தஞ்சையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) அமைச்சர்கள் கே.என். நேரு, கோ.சி.மணி, துணை
தஞ்சாவூர், ஜூலை 27: அநாகரிகமான வார்த்தைகளைப் பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி. தஞ்சாவூர் திலகர் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது: குடும்பத்துடன் திருவாரூரில் இருந்து நான் திருட்டு ரயில் ஏறி வந்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். நான் திருட்டு ரயில் ஏறி வந்தது எப்போது, எந்த ரயிலில் என்று அவர் சொல்லவில்லை. வாய் புளித்ததோ இல்லை, மாங்காய் புளித்ததோ என்பது போல வாய்க்கு வந்தபடி அவர் சொல்லியிருக்கிறார். ஜனநாயக ரீதியில் அரசியல் செய்து, கட்சியை வளர்த்து, மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் பேராதரவுடன் இருப்பதே சேமநல அரசு. அத்தகைய அரசினை இழித்தும், பழித்தும் பேசுபவர்கள் மக்களிடம் எடுபடமாட்டார்கள். வெகுவிரைவில் செல்லாக் காசாகிவிடுவார்கள். நான் அவரை ஜெயலலிதா அம்மையார் என்று தான் கூறிவருகிறேன். ஆனால், அவர் என்னை கருணாநிதி என்றே பெயரைச் சொல்லி பேசுகிறார். என் பெயரைச் சொல்லி அவர் அடிக்கடி திட்டும்போது, யார் அந்த கருணாநிதி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருபவர் தானே என்று மக்களிடம் நான் பிரபலமாவேன். என்னை திட்டுபவர்கள் பெருக, பெருக, திமுக வளர்ந்துக் கொண்டேயிருக்கும். இதனை யாராலும் தடுக்க முடியாது. யார் புதிதாக கட்சி ஆரம்பித்தாலும் திராவிடர் என்ற சொல்லை வைத்துக் கொள்கின்றனர். திராவிடர் என்ற சொல்லை கட்சிக்கு வைத்தால் தான் மார்க்கெட்டில் நிற்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மரத்தை வெட்டி கோடாரி செய்து, அந்த கோடாரியைக் கொண்டே மரங்களை வெட்டுவது போன்று, தொடக்க கால திராவிடர் இயக்கத்தில் இருந்து அந்த வார்த்தையை எடுத்து, கட்சி தொடங்கி, திமுகவை வீழ்த்தலாம் என்று நினைப்பவர்களின் கனவு கைகூடாது. பிராமணர்களுக்கு நாங்கள் விரோதிகள் அல்ல. தனிப்பட்ட எந்த பிராமணர் மீதும் எங்களுக்கு விரோதம் கிடையாது. பிராமணப் பத்திரிகைகளும் எங்களைக் கடுமையாக விமர்சிக்கின்றன. அவர்கள் எங்களை விரோதம் கொள்வது ஏன் என்று தெரியவில்லை. ஜாதி ரூபத்தில் வரும் பார்ப்பனீயத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தஞ்சாவூர் பெரியகோயில் 1,000-வது ஆண்டு விழா அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும். அதனை வெறும் விழாவாக மட்டும் கொண்டாடாமல், மாவட்டத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் திட்டம் தீட்டியுள்ளோம் என்றார் கருணாநிதி. பொதுக்கூட்டத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் வரவேற்றார். கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி, வணிக வரித்துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் செல்வராஜ் நன்றி கூறினார்.
கருத்துக்கள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/28/2010 5:26:00 AM
7/28/2010 5:26:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
7/28/2010 5:25:00 AM
7/28/2010 5:25:00 AM
By kumar
7/28/2010 5:13:00 AM
7/28/2010 5:13:00 AM
By SN
7/28/2010 4:52:00 AM
7/28/2010 4:52:00 AM
By Deyes
7/28/2010 3:48:00 AM
7/28/2010 3:48:00 AM
By rajasji
7/28/2010 3:28:00 AM
7/28/2010 3:28:00 AM
By ki
7/28/2010 2:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/28/2010 2:42:00 AM