக்களை ஏமாற்ற உதவுமே!அதிகாரமில்லாத தூதரக, உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்து என்ன பயன்? பக்சேவின் விருந்தும் பரிசும் கிடைக்குமே!
By Ilakkuvanar Thiruvalluvan
7/27/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Nandri Ilakkuvanar Thiruvalluvan, Very Nice Comments. Every Tamilian who Inspired by all your Comments,Well Done Keep It Up and Thanks a Lot to U. Once again Another Drama Comes to Stage as per the Idea of Our Foreign Policy Makers regarding Srilankan Tamils Issue. I am Sure no use for that Visit and Rajapakse never Care about this High Level Official (from EAM) visit to Monitor the Situation in the North East. This visit like Actress Asins Recent Visit arranged by Rajapakse to Kilinochi to Cheat the Tamils and the International Community. Our Tamilnadu CM do not believe this Gimmick by Our PM.
By G.Sakthivelu
7/27/2010 10:29:00 AM

MANMOHAN SINGH - He is the man who accepted that weapons were given to Srilanka for self defense. I do not know where in the world weapons are created for defense only that will not make any offense. He is the man who gave a red carpet welcome to a killer from Srilanka. He is the man who is silently watching the killing of Tamil and the Tamil fisher men. The great economist who promised to control the prices within 100 days of assuming office. A puppet in the hands of Congress with blood soaked hand symbol. A great actor. It is a pity that even after being great grand fathers some men lack humanity.
By karunakaran
7/27/2010 9:41:00 AM

Dear Chandren Thailand news can write any thing but u should think before u write, Who told u that tamils came to srilanka as refugees. normal educated person wont write this type of things. Chandren please consult the doctor immideatly.
By nagulan
7/27/2010 8:31:00 AM

உங்கள் நடவடிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கலைங்கறும் நீங்களும் சேர்ந்து சிங்களத்துக்கு உதவும் நடவடிக்கையாகவே எண்ணுகிறோம். இந்திய மிகப்பெரிய நாடு தமிழர்களை அழித்து இந்தியா வாழ்ந்து விட முடியாது. உண்மையில் தீவிரவாதிகள் உங்களையும் கலைன்கரையும் போன்றவர்கள் தான். கொடுரமான தீவிரவாதிகள் நீங்கள். ராஜபக்ஷே விரும்பினால் சென்னை நடிகர் சங்கத்தில் அசின்க்கு சாதகமாக தீர்மானம் போடா வைக்க முடிகிறது, இந்த கொடுமையை எத்தனை காலம் செய்வீர்கள். உங்களுக்கு பிள்ளை குட்டிகள் இல்லையா. உங்கள் குழந்தை ஒருவருடம் வதை முகாமில் இருந்தால் இப்படி செய்வீர்களா. எராளமான நல்ல DMK தலைவர்கள் கூட இலங்கை பிரச்சனையில் மிகவும் கவலையாகவும் கலைங்கர் மேல் வெறுப்பாகவும் இருக்கிறர்கள்.
By VIS
7/27/2010 7:29:00 AM

Tamils are historically refugees came to Sri Lanka from India. Later on they started crying to make their own country within Sri Lanka. So those countries who accept Tamils as refugees must watch out. They WILL turn back and demand a separate Tamil homeland in those countries. -Thailand news.
By Chandren
7/27/2010 6:36:00 AM

tamils are fools, their needs are small things like free tv, free food, etc. the rulers are very calculative and cunning, their goals are destruction of tamils and the election victory as long as tamils are not extinct.
By karthick
7/27/2010 6:22:00 AM

பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது.என்றால் எப்படி பிரச்னையை தீர்க்கப்போகிறது.செயல் வடிவம் ஏதாவது இருக்கிறதா. அப்படியாயின் இதனை பகிரங்கப்படுத்த வேண்டும் .அப்படி பகிரங்க படுத்த முடியாவிட்டால் 2011 சட்டமன்ற தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகமாகவே இருக்கும்.÷இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுகிறார்???
By பண்டார வன்னியன்
7/27/2010 3:09:00 AM

ஐயா மன்மதசிங்கு .கொலைஞ்யர் கருணாநிதி நீங்கள் அனுப்பிய அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளான மலையாள சிவசங்கர் மேனன்.நாராயணன் சிங்கள பூர்வீக இனமான‌ பிரனாப்முகர்ச்சி ஆகியோரை மூத்த அதிகாரிகள் என்று நியமித்து அனுப்பியபோது ஒரே ஒரு நாள் கூட யுத்த நிறுத்தம் செய்யும்படிம்படி கேட்கவில்லையாம் இதை இலங்கை பாராளமன்றத்தில் வைத்து சிங்களவன் கூறுகிறான். நீங்கள் கூட்டு சேர்ந்து தான் ஒரு இலட்சம் மக்களை கொன்று 12 இல‌ட்சம் மக்களை அகதியாக்கினீர்கள் ஒரு இலட்சத்தி பத்தாயிரம் பேர் ஊனப்படுத்தப்பட்டார்கள் . வடக்கு கிழக்கில் ஒரு இலட்சத்தி பத்தாயிரம் விதவைகள் உள்ளனர். அவர்கள் மேல் இலங்கை சிங்களபடையும் இந்திய துணைகுழுக்கள்
By பண்டார வன்னியன்
7/27/2010 3:08:00 AM

இந்திய துணைகுழுக்கள் பாலியல் வல்லுறவை சிறுவர் சிறுமிகள் முன் வெட்ட வெளியில் வைத்து பகிரங்கமாக மேற்கொள்ளுகிறார்கள். அதனை விடுத்து உங்களது கொலைகளை மறைப்பதற்கு ஊனமுற்றவர் சிகிட்சைக்காக இந்தியா வரும்போது அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி இலங்கையிடம் ஒப்படைக்கிறீர்கள். சர்வதேச நீதிமன்றத்தின் பிரதிநிதிகள் இவர்களை சந்தித்து விடுவார்களோ என்ற பயத்தில் ஈழ தமிழர் மேல் நீங்கள் செய்யும் கொடுமைகள் செல்லிமாழாதவை. எந்த ஒரு ஈழ தமிழனையும் இலங்கையை விட்டு வெளியேற முயாமல் ஆசிய உளவு கூட்டு சதிக்கு நீங்கள் தலமை தாங்குகிறீர்கள். இவளவு கொடுமைகளையும் தொடர்ச்சியாக புரிந்துகொண்டு ÷இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி எவரை அனுப்பபோகிறீர்கள். அப்படியாயின் இதற்குமுன் நீங்கள்.
By பண்டார வன்னியன்
7/27/2010 3:07:00 AM
எங்களவர் ஒரு கடிதம் எழுதுவாராம், பதிலுக்கு அவரும் ஒரு கடிதம் எழுதுவாராம். ரெண்டு பேரும் மாறி மாறி தமிழனின் காதில் கடுக்கண் குத்துங்க. எவனும் ஏதும் கேட்கமாட்டான். மதுரைக்காரன்
By மதுரைக்காரன்
7/27/2010 3:07:00 AM

வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை அராயவில்லையா. ஆராயமலா இவளவு பொதுமக்களை படுகொலை செய்தீர்கள். எவன் இந்தியாவில் ஆட்சி அமைத்தாலும் நந்திபோல் ஒட்டிக்கொள்ளும் சிதம்பரம் ஈழ தமிழன் ஈழத்தில் வந்தேறி குடிகள் என பாடசாலைபூராவும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளான், இவற்றுக்கான நிதியினை இலங்கை அமைச்சு காங்கிரஸ் முஸ்லீம் அமைச்சர் ஊடாக மாதாமாதம் வளங்குகிறதாம் .நிலமைகள் இப்படி இருக்கும் போது தமிழன் மேல் இந்தியாவுக்கு கரிசனைவருமா?? அல்லது தமிழன் தான் இந்தியாவை நம்ப முடியுமா? தமிழர்கள் இரு பெரும் தலைவர்களை சந்தித்துள்ளனர். ஒன்று பிரபாகரன் மற்றயது மகிந்த இராஜபக்ச. இவ்ர்களுடைய அரசியல் இராஜதந்திரத்தில் இந்தியாவுக்கு படுதோல்லி இதை வரலாறு என்றாவது ஒரு நாள் கூறும்.
By பண்டார வன்னியன்
7/27/2010 3:06:00 AM

மாலை மலர்

இலங்கை நிலவரத்தை ஆராய இந்திய அதிகாரி பயணம்


தினமலர்

வாசகர் கருத்து (6)
2010-07-27 06:00:02 IST
செல்வது யாரோ?காண்பது ஏதோ? சொல்வது எதுவோ? சொல்லிப் பயன் வருமோ? கொல்வது அரசாயிருக்க,வெல்வது நீதியாமோ? செல்பவர் காண, காண்பதைச் சொல்ல, சொல்வதை அறிந்து நன்மையைச் செய்ய, செய்வாய் இறைவா, வெல்வாய் தமிழா!...
ram - indian,இந்தியா
2010-07-27 05:23:01 IST
இதற்கு முன்பு சென்றார்கள். போரை நிறுத்துவது என நாம எண்ணிக் கொ்ண்டிருந்தோம். இப்பொழுது செல்பவர் எவ்வளவு விரைவில் தமிழ்ப் பகுதிகளைச் சிங்களப் பகுதிகளாக மாற்றுவது, என வழிகாட்டச் செல்பவர்,...
2010-07-27 04:32:29 IST
எனக்கே கடிதமா(வாய்தாவா) ? - கருணாநிதி,...
ilakkuvanar thiruvalluvan - mylapore,இந்தியா
2010-07-27 03:39:54 IST
இதற்கு முன்பு சென்றவர்கள் போரை எவ்வாறு விரைவில் முடிவிற்குக் கொண்டு வருவது என வழி காட்டவும் உதவவும் சென்றார்கள். முடிவிற்குக் கொண்டு வருவது என்றால் போரை நிறுத்துவது என நாம எண்ணிக் கொ்ண்டிருந்தோம். மக்களைக் கொனறொழித்து நாட்டை எரிகாடாக்கவும் சுடுகாட்டாக்கவும் புதைகாடாக்கவும் உள்ள வழிமுறைகளைச் சொல்லி வன்படைகளும் எரிகுண்டுகளும் கொத்துக் குண்டுகளும் வழங்கி மக்கள் இல்லா நாட்டை உருவாக்குவது. அதில் வெற்றியும் கண்டாரகள். இப்பொழுது செல்பவர் எவ்வளவு விரைவில் தமிழ்ப் பகுதிகளைச் சிங்களப் பகுதிகளாக மாற்றுவது, கண்துடைப்பு ஏமாற்று வேலைகளை எவ்வாறு திறமையாகச் செய்வது, கொத்தடிமைகளாகவே எவ்வாறு நடத்துவது என வழிகாட்டச் சென்றார் எனில், யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் நிலைதான் இந்தியத்திற்கு ஏற்படும். குழு அனுப்புவதாகச் சொல்லிததனி மனிதரை அனுப்புவதில் இருந்தே இந்தியத்தின் சறுக்கல் புரிகிறது. தமிழ் நலனுக்கு எதிராதமிழரல்லாத அதிகாரியை அனுப்பி என்ன பயன்? சாதனையாகச் சொல்லி மக்களை ஏமாற்ற உதவுமே!அதிகாரமில்லாத தூதரக, உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்து என்ன பயன்? பக்சேவின் விருந்தும் பரிசும் கிடைக்குமே! இந்திய உதவி / கண்காணிப்பு குறித்துச் சிங்களத் தலைவர்கள் பேசுவதே இதன் பயனின்மையைக் காட்டும். ஏமாற்றம் இன்றி மாற்றத்தை விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்...
மு.சதாசிவன். - Dubai,யூ.எஸ்.ஏ
2010-07-27 01:58:47 IST
கொல்லபடாமல் எத்தனை தமிழர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து சோனியாவுக்கு கொடுக்கவா? தமிழச்சிகளின் தாலி அறுத்த உங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு....
நாஞ்சிலான் - dammam,செனகல்
2010-07-27 01:14:43 IST
எதில்,எப்போது,எப்படி அரசியல் பண்ணனும் என்ற விவஸ்தையே கிடையாதா இவர்களுக்கு?அதிகாரி போய் எல்லாவற்றையும் சண்டாக்கி விட்டு தான் மறுஜோலி பார்ப்பார்!போய் ஆகிற காரியத்தை பாருங்க சார்!!... 
பாலா - nellai,இந்தியா
2010-07-27 21:29:49 IST
இந்த இரண்டு பெருசுகளுக்கும் தமிழன்னா இழக்காரமாய் போச்சி. உங்க ரெண்டுபேருக்கும் எங்களை குனியவச்சி கும்மி அடிக்கணும். நடத்துங்க உங்க கடித போக்குவரத்துகளை....
உண்மை விளம்பி - chennai,இந்தியா
2010-07-27 19:57:21 IST
காமெடி பீஸ்.......
மு.சதாசிவன். - Dubai,யூ.எஸ்.ஏ
2010-07-27 17:03:59 IST
ஐயா ஷாகுல் ஹமீது நம் நாட்டு மக்களையே நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் பிடியிலிருந்து காக்க துப்பில்லை உம் மன்மோஹனுக்கும், காங்கிரசுக்கும், இலங்கை தமிழர்களை காப்பாற்ற போகிறாராக்கும், தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும், சலுகை தருவதால் காங்கிரசுக்கு ஆதரவாக எதையும் எழுதி விடாதீர்கள். பாவம் மக்கள், பாவம் நம் பாதுகாப்பு படை வீரர்கள். உங்கள் வீட்டிலும் ஒரு பாதுகாப்பு படை வீரன் இருப்பதாக நினைத்து பார்த்து விட்டு எழுதுங்கள்....
தமிழ் - madurai,இந்தியா
2010-07-27 15:31:13 IST
ஐயா நீங்க அணைத்து அமைச்சர் களையும் கூட்டிட்டு இலங்கைக்கு போயிருங்க இந்தியாவாது தப்பிசுரும் !!...
பாவபட்டஜனம் - chennai,இந்தியா
2010-07-27 14:41:53 IST
முதல்வர் கடிதம் போட்டால் சும்மாதான்னு அர்த்தம்.முக்கியம் என்றால் அவர் டெல்லி சென்று விடுவார். பிரதமரும் சில காமெடி அறிக்கை விடுவார் அதுவும் சும்மா படம்தான். முட்டாள் ஜனங்க எல்லாம் முடிஞ்சா பிறகு அங்கே யாரை காபாதிறீங்க. ஜெய் ஹிந்த்...
Udayakumar - Abudhabi,இந்தியா
2010-07-27 14:16:12 IST
எலக்சன் வரும்போது மட்டும் இவனுக இப்படி எதாவது கத கட்டுவது மக்களுக்கு தெரியும்..இந்தியாவ சுடுகாடாக்குர வரைக்கும் இவனுக ஓய மாட்டாணுக.....
பாவபட்டஜனம் - chennai,இந்தியா
2010-07-27 13:54:41 IST
கலைஞர் சினிமா கதை அனுப்பினாலும் பிரதமர் ஆவன செய்வோம் என்று பதில் அனுப்புவார்.அவர் என்ன செய்வார். மேல கயறு ஆடும் வேகத்தில் ஆடுகிறார். எவ்வளவு காலமோ சுதந்திரம் எப்போது ஜெய் ஹிந்த்....
கோ.சக்திவேலு - RiyadhSaudiArabia,இந்தியா
2010-07-27 13:49:40 IST
நன்றி இலக்குவனார் திருவள்ளுவன், தொடரட்டும் உங்கள் இன உணர்வு பணி. இது போன்ற பல நாடகங்களை நாம் பார்த்து விட்டோம். இந்திய, இலங்கை கூட்டு சதிக்கு பல இலட்சம் ஈழ தமிழ் மறவர்களை பலிகொடுத்து விட்டோம். இன்னும் இந்திய அரசின் போக்கு மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதில் எந்த ஒரு உருப்படியான பலனும் ஏற்பட போவதில்லை....
ஜெய் - RasAlKhaimah,யூ.எஸ்.ஏ
2010-07-27 13:43:12 IST
இதை படித்ததும் எனக்கு ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருது......" காதருக்கிரத வேடிக்கை பார்த்துட்டு தண்டட்டி வாங்க சந்தைக்கு போனானாம் தாய்மாமன்".....சபாஷ் மன்மோகன் ஜி..!!...
Rakesh - Chennai,இந்தியா
2010-07-27 12:39:20 IST
வேண்டாம். நீங்கள் அசின், நாராயணன் போன்ற மலையாளியை உடனே அனுப்புங்கள். அவர் உடனே செய்தி அனுப்புவார்....
கார்தீசன் - jeddah,சவுதி அரேபியா
2010-07-27 12:04:16 IST
போய் நல்லா தின்னுட்டு தூங்கிட்டு வா??? சென்று வா மகனே!!!! தின்று வா மகனே!!!!...
சாகுல் ஹமீது - SALEM,இந்தியா
2010-07-27 11:29:46 IST
நண்பர் இலக்குவனார்,உங்களுக்கு நாட்டு இறையாண்மையில் நம்பிக்கை இல்லையா? இலங்கை ஒரு இறையாண்மை நாடு..இந்தியா தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகிக்க முடியாது..அன்பாக பேசி காரியம் முடிக்கலாம்.. தவிர ஆணையிடமுடியாது. ஒரு உள்நாட்டு பிரச்சினையில்..வெளிநாடு என்ன பண்ண முடியும்?.இலங்கை தமிழர் வாழ்வுக்காக போராடிய எத்தனை தமிழர் அமைப்புகளின் தலைவர்களை பிரபகாரன் கொன்றார்!!அமிர்தலிங்கம்,மாத்தையா,ஸ்ரீ சபாரத்தினம்,பத்மநாபன் இப்படி சொல்லி கொண்டே போகலாம்.கடைசியில் என் நாடு தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றார்கள். பிரபாகரனை ஆதரித்த மக்கள் அழிந்தார்கள்..எல்லோரும் அல்ல..மீதமுள்ள மக்களை மிஸ்டர் மன்மோகன் காப்பாற்றுவார்....
ராமதாஸ் சிதம்பரம் - singapore,இந்தியா
2010-07-27 10:19:50 IST
இந்த செய்தி ஒரு வாரத்திற்கு முன்னால் இதையே சொன்னார்கள். இப்பவும் இதேதான் சொல்லுராங்க ஒரு வாரமா அந்த மக்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியவில்லையா நம்மளால் ஒரு நாள் இருக்கமுடியுமா...
karuththapandi - ramanathapuram,இந்தியா
2010-07-27 08:42:08 IST
வேறொன்றும் இல்லை கருணாநிதி மன்மோகனுக்கு அடுத்த வருடம் எலக்சன் வருது. எனது மேல ரெம்ப பேரு கோபமாக இருக்கானுக. அதனால இலங்கைக்கு இந்தியாவிருந்து இலங்கையில் உள்ள தமிழ் பகுதிகளுக்கு ஒரு அதிகாரியை சும்மா கண்துடைப்புக்காக போக சொல்லுங்கள். அதை வச்சி இங்கு ஒரு நாடகம் அரங்கேற்றுவாறு அந்த அதிகாரி லங்காவுக்கு போயி தேயிலை டீ குடித்து விட்டு ராஜபட்சேவிடம் நன்றாக இருக்கு என்று சொல்லி விட்டு வருவார். அந்த அதிகாரியின் பெயர் சிவசங்கர மேனன்....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக