tasmac லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tasmac லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

மதுக்கடையும் இல்லை! கட்சிக் கொடியும் இல்லை! விந்தைச் சிற்றூர்


ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரத்தில், டாஸ்மாக் கடைகள் கிடையாது; கட்சிக் கொடிகளையும் ஏற்ற, மக்கள் விடுவதில்லை. இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடி மட்டும் ஏற்ற, கொடிக் கம்பம் ஒன்று மட்டும் உள்ளது. இதன் கட்டுப்பாடால் இங்குள்ளோர், எந்தவித பிரச்னையின்றி அமைதியுடன் வாழ்கின்றனர்.

ராஜபாளையத்தில் இருந்து, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது, சிவலிங்காபுரம். இங்கு, விவசாயம் தான் முக்கிய தொழில். மற்ற கிராமங்களைப் போல, இங்கும், சில ஆண்டுகளுக்கு முன், பஸ் ஸ்டாப் அருகே, கொடிக் கம்பங்கள் அணிவகுத்து நின்றன. இரவு வர வேண்டிய தலைவருக்கு, காலையிலேயே, "மைக் செட்' வைத்து, கிராம அமைதி சூழலுக்கு சவால் விடுவது போன்ற பிரச்னைகளும் நடந்தன. இதற்கு முடிவு கட்ட, கிராமத்தினர் முடிவு செய்தனர். பார்லிமென்ட் தேர்தலும் வந்தது; தேர்தல் விதிப்படி கொடிக் கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன; கொடிமர பீடங்கள் மட்டும் இருந்தன. தேர்தல் முடிந்த பின், பீடங்களில் கொடிக் கம்பங்கள் வைக்க, மக்கள் அனுமதிக்கவில்லை. "தேர்தல் நேரங்களில் மட்டும் ஒலி பெருக்கி உபயோகிக்கலாம்; கட்சிக் கொடிகளுக்கு அனுமதி இல்லை' என்ற நிலையை மக்களே உருவாக்கி விட்டனர்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சீனிவாசன் கூறுகையில், ""இங்கு, கொடிக் கம்பங்கள் தான் இல்லை; கட்சிகள் உண்டு. கிராமத்திற்கு எந்த தலைவர் வந்தாலும், சர்வ கட்சியினரும் சென்று வரவேற்போம். தலைவர்கள் வரும் போது, அந்தந்த கட்சியினர் மட்டும், தெருக்களில் கொடி கட்டுவர். தலைவர்கள் சென்றவுடன், அவர்களாகவே அகற்றி விடுவர்,'' என்றார்.

ஊராட்சி துணைத் தலைவர், ம.தி.மு.க.,வைச் சேர்ந்த, கேசவன், ""இங்கு டாஸ்மாக் கடைக்கும் வழி இல்லை. கடை துவங்க நடந்த முயற்சி, மக்களின் ஒற்றுமையால், முறிந்தது. கொடிமர பீடங்களை அகற்றவும் பேசி வருகிறோம். இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடியை ஏற்ற மட்டுமே அனுமதிக்கிறோம். இதற்கு அனைவரும் சம்மதித்ததால், பிரச்னை இல்லை. மக்கள் ஒற்றுமையாக இருப்பதால், இது சாத்தியப்படுகிறது,'' என்றார்.



புதன், 11 ஆகஸ்ட், 2010

டாஸ்மாக்' கடைகள் திறந்திருக்கும்: தமிழக அரசு

First Published : 11 Aug 2010 03:20:22 AM IST


சென்னை, ஆக. 9: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளை திறந்து வைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  எட்டு மணி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, "டாஸ்மாக்' ஊழியர்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.  இந்த நிலையில், கடைகளை திறந்து வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காவல் துறையினரின் உதவியுடன் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியது: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 700 மதுபானக் கடைகள் உள்ளன. பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து கடைகளுக்கு வராமல் இருந்தால், அந்தக் கடைகளை இயக்குவதில் அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் மாற்றுத் துறைகளில் உள்ள பணியாளர்களையும் ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தனர்.  எனவே, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை திறந்திருக்கும் எனத் தெரிகிறது. முன்னதாக, மது விற்பனை இருக்காது என்ற எண்ணத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு டாஸ்மாக் கடைகளில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் நிரம்பி வழிந்தது.
கருத்துக்கள்

குறளோவியம் எழுதிய கலைஞர்அவர்கள் இப்படியாவது மதுக்கடைகளைத் திறந்துவைக்க வேண்டுமா என்ன? இதை வாய்ய்பாகக் கொண்டு படிப்படியாக மதுக்கடைகளை மூடலாமே! சாதனை மன்னரின் கணக்கில் இதுவும் ஒரு சாதனையாகச் சேரட்டுமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/11/2010 4:36:00 AM
புரட்சித் தலைவி ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவதற்கு உமக்கு அருகதை இருப்பதாக நான் கருதவில்லை ! தொடக்கத்தில் இந்த துறையால் மது எவ்வளவு விற்பனை செய்யமுடியும் அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று தெரியாத நிலையில் நியமிக்கப் படும் ஊழியர்களுக்கு சரியான ஊதியத்தையோ அல்லது உரிமைகளையோ கொடுத்துவிட முடியாது என்பதனை அனைவரும் அறிவர் ! மது விற்பனை மூலம் அரசுக்கு கோடி கோடியாக பணம் கொட்டும் போது அந்த தொழிலாளர்களுக்கும் உரிய உரிமையினை வழங்க வேண்டியது அரசின் கடமை தானே ! அவர்களும் வாழப் பிறந்தவர்களே ! அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் கனவுகள் இருக்கும் அல்லவா ? எழுந்து உட்கார முடியாமல் மல்லாக்கவே படுத்துக் கிடக்கும் உனக்கு எவ்வளவு ஆசைகள் ! தூக்க எடுக்க கொட்டையை தாங்க என்று எத்தனை எடுபிடிகளை வைத்துக் கொண்டு மக்கள் பணத்தை சூரையாடுகிறாய் ! மக்கள் விவரம் புரிந்தவர்கள் ! இனி உன் கப்சா எடுபடாது ! புரட்சித் தலைவியின் பொன்னான ஆட்சியோடு ஒப்பிட்டு உன் மரியாதையை கெடுத்துக் கொள்ளாமல் அனைவரையும் அரசு ஊழியர்களாக அங்கீகரி ! அதற்கான உரிமைகளை கொடு ! சுமையாக இராமல் நேரத்தோடு ஓய்வு எடு ! தமிழினத்தை வாழ விடு ! நன்றி பெர
By rajasji
8/11/2010 4:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 29 ஜூலை, 2010

டாஸ்மாக் ஊழியர்கள் விரைவில் பணி நிரந்தரம்: முதல்வர் கருணாநிதி


சென்னை, ஜூலை 28: தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவது குறித்தும், பணி நிரந்தரம் கோரும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்தும் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.÷இதுகுறித்து, கேள்வி-பதில் வடிவில் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:÷டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.÷ஊழியர்களின் கோரிக்கைகளை மாத்திரமல்ல - மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகின்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுபற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்.÷பத்திரிகை ஆசிரியர் கைது: தினபூமி பத்திரிகை ஆசிரியரின் கைது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து, உடனடியாக காவல் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டேன்.÷என்ன காரணம் இருந்தாலும், உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் கூறினேன். அவர்களும் ஒருசில மணி நேரத்துக்குள் விடுவிக்கப்பட்டு விட்டனர். இது என்னுடைய நடைமுறை.÷எந்தவொரு பிரச்னை என்றாலும் மார்க்சிஸ்டுகள் தமிழக அரசைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள். அவர்கள் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் என்ன நிலை என்பதை அவர்கள் நினைத்தே பார்க்க மாட்டார்கள்.÷ஐ.நா.வின் சர்வதேச மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் இருபதாவது ஆண்டு நிறைவை ஒட்டி, வறுமை ஒழிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.÷இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாடு முனையத் திட்டத்துடன் இணைந்து பல்நோக்கு ஆய்வு நடத்தப்பட்டது.÷அதில், இந்தியாவில் 8 மாநிலங்கள் ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளை விட, அதிக அளவில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 42 கோடி மக்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மார்க்சிஸ்டுகள் உணர வேண்டும்.÷மத்திய அரசின் மானியமா? மத்திய அரசு மானியத்தில்தான் ஒரு ரூபாய் அரிசி வழங்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருக்கிறார். ÷மத்திய அரசு மானியத்தில்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால் அனைத்து மாநிலங்களிலுமே அதை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே? மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் வழங்கும் அரிசியைத்தான் நமது மாநிலத்துக்கும் அதே விலையில் வழங்குகிறது.÷ஆனால், தமிழக அரசு மட்டும்தான் இந்தியாவிலேயே ஒரு மாநிலமாக ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மேலும், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, இந்த ஆண்டு மட்டும் ரூ.3 ஆயிரத்து 750 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.  108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் கூட மத்திய அரசு அளித்து வருவதாகப் பேசியிருக்கிறார் இளங்கோவன். அதுவும் தவறான செய்திதான்.÷அந்தத் திட்டம் உலக வங்கியிடம் இருந்து நிதி கடனாகப் பெற்று செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான நடைமுறைச் செலவிலே ஒரு பகுதியை மட்டும்தான் மத்திய அரசு வழங்குகிறது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

தலைப்பு சரயில்லையே! மதுவிலக்கு மீண்டும் வரலாம் என்று கூடக் குறிப்பிட்டிருக்கலாம். 
அன்புடன் இலக்குவனார் 
                                               திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
7/29/2010 3:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *