constitution of india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
constitution of india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 நவம்பர், 2010

இந்தியா புலிகளை அழித்து தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டது.

இந்தியா புலிகளை அழித்து தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டது.

புதன், 22 செப்டம்பர், 2010

இந்திய யானையைச் சுற்றி வளைக்கும் சீன "டிராகன்'


இந்தியாவைவிட சுமார் 70 மடங்கு சிறிய நாடு இலங்கை. ஆனால், சின்னஞ்சிறிய சிங்கள ராஜதந்திரம் மிகப்பெரிய இந்தியாவின் ராஜதந்திரத்தை மிக எளிதாகத் தோற்கடித்துள்ளது. சிங்களக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும், சிறிலங்கா சுதந்திரா கட்சியாக இருந்தாலும், இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைத்தான் உலக அரங்கில் மேற்கொண்டன. மற்றொரு சிங்களத் தீவிரவாதக் கட்சியான ஜே.வி.பி. கட்சி மேற்கண்ட இருகட்சிகளையும்விட அதிதீவிரமான இந்திய எதிர்ப்புவாதம் கொண்ட கட்சியாகும். இந்த மூன்று முக்கிய சிங்களக் கட்சிகளும் இந்திய எதிர்ப்புவாதத்தையும் அதன்வழி, ஈழத்தமிழர் எதிர்ப்பு வாதத்தையும் தமது அடிப்படைக் கொள்கைகளாகப் பின்பற்றி வருகின்றன.அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய வல்லரசுகளின் அணிகளிலோ அல்லது சோவியத் நாட்டின் அணியிலோ சேராமல் நடுநிலைக் கொள்கையை கையாண்டு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை இந்தியா அணிதிரட்டியபோது, இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு மேற்கத்திய வல்லரசுகளுடன் கூட்டுச்சேர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலையை எடுத்தது. மற்றொரு கட்சியான சுதந்திரா கட்சி ஆட்சியில் இருந்தபோதெல்லாம், சீனா-பாகிஸ்தான் போன்ற இந்தியாவுக்கு எதிரான ஆசிய நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து இந்திய எதிர்ப்பு நிலை எடுத்தது.இந்தியாவின் விசுவாசிகளாக ஈழத் தமிழர்களை சிங்களக்கட்சிகள் கருதுகின்றன. இந்தியா மீதான அச்சத்தின் விளைவாகவே ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொலைவெறி நடவடிக்கைகளை சிங்கள அரசு தொடர்ந்து கையாண்டு வருகிறது. இந்த உண்மையை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தெளிவாக உணர்ந்திருந்தார். இலங்கையில் அந்நிய நாடுகள் காலூன்றுவது இந்தியாவுக்கு அபாயத்தைத் தேடித்தரும் என்பதால், எந்த அந்நிய வல்லரசையும் இந்துமாக்கடல் பகுதியில் அனுமதிக்க முடியாது என உறுதியாக அறிவித்தார்.  அவரை மீறிச் செயல்பட சிங்கள அரசு அஞ்சியது. 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரிய இனக்கலவரத்தை இனப்படுகொலை என அவர் கண்டிக்க முன்வந்தார். இந்தியாவின் மூத்த ராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதியை அனுப்பி ஜெயவர்த்தனாவுக்கு எச்சரிக்கை செய்தார். அதுமட்டுமல்ல, தமிழர்களின் பிரதிநிதிகளோடு உட்கார்ந்து பேசி, இனப்பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வுகாண வற்புறுத்தினார். ஆனால், பிரதமர் இந்திராவின் மறைவுக்குப் பிறகு பிரதமரான ராஜீவ் காந்தியை மிகச் சுலபமாக ஜெயவர்த்தனா ஏமாற்றினார். இந்தியாவின் சார்பில் ஜி. பார்த்தசாரதி வந்தால் பேசமாட்டோம் எனக்கூறும் துணிவு அவருக்கு வந்தது. இந்தியா போன்ற பெரிய நாடு, தனது பிரதிநிதியாக யாரை அனுப்ப வேண்டும் என்பதை சின்னஞ்சிறிய நாடு முடிவுசெய்யும் அவலம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஜி. பார்த்தசாரதி பதவி விலக நேர்ந்தது. மேலும்,  இந்திய வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த ஏ.பி. வெங்கடேசுவரனும் பதவிவிலக வேண்டிய சூழ்நிலையை ராஜீவ் காந்தி ஏற்படுத்தினார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் முக்கிய பொறுப்பிலிருந்த இரு தமிழர்கள் அகற்றப்பட்ட பிறகு, நிலைமை முற்றிலுமாக சிங்கள அரசுக்குச் சாதகமாக மாறியது.ராஜீவ் காந்தி காலத்திலிருந்து இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் சிங்கள ஆட்சியாளரை தாஜா செய்யும் கொள்கையைக் கையாளத் தொடங்கினார்கள். மிகப்பெரிய நாடான இந்தியா, மிகச்சிறிய நாடான இலங்கையின் ராஜதந்திரப் பிடிக்குள் தானாகவே கட்டுண்டது.ஈழத்தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவின் நலனுக்குப் பெரும் பாதிப்பாக மாறும் என்பதை  இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இன்னமும் உணரவேயில்லை. ஈழத் தமிழர்களை முற்றிலுமாக அடக்கி ஒடுக்கி இலங்கைத் தீவு முழுவதையும் சிங்கள மயமாக்கிவிட்டால் கடைசியில் இந்தியாவுக்கு எதிரான அந்நிய நாடுகளுடன் சுலபமாகக் கை கோக்கலாம் என்பதே சிங்கள ராஜதந்திரத்தின் அடிப்படை நோக்கமாகும்.ஈழத்தமிழர்கள் வலிமையாக இருக்கும்வரை, இலங்கையின் மூலம் இந்தியாவுக்கு ஆபத்து வரமுடியாது என்ற உண்மையை, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கொஞ்சமும் உணராமல், ஈழத்தமிழர்களின் பாதுகாவலர்களாக விளங்கிய விடுதலைப் புலிகளை வீழ்த்துவதற்கு சிங்கள இனவாத அரசுக்கு ராணுவ ரீதியான எல்லா வகையான உதவிகளையும் செய்தார்கள். இன்னமும் செய்வதற்காக நிருபமாக்களும், கிருஷ்ணாக்களும் தூது செல்கிறார்கள்.இலங்கை கேட்கும் உதவிகளை நாம் செய்யாவிட்டால் அவர்கள் சீனாவை நாடிச் சென்றுவிடுவார்கள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி பகிரங்கமாகவே கூறினார். ஆனால் நடந்தது என்ன? இந்தியாவிடம் வேண்டிய உதவிகளைத் தேவையான அளவுக்கும் அதிகமாகப் பெற்றுக்கொண்ட பிறகும், சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் ராணுவ ரீதியான உதவிகளைப்பெற இலங்கை ஒருபோதும் தயங்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் இலங்கை கைகோக்கக் கொஞ்சமும் தயங்கவில்லை.இலங்கை - சீன உறவு என்பது எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு மிக வலுவாக உருவாகிவிட்டது. 2004-ம் ஆண்டில் 0.7 பில்லியனாக இருந்த இலங்கைக்கான சீனாவின் ஏற்றுமதி வணிகம் தற்போது 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.சிறப்புப் பொருளாதார வளையம், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரபியோகா பண்ணை, அம்பாந்தோட்டையில் ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகம், நுரைச்சோலை என்னுமிடத்தில் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையம், கொழும்பு கட்டுநாயகா விரைவுப்பாதை, வடக்கு - கிழக்கு மாநிலத்தில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்களின் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான 10 மில்லியன் டாலர் வீடமைப்புத் திட்டம் போன்றவற்றைச் செய்துகொடுக்க சீனா முன்வந்துள்ளது. கட்டுமான வேலைகளுக்காக 25,000 சீனர்கள் இலங்கையில் வந்து இறங்கியுள்ளனர்.இவைதவிர, வடக்கில் உள்ள சிங்கள ராணுவ நிலைகளைப் பலப்படுத்த மேலும் 20 மில்லியன் டாலர்களைக் கடன் அடிப்படையில் வழங்க சீனா முன்வந்துள்ளது. மீரிகன சிறப்புப் பொருளாதார வளையத்தில் 29 சீன நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.சீனாவின் இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு, இலங்கை அதிபர் ராஜபட்சவை, இந்தியாவுக்கு வரவழைத்து அவருக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றது. இலங்கையில், பொருளாதார ரீதியான முதலீடு செய்வதற்கான சீபா உடன்படிக்கையை இந்தியா செய்துள்ளது. இந்தியாவுக்கு சீனன்குடாவில் எண்ணெய் சேமிப்பு தொட்டிகளும், காங்கேசன்துறை  துறைமுகத்தை வளர்ச்சி செய்யும் திட்டமும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை ஒருபோதும் அம்பாந்தோட்டையில் சீனா அமைக்கும் மிகப்பெரிய துறைமுகத்துக்கு ஈடாகப்போவதில்லை. இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தனது நிலையைப் பலப்படுத்துவதன் மூலம் சீனாவின் தென்னிலங்கை ஆக்கிரமிப்பை சமநிலைப்படுத்தலாம் என்று இந்தியா கனவு காண்கிறது.இந்தியாவைச் சுற்றிலும்... பாகிஸ்தானில் குவாடா துறைமுக வளர்ச்சித் திட்டம், வங்காள தேசத்தில் சிட்டகாங் ஆழ்கடல் துறைமுக வளர்ச்சித் திட்டம், மியான்மரில் மிகப்பெரிய கடற்தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை, சீனா ஏறத்தாழ அமைத்து முடித்துவிட்டது. இப்போது இவற்றையெல்லாம்விட மிகப்பெரிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை வேகமாக அமைத்து வருகிறது.இந்தியாவைச் சுற்றிலும் இந்துமாக்கடல் பகுதியில், சீனா உருவாக்கிவரும் இந்தத் துறைமுகங்களால் இந்தியாவுக்குப் பேராபத்து உருவாகி வருகிறது. குறிப்பாக தென்னிந்தியா அபாயத்தின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது. சீனப் படையெடுப்புக்குப் பிறகு இந்திய அரசு, வடமாநிலங்களில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் எதையும் அமைப்பதில்லை என முடிவுசெய்து முக்கியமான தொழிற்சாலைகள் ராணுவத்தளங்கள் ஆகியவற்றை தெற்கே அமைத்தது. இந்துமாக்கடல் பகுதியில் இலங்கையைத் தவிர வேறு எந்த நாடும் இல்லை. இலங்கையும் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உள்பட்ட ஒரு நாடு. எனவே, அபாயமற்ற பகுதியாக தென்னிந்தியா திகழும் என்ற நம்பிக்கையில் இத்தனையும் அமைக்கப்பட்டன.தமிழ்நாட்டில் சென்னை ஆவடியில் டாங்கித் தொழிற்சாலை, திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை, தஞ்சையில் இந்திய விமானப் படைத்தளம்,  நீலகிரியில் ராணுவ அதிகாரிகளுக்கான உயர் கல்லூரி, ராமநாதபுரம் மண்டபத்தில் மன்னார் கடலைக் கண்காணிக்க கடற்படைத் தளம், திருநெல்வேலியில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்களுடன் தொடர்பு கொள்ள உதவும் செய்தித் தொடர்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய விமானப்படையின் தெற்குத் தலைமை நிலையம், பிரமோஸ் ஏவுகணைத் தளம் ஆகியவையும் கொச்சியில் இந்தியக் கடற்படையின் தெற்குத் தலைமை நிலையமும், கண்ணனூரில் ஆசியாவில் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சிக் கல்லூரியும் அமைக்கப்பட்டுள்ளன.கர்நாடக மாநிலம் பெங்களூரில், இந்துஸ்தான் விமான உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்பட்டு 12 விதமான விமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கார்வார் என்னுமிடத்தில் இந்தியக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு மேற்குக்கரை தலைமை நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இந்தியக் கடற்படையின் கிழக்குத் தலைமை நிலையம் இயங்கி வருகிறது. செகந்திராபாதில், இந்தியப் பாதுகாப்பு நிர்வாகக் கல்லூரி உருவாக்கப்பட்டு, ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விமானப் போருக்கு பயிற்சியளிக்கும் கல்லூரியும் இங்கு செயல்படுகிறது. ஹைதராபாதில் பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வுநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இடங்களிலும் கர்நாடகத்திலும் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலேகண்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் அனைத்தும் எளிதில் தாக்கப்படும் பேரபாயம் உருவாகியுள்ளது. இலங்கையில், சீனா ஆழமாகக் காலூன்றி நிற்பது எதிர்காலத்தில் எத்தகைய வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை தில்லியில் உள்ள மேதாவிகள் சிறிதளவுகூட சிந்தித்துப் பார்க்கவில்லை. தொலைநோக்குப் பார்வையோ, தெளிவான கொள்கை வகுக்கும் திறமையோ சிறிதளவும் இல்லாத குறுமதியாளர்கள் தில்லியின் அதிகார பீடங்களில்  அமர்ந்திருக்கிறார்கள்.இலங்கையில் விடுதலைப் புலிகள் பலமாக இருந்தவரையில் எந்த அந்நிய வல்லரசும் அங்கு நுழையத் தயங்கியது. இந்திய யானையை எளிதில் வீழ்த்தும் வியூகம் வகுக்க சீனாவின் டிராகனுக்கு, தனது நாட்டின் கதவுகளைத் திறந்துவிட்டார் ராஜபட்ச. அவருக்குத் துணை நின்று தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் நடவடிக்கையை இந்திய யானை மேற்கொண்டு வருகிறது.
கருத்துக்கள்

செவிடர்கள் காதில் சங்கு ஊதினால் கூடப் பார்வையின் மூலம் ஏதோ புரிந்து கொண்ட என்ன வென்று கேட்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால், பழ.நெடு. அவர்கள் செவிடர் போல் நடிப்பவர் காதில் சங்கு ஊதிக் கொண்டு இருக்கின்றார். நடிப்பவர்கள் அருகிருப்போராவது கேட்டு விழிப்படைந்தால் நன்று. தமிழினப் பகைப்போக்கை இந்திய அரசு கைவிடும் வரை சிங்களத்திற்கு அடிமையாகத்தான் இருக்கும். இம் மண்ணின் தொல்லினம், தாயினம் தமிழினம் காக்கப்பட வேண்டும் என்னும் வரலாறு பண்பாடு மனித நேயம் சார்ந்த உணர்வு இந்தியத்திற்கு வந்தால் சிங்களத்தைத் தவிடு பொடியாக்கும். ஆனால், ஆரியத்தின் கட்டுப்பாட்டில் இத்தாலியம் வீற்றிருக்கையில் அந்நிலை எங்ஙனம் நிகழும்? வடக்கில் ஒரு பகுதியைச் சீனாவிற்குத்தாரை வார்த்தது போல் தெற்கிலும் தாரை வார்க்க தயங்காது போலும். எனவே, இந்தியா முழுமையும் தமிழர் தாயகம் காக்கப்பட வேண்டியதன் இன்றியமையாமை விளக்கிக் காங்.கை அகற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2010 4:58:00 AM
சீனாவுக்கும்,அமெரிக்காவுக்கும் இந்தியா தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கும் வல்லமை நிறைந்தது என்பதே இந்திய மக்களின் கருத்தாகும்.
By ஆரிசன்,கீழ்க்கொடுங்காலூர்.
9/22/2010 1:27:00 AM
இலங்கையின் அய்க்கிய தேசிய கட்சி,சுதந்திரா கட்சியோடு ஈழத்தமிழர்களுக்கு அளப்பரிய உதவிகளைச் செய்த இந்தியாவுக்கு ஈழ தமிழ் அமைப்பான விடுதலைப் புலிகளும் எதிராகவே செயல்பட்டனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.சீனா வின் அத்தனை வியூகத்தையும் இந்தியா முறியடிக்கும். வல்லரசான அமெரிக்காவுக்கும் அல்வா கொடுக்கும் பலம் வாய்ந்த நாடு இந்தியா என்பதை நம்புவோம்.இந்திய ஒற்றுமைக்கு வலு சேர்ப்போம்.அந்நிய முதலீடுகளுக்கு ஆசைப்படும் நாடுகள் வளர்ச்சியடையுமா அல்லது வீழ்ச்சியடையுமா என்பது உலகமயத்தின் கால் பதித்த சுவடுகள் எதிர்காலத்தில் சொல்லும்.அறியாமையில் இருந்த மக்கள் அப்போது அறிவாயுதம் ஏந்துவார்கள்.அந்நிய ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக மீண்டும் ஒரு யுத்தம் வரும்.அப்போது சாதி,மொழி,இனம்,மதம்,வர்க்கம் எல்லாவற்றையும் கடந்து மக்கள் ஒன்று சேர்ந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டியிருக்கும்.
By ஆரிசன்,கீழ்க்கொடுங்காலூர்.
9/22/2010 1:22:00 AM
இலங்கையின் அய்க்கிய தேசிய கட்சி,சுதந்திரா கட்சியோடு ஈழத்தமிழர்களுக்கு அளப்பரிய உதவிகளைச் செய்த இந்தியாவுக்கு ஈழ தமிழ் அமைப்பான விடுதலைப் புலிகளும் எதிராகவே செயல்பட்டனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.சீனா வின் அத்தனை வியூகத்தையும் இந்தியா முறியடிக்கும். வல்லரசான அமெரிக்காவுக்கும் அல்வா கொடுக்கும் பலம் வாய்ந்த நாடு இந்தியா என்பதை நம்புவோம்.இந்திய ஒற்றுமைக்கு வலு சேர்ப்போம்.அந்நிய முதலீடுகளுக்கு ஆசைப்படும் நாடுகள் வளர்ச்சியடையுமா அல்லது வீழ்ச்சியடையுமா என்பது உலகமயத்தின் கால் பதித்த சுவடுகள் எதிர்காலத்தில் சொல்லும்.அறியாமையில் இருந்த மக்கள் அப்போது அறிவாயுதம் ஏந்துவார்கள்.அந்நிய ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக மீண்டும் ஒரு யுத்தம் வரும்.அப்போது சாதி,மொழி,இனம்,மதம்,வர்க்கம் எல்லாவற்றையும் கடந்து மக்கள் ஒன்று சேர்ந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டியிருக்கும்.
By ஆரிசன்,கீழ்க்கொடுங்காலூர்.
9/22/2010 1:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதன், 1 செப்டம்பர், 2010

அமெரிக்காவில் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்


வாஷிங்டன்: அமெரிக்காவுக்குச் சென்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் குழுவினரை விமானத்திலிருந்து இறக்கி அமெரிக்க அதிகாரிகள் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவில் நடைபெறும் ராணுவ மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 9 ராணுவ உயர் அதிகாரிகள் அந்நாட்டுக்குச் சென்றிருக்கினறனர். நேற்று காலை வாஷிங்டனில் இருந்து மாநாடு நடைபெறும் தம்பா நகருக்கு அமெரிக்க ஏர்வேஸ் விமானத்தில் செல்லத் தயாராகினர். விமானம் புறப்படத் தயாரானபோது அவர்களை விமானத்திலிருந்து கீழே இறக்கி அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை வாஷிடங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.விமான ஊழியரிடம் ராணுவ அதிகாரிகளுள் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்காகவே அவர்கள் அனைவரும் இறக்கி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த முழு விவரமும் அந்தப் பத்திரிகை செய்தியில் வெளியிடப்படவில்லை.கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அந்த ராணுவ அதிகாரிகள் அனைவரும் அமெரிக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும், தூதரகத்துடனோ, அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடனோ பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அந்தச் செய்தி கூறுகிறது.அவர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்கிற முடிவுக்கு வந்தபிறகே அவர்களை அமெரிக்க அதிகாரிகள் விடுவித்ததாகவும் தெரிகிறது.இந்தச் சம்பவத்தையடுத்து, பயணத்தை ரத்து செய்துவிட்டு, நாடு திரும்பும்படி அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது. அவர்கள் இன்று பாகிஸ்தான் திரும்புவார்கள் எனத் தெரிகிறது.
கருத்துக்கள்

அமெரிக்கா வரும் சிங்கள அதிகாரிகளையும் பக்சே முதலான தலைவர்களையும் தளையிட்டு அடைத்து வைத்து உசாவல் (விசாரணை) மேற்கொண்டால் பாராட்டலாம். இந்தியாவிற்கும் நண்பனாக நடித்துக் கொண்டு இந்தியாவிற்கு எதிராகச் செயல்படும் வண்ணம பாக்கிசுதானுக்கும் உதவும் அமெரிக்காவின் நாடகமே இது. என்றாலும் இச்சூழலில் பாக்கிசுதான் திரும்பி வருமாறு கூறியது போல் அல்லாமல் இந்தியாவாக இருந்தால் மண்டியிட்டு வணங்கி இருக்குமாறு கூறும். ( பாதுகாப்பு அமைச்சருக்கே அந்தக் கதி வந்த பொழுது இந்தியாவின் மானம் எங்கே போனது? ) இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2010 3:41:00 PM

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

இலங்கை: தமிழர்களின் விவசாய நிலங்களில் சிங்களர்கள் குடியேற்றம்


இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளிட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சிங்கள இனத்தவர் குடியமர்த்தப்பட்டு வருவதாக அந்நாட்டு தமிழ் இணைய தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக அந்த இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்தியின் விவரம்:விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னரும், தமிழர்கள் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதாக இலங்கை அரசு கூறி வந்தாலும் அவ்வாறு செய்யாமல் தாமதப்படுத்தி வருகிறது.மாறாக தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் தொடர்ந்து குடியேற்றப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அங்கு சிங்களவர்களை குடியமர்த்தும் பணி தொடங்கியுள்ளது.இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஏராளமான விவசாய நிலமும் அடங்கும். இவ்வாறு அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

சிங்களர்களுக்கு உதவியாக நாட்கூலி அடிப்படையில் ஈழப்படுகொலைக்குக் காரணமான தலைவர்களையும் 
அதிகாரிகளையும் ஊடகத்தினரையும் அனுப்பி வைக்கலாம். அவர்கள் கனவு நனவாவதை நேரடியாகப் பாரக்கும் வாய்ப்பு கிட்டும் அல்லவா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 27 ஜூலை, 2010


மறுவாழ்வுப் பணிகளை கண்காணிக்க இலங்கை செல்கிறார் இந்திய அதிகாரி: கருணாநிதிக்கு மன்மோகன் கடிதம்


சென்னை, ஜூலை 26: இலங்கைத் தமிழர்களின் இப்போதைய நிலை, இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகள் ஆகியவை குறித்து அறிய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி இலங்கைக்குச் செல்ல உள்ளார்.÷இந்தத் தகவலை முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களின் இப்போதைய நிலை, போர் முடிந்த பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வுப் பணிகள், இந்தியா அளிக்கும் நிதி உதவி முறையாகச் செலவிடப்படுகிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள கண்காணிப்புக் குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார்.÷நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திலும் திமுக இதே கோரிக்கையை வலியுறுத்தியது.அந்தக் கூட்டத்தில் இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், "இலங்கைக்கு கண்காணிப்புக் குழு அனுப்பப்படும்' என்று தெரிவித்திருந்தார்.÷இந்த நிலையில், முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:÷இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவது குறித்து தாங்கள் எழுதிய கடிதத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்னையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு, பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது.÷இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுகிறார்.  அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்


இந்திய உதவி / கண்காணிப்பு குறித்துச் சிங்களத் தலைவர்கள் பேசுவதே இதன் பயனின்மையைக் காட்டும். ஏமாற்றம் இன்றி மாற்றத்தை விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/27/2010 2:49:00 AM
இதற்கு முன்பு சென்றவர்கள் போரை எவ்வாறு விரைவில் முடிவிற்குக் கொண்டு வருவது என வழி காட்டவும் உதவவும் சென்றார்கள். முடிவிற்குக் கொண்டு வருவது என்றால் போரை நிறுத்துவது என நாம எண்ணிக் கொ்ண்டிருந்தோம். மக்களைக் கொனறொழித்து நாட்டை எரிகாடாக்கவும் சுடுகாட்டாக்கவும் புதைகாடாக்கவும் உள்ள வழிமுறைகளைச் சொல்லி வன்படைகளும் எரிகுண்டுகளும் கொத்துக் குண்டுகளும் வழங்கி மக்கள் இல்லா நாட்டை உருவாக்குவது. அதில் வெற்றியும் கண்டாரகள். இப்பொழுது செல்பவர் எவ்வளவு விரைவில் தமிழ்ப் பகுதிகளைச் சிங்களப் பகுதிகளாக மாற்றுவது, கண்துடைப்பு ஏமாற்று வேலைகளை எவ்வாறு திறமையாகச் செய்வது, கொத்தடிமைகளாகவே எவ்வாறு நடத்துவது என வழிகாட்டச் சென்றார் எனில், யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் நிலைதான் இந்தியத்திற்கு ஏற்படும். குழு அனுப்புவதாகச் சொல்லிததனி மனிதரை அனுப்புவதில் இருந்தே இந்தியத்தின் சறுக்கல் புரிகிறது. தமிழ் நலனுக்கு எதிராதமிழரல்லாத அதிகாரியை அனுப்பி என்ன பயன்? சாதனையாகச் சொல்லி மக்களை ஏமாற்ற உதவுமே!அதிகாரமில்லாத தூதரக, உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்து என்ன பயன்? பக்சேவின் விருந்தும் பரிசும் கிடைக்குமே!
By Ilakkuvanar Thiruvalluvan
7/27/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Nandri Ilakkuvanar Thiruvalluvan, Very Nice Comments. Every Tamilian who Inspired by all your Comments,Well Done Keep It Up and Thanks a Lot to U. Once again Another Drama Comes to Stage as per the Idea of Our Foreign Policy Makers regarding Srilankan Tamils Issue. I am Sure no use for that Visit and Rajapakse never Care about this High Level Official (from EAM) visit to Monitor the Situation in the North East. This visit like Actress Asins Recent Visit arranged by Rajapakse to Kilinochi to Cheat the Tamils and the International Community. Our Tamilnadu CM do not believe this Gimmick by Our PM.
By G.Sakthivelu
7/27/2010 10:29:00 AM

MANMOHAN SINGH - He is the man who accepted that weapons were given to Srilanka for self defense. I do not know where in the world weapons are created for defense only that will not make any offense. He is the man who gave a red carpet welcome to a killer from Srilanka. He is the man who is silently watching the killing of Tamil and the Tamil fisher men. The great economist who promised to control the prices within 100 days of assuming office. A puppet in the hands of Congress with blood soaked hand symbol. A great actor. It is a pity that even after being great grand fathers some men lack humanity.
By karunakaran
7/27/2010 9:41:00 AM

Dear Chandren Thailand news can write any thing but u should think before u write, Who told u that tamils came to srilanka as refugees. normal educated person wont write this type of things. Chandren please consult the doctor immideatly.
By nagulan
7/27/2010 8:31:00 AM

உங்கள் நடவடிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கலைங்கறும் நீங்களும் சேர்ந்து சிங்களத்துக்கு உதவும் நடவடிக்கையாகவே எண்ணுகிறோம். இந்திய மிகப்பெரிய நாடு தமிழர்களை அழித்து இந்தியா வாழ்ந்து விட முடியாது. உண்மையில் தீவிரவாதிகள் உங்களையும் கலைன்கரையும் போன்றவர்கள் தான். கொடுரமான தீவிரவாதிகள் நீங்கள். ராஜபக்ஷே விரும்பினால் சென்னை நடிகர் சங்கத்தில் அசின்க்கு சாதகமாக தீர்மானம் போடா வைக்க முடிகிறது, இந்த கொடுமையை எத்தனை காலம் செய்வீர்கள். உங்களுக்கு பிள்ளை குட்டிகள் இல்லையா. உங்கள் குழந்தை ஒருவருடம் வதை முகாமில் இருந்தால் இப்படி செய்வீர்களா. எராளமான நல்ல DMK தலைவர்கள் கூட இலங்கை பிரச்சனையில் மிகவும் கவலையாகவும் கலைங்கர் மேல் வெறுப்பாகவும் இருக்கிறர்கள்.
By VIS
7/27/2010 7:29:00 AM

Tamils are historically refugees came to Sri Lanka from India. Later on they started crying to make their own country within Sri Lanka. So those countries who accept Tamils as refugees must watch out. They WILL turn back and demand a separate Tamil homeland in those countries. -Thailand news.
By Chandren
7/27/2010 6:36:00 AM

tamils are fools, their needs are small things like free tv, free food, etc. the rulers are very calculative and cunning, their goals are destruction of tamils and the election victory as long as tamils are not extinct.
By karthick
7/27/2010 6:22:00 AM

பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது.என்றால் எப்படி பிரச்னையை தீர்க்கப்போகிறது.செயல் வடிவம் ஏதாவது இருக்கிறதா. அப்படியாயின் இதனை பகிரங்கப்படுத்த வேண்டும் .அப்படி பகிரங்க படுத்த முடியாவிட்டால் 2011 சட்டமன்ற தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகமாகவே இருக்கும்.÷இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுகிறார்???
By பண்டார வன்னியன்
7/27/2010 3:09:00 AM

ஐயா மன்மதசிங்கு .கொலைஞ்யர் கருணாநிதி நீங்கள் அனுப்பிய அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளான மலையாள சிவசங்கர் மேனன்.நாராயணன் சிங்கள பூர்வீக இனமான‌ பிரனாப்முகர்ச்சி ஆகியோரை மூத்த அதிகாரிகள் என்று நியமித்து அனுப்பியபோது ஒரே ஒரு நாள் கூட யுத்த நிறுத்தம் செய்யும்படிம்படி கேட்கவில்லையாம் இதை இலங்கை பாராளமன்றத்தில் வைத்து சிங்களவன் கூறுகிறான். நீங்கள் கூட்டு சேர்ந்து தான் ஒரு இலட்சம் மக்களை கொன்று 12 இல‌ட்சம் மக்களை அகதியாக்கினீர்கள் ஒரு இலட்சத்தி பத்தாயிரம் பேர் ஊனப்படுத்தப்பட்டார்கள் . வடக்கு கிழக்கில் ஒரு இலட்சத்தி பத்தாயிரம் விதவைகள் உள்ளனர். அவர்கள் மேல் இலங்கை சிங்களபடையும் இந்திய துணைகுழுக்கள்
By பண்டார வன்னியன்
7/27/2010 3:08:00 AM

இந்திய துணைகுழுக்கள் பாலியல் வல்லுறவை சிறுவர் சிறுமிகள் முன் வெட்ட வெளியில் வைத்து பகிரங்கமாக மேற்கொள்ளுகிறார்கள். அதனை விடுத்து உங்களது கொலைகளை மறைப்பதற்கு ஊனமுற்றவர் சிகிட்சைக்காக இந்தியா வரும்போது அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி இலங்கையிடம் ஒப்படைக்கிறீர்கள். சர்வதேச நீதிமன்றத்தின் பிரதிநிதிகள் இவர்களை சந்தித்து விடுவார்களோ என்ற பயத்தில் ஈழ தமிழர் மேல் நீங்கள் செய்யும் கொடுமைகள் செல்லிமாழாதவை. எந்த ஒரு ஈழ தமிழனையும் இலங்கையை விட்டு வெளியேற முயாமல் ஆசிய உளவு கூட்டு சதிக்கு நீங்கள் தலமை தாங்குகிறீர்கள். இவளவு கொடுமைகளையும் தொடர்ச்சியாக புரிந்துகொண்டு ÷இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி எவரை அனுப்பபோகிறீர்கள். அப்படியாயின் இதற்குமுன் நீங்கள்.
By பண்டார வன்னியன்
7/27/2010 3:07:00 AM
எங்களவர் ஒரு கடிதம் எழுதுவாராம், பதிலுக்கு அவரும் ஒரு கடிதம் எழுதுவாராம். ரெண்டு பேரும் மாறி மாறி தமிழனின் காதில் கடுக்கண் குத்துங்க. எவனும் ஏதும் கேட்கமாட்டான். மதுரைக்காரன்
By மதுரைக்காரன்
7/27/2010 3:07:00 AM

வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை அராயவில்லையா. ஆராயமலா இவளவு பொதுமக்களை படுகொலை செய்தீர்கள். எவன் இந்தியாவில் ஆட்சி அமைத்தாலும் நந்திபோல் ஒட்டிக்கொள்ளும் சிதம்பரம் ஈழ தமிழன் ஈழத்தில் வந்தேறி குடிகள் என பாடசாலைபூராவும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளான், இவற்றுக்கான நிதியினை இலங்கை அமைச்சு காங்கிரஸ் முஸ்லீம் அமைச்சர் ஊடாக மாதாமாதம் வளங்குகிறதாம் .நிலமைகள் இப்படி இருக்கும் போது தமிழன் மேல் இந்தியாவுக்கு கரிசனைவருமா?? அல்லது தமிழன் தான் இந்தியாவை நம்ப முடியுமா? தமிழர்கள் இரு பெரும் தலைவர்களை சந்தித்துள்ளனர். ஒன்று பிரபாகரன் மற்றயது மகிந்த இராஜபக்ச. இவ்ர்களுடைய அரசியல் இராஜதந்திரத்தில் இந்தியாவுக்கு படுதோல்லி இதை வரலாறு என்றாவது ஒரு நாள் கூறும்.
By பண்டார வன்னியன்
7/27/2010 3:06:00 AM

மாலை மலர்

இலங்கை நிலவரத்தை ஆராய இந்திய அதிகாரி பயணம்


தினமலர்

வாசகர் கருத்து (6)
2010-07-27 06:00:02 IST
செல்வது யாரோ?காண்பது ஏதோ? சொல்வது எதுவோ? சொல்லிப் பயன் வருமோ? கொல்வது அரசாயிருக்க,வெல்வது நீதியாமோ? செல்பவர் காண, காண்பதைச் சொல்ல, சொல்வதை அறிந்து நன்மையைச் செய்ய, செய்வாய் இறைவா, வெல்வாய் தமிழா!...
ram - indian,இந்தியா
2010-07-27 05:23:01 IST
இதற்கு முன்பு சென்றார்கள். போரை நிறுத்துவது என நாம எண்ணிக் கொ்ண்டிருந்தோம். இப்பொழுது செல்பவர் எவ்வளவு விரைவில் தமிழ்ப் பகுதிகளைச் சிங்களப் பகுதிகளாக மாற்றுவது, என வழிகாட்டச் செல்பவர்,...
2010-07-27 04:32:29 IST
எனக்கே கடிதமா(வாய்தாவா) ? - கருணாநிதி,...
ilakkuvanar thiruvalluvan - mylapore,இந்தியா
2010-07-27 03:39:54 IST
இதற்கு முன்பு சென்றவர்கள் போரை எவ்வாறு விரைவில் முடிவிற்குக் கொண்டு வருவது என வழி காட்டவும் உதவவும் சென்றார்கள். முடிவிற்குக் கொண்டு வருவது என்றால் போரை நிறுத்துவது என நாம எண்ணிக் கொ்ண்டிருந்தோம். மக்களைக் கொனறொழித்து நாட்டை எரிகாடாக்கவும் சுடுகாட்டாக்கவும் புதைகாடாக்கவும் உள்ள வழிமுறைகளைச் சொல்லி வன்படைகளும் எரிகுண்டுகளும் கொத்துக் குண்டுகளும் வழங்கி மக்கள் இல்லா நாட்டை உருவாக்குவது. அதில் வெற்றியும் கண்டாரகள். இப்பொழுது செல்பவர் எவ்வளவு விரைவில் தமிழ்ப் பகுதிகளைச் சிங்களப் பகுதிகளாக மாற்றுவது, கண்துடைப்பு ஏமாற்று வேலைகளை எவ்வாறு திறமையாகச் செய்வது, கொத்தடிமைகளாகவே எவ்வாறு நடத்துவது என வழிகாட்டச் சென்றார் எனில், யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் நிலைதான் இந்தியத்திற்கு ஏற்படும். குழு அனுப்புவதாகச் சொல்லிததனி மனிதரை அனுப்புவதில் இருந்தே இந்தியத்தின் சறுக்கல் புரிகிறது. தமிழ் நலனுக்கு எதிராதமிழரல்லாத அதிகாரியை அனுப்பி என்ன பயன்? சாதனையாகச் சொல்லி மக்களை ஏமாற்ற உதவுமே!அதிகாரமில்லாத தூதரக, உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்து என்ன பயன்? பக்சேவின் விருந்தும் பரிசும் கிடைக்குமே! இந்திய உதவி / கண்காணிப்பு குறித்துச் சிங்களத் தலைவர்கள் பேசுவதே இதன் பயனின்மையைக் காட்டும். ஏமாற்றம் இன்றி மாற்றத்தை விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்...
மு.சதாசிவன். - Dubai,யூ.எஸ்.ஏ
2010-07-27 01:58:47 IST
கொல்லபடாமல் எத்தனை தமிழர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து சோனியாவுக்கு கொடுக்கவா? தமிழச்சிகளின் தாலி அறுத்த உங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு....
நாஞ்சிலான் - dammam,செனகல்
2010-07-27 01:14:43 IST
எதில்,எப்போது,எப்படி அரசியல் பண்ணனும் என்ற விவஸ்தையே கிடையாதா இவர்களுக்கு?அதிகாரி போய் எல்லாவற்றையும் சண்டாக்கி விட்டு தான் மறுஜோலி பார்ப்பார்!போய் ஆகிற காரியத்தை பாருங்க சார்!!... 
பாலா - nellai,இந்தியா
2010-07-27 21:29:49 IST
இந்த இரண்டு பெருசுகளுக்கும் தமிழன்னா இழக்காரமாய் போச்சி. உங்க ரெண்டுபேருக்கும் எங்களை குனியவச்சி கும்மி அடிக்கணும். நடத்துங்க உங்க கடித போக்குவரத்துகளை....
உண்மை விளம்பி - chennai,இந்தியா
2010-07-27 19:57:21 IST
காமெடி பீஸ்.......
மு.சதாசிவன். - Dubai,யூ.எஸ்.ஏ
2010-07-27 17:03:59 IST
ஐயா ஷாகுல் ஹமீது நம் நாட்டு மக்களையே நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் பிடியிலிருந்து காக்க துப்பில்லை உம் மன்மோஹனுக்கும், காங்கிரசுக்கும், இலங்கை தமிழர்களை காப்பாற்ற போகிறாராக்கும், தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும், சலுகை தருவதால் காங்கிரசுக்கு ஆதரவாக எதையும் எழுதி விடாதீர்கள். பாவம் மக்கள், பாவம் நம் பாதுகாப்பு படை வீரர்கள். உங்கள் வீட்டிலும் ஒரு பாதுகாப்பு படை வீரன் இருப்பதாக நினைத்து பார்த்து விட்டு எழுதுங்கள்....
தமிழ் - madurai,இந்தியா
2010-07-27 15:31:13 IST
ஐயா நீங்க அணைத்து அமைச்சர் களையும் கூட்டிட்டு இலங்கைக்கு போயிருங்க இந்தியாவாது தப்பிசுரும் !!...
பாவபட்டஜனம் - chennai,இந்தியா
2010-07-27 14:41:53 IST
முதல்வர் கடிதம் போட்டால் சும்மாதான்னு அர்த்தம்.முக்கியம் என்றால் அவர் டெல்லி சென்று விடுவார். பிரதமரும் சில காமெடி அறிக்கை விடுவார் அதுவும் சும்மா படம்தான். முட்டாள் ஜனங்க எல்லாம் முடிஞ்சா பிறகு அங்கே யாரை காபாதிறீங்க. ஜெய் ஹிந்த்...
Udayakumar - Abudhabi,இந்தியா
2010-07-27 14:16:12 IST
எலக்சன் வரும்போது மட்டும் இவனுக இப்படி எதாவது கத கட்டுவது மக்களுக்கு தெரியும்..இந்தியாவ சுடுகாடாக்குர வரைக்கும் இவனுக ஓய மாட்டாணுக.....
பாவபட்டஜனம் - chennai,இந்தியா
2010-07-27 13:54:41 IST
கலைஞர் சினிமா கதை அனுப்பினாலும் பிரதமர் ஆவன செய்வோம் என்று பதில் அனுப்புவார்.அவர் என்ன செய்வார். மேல கயறு ஆடும் வேகத்தில் ஆடுகிறார். எவ்வளவு காலமோ சுதந்திரம் எப்போது ஜெய் ஹிந்த்....
கோ.சக்திவேலு - RiyadhSaudiArabia,இந்தியா
2010-07-27 13:49:40 IST
நன்றி இலக்குவனார் திருவள்ளுவன், தொடரட்டும் உங்கள் இன உணர்வு பணி. இது போன்ற பல நாடகங்களை நாம் பார்த்து விட்டோம். இந்திய, இலங்கை கூட்டு சதிக்கு பல இலட்சம் ஈழ தமிழ் மறவர்களை பலிகொடுத்து விட்டோம். இன்னும் இந்திய அரசின் போக்கு மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதில் எந்த ஒரு உருப்படியான பலனும் ஏற்பட போவதில்லை....
ஜெய் - RasAlKhaimah,யூ.எஸ்.ஏ
2010-07-27 13:43:12 IST
இதை படித்ததும் எனக்கு ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருது......" காதருக்கிரத வேடிக்கை பார்த்துட்டு தண்டட்டி வாங்க சந்தைக்கு போனானாம் தாய்மாமன்".....சபாஷ் மன்மோகன் ஜி..!!...
Rakesh - Chennai,இந்தியா
2010-07-27 12:39:20 IST
வேண்டாம். நீங்கள் அசின், நாராயணன் போன்ற மலையாளியை உடனே அனுப்புங்கள். அவர் உடனே செய்தி அனுப்புவார்....
கார்தீசன் - jeddah,சவுதி அரேபியா
2010-07-27 12:04:16 IST
போய் நல்லா தின்னுட்டு தூங்கிட்டு வா??? சென்று வா மகனே!!!! தின்று வா மகனே!!!!...
சாகுல் ஹமீது - SALEM,இந்தியா
2010-07-27 11:29:46 IST
நண்பர் இலக்குவனார்,உங்களுக்கு நாட்டு இறையாண்மையில் நம்பிக்கை இல்லையா? இலங்கை ஒரு இறையாண்மை நாடு..இந்தியா தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகிக்க முடியாது..அன்பாக பேசி காரியம் முடிக்கலாம்.. தவிர ஆணையிடமுடியாது. ஒரு உள்நாட்டு பிரச்சினையில்..வெளிநாடு என்ன பண்ண முடியும்?.இலங்கை தமிழர் வாழ்வுக்காக போராடிய எத்தனை தமிழர் அமைப்புகளின் தலைவர்களை பிரபகாரன் கொன்றார்!!அமிர்தலிங்கம்,மாத்தையா,ஸ்ரீ சபாரத்தினம்,பத்மநாபன் இப்படி சொல்லி கொண்டே போகலாம்.கடைசியில் என் நாடு தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றார்கள். பிரபாகரனை ஆதரித்த மக்கள் அழிந்தார்கள்..எல்லோரும் அல்ல..மீதமுள்ள மக்களை மிஸ்டர் மன்மோகன் காப்பாற்றுவார்....
ராமதாஸ் சிதம்பரம் - singapore,இந்தியா
2010-07-27 10:19:50 IST
இந்த செய்தி ஒரு வாரத்திற்கு முன்னால் இதையே சொன்னார்கள். இப்பவும் இதேதான் சொல்லுராங்க ஒரு வாரமா அந்த மக்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியவில்லையா நம்மளால் ஒரு நாள் இருக்கமுடியுமா...
karuththapandi - ramanathapuram,இந்தியா
2010-07-27 08:42:08 IST
வேறொன்றும் இல்லை கருணாநிதி மன்மோகனுக்கு அடுத்த வருடம் எலக்சன் வருது. எனது மேல ரெம்ப பேரு கோபமாக இருக்கானுக. அதனால இலங்கைக்கு இந்தியாவிருந்து இலங்கையில் உள்ள தமிழ் பகுதிகளுக்கு ஒரு அதிகாரியை சும்மா கண்துடைப்புக்காக போக சொல்லுங்கள். அதை வச்சி இங்கு ஒரு நாடகம் அரங்கேற்றுவாறு அந்த அதிகாரி லங்காவுக்கு போயி தேயிலை டீ குடித்து விட்டு ராஜபட்சேவிடம் நன்றாக இருக்கு என்று சொல்லி விட்டு வருவார். அந்த அதிகாரியின் பெயர் சிவசங்கர மேனன்....



புதன், 14 ஜூலை, 2010


சிங்களம்  எண்ணுவதைத்தான்  இந்தியம் சொல்லும். தமிழின அழிப்பில் ஈருடல் ஓரெண்ணம் கொண்டவர்கள். அவ்வாறிருக்க இந்தியத்தைச் சிங்களம் எதிரொலித்தால்போதுமென்பது இந்தியா படைகள், படைக்கருவிகள்,அழிவுக் குண்டுகள் தந்து தமிழினத்தை  அழித்ததை மறந்து சொல்லும் பேச்சா?  வெட்கக்கேடான  கருத்து. தமிழ்மானம் காப்பாற்றப்பட, தமிழர் தாயகம் காப்பாற்றப்பட, அழித்தவர்கள் தண்டனை பெற, வன்கொடுமை நிறுத்தப்பட, போராளிகளும் பொதுமக்களும் ஈந்த உயிருக்கு மதிப்பு ஏற்பட, இவ்வணியினர் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என நன்கு புரிகின்றது.
கொலைகாரச் சிங்களத்துடன் கைகோக்குமாறு மிரட்டப்படத்தான் இந்தியா சென்றார்கள் போலும். தங்கள் கருத்தை வலியுறுத்தி வெற்றி காணமுடியாதவர்கள் சொல்லாடலுக்குச் செல்லக்கூடாது.எனவே, த.தே.கூ.யினர் இனியேனும் மனம் மாறி ஈழத்தமிழர் நலனில் மட்டும் கருத்து செலுத்த வேண்டும். கொலைக் கூட்டாளிகளை  நம்பிப் பயனில்லை என்பதை உணர வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


சனி, 20 மார்ச், 2010

தமிழகத்தில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிதான்



ஆரணி, மார்ச் 19: தமிழகத்தில் அடுத்து காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.கிருஷ்ணசாமி கூறினார். ஆரணியில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது: ஆரணியில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மார்ச் 28-ல் நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பங்கேற்கிறார். தற்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமை பெற்று வருகிறது. அடுத்த ஆட்சி காங்கிரஸ் ஆட்சிதான். தற்போது இளைஞர்கள் மத்தியில் ராகுல்காந்திக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஆகையால் இளைஞர்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கை, செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் ராகுலின் அணுகுமுறை ஆகியவை இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர தூண்டுகிறது. இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தேர்தல் வருவதற்குள் மீண்டும் ராகுல்காந்தி தமிழகம் வருவார். ராகுல்காந்தி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்வதன் மூலம் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.மாவட்டத் தலைவர் டி.பி.ஜே.ராஜாபாபு, மாநில சிறப்பு அழைப்பாளர்கள் பி. கருணாமூர்த்தி, அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மார்ச் 28-ம் தேதி நடைபெறவுள்ள மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணசாமி பங்கேற்றார்.
கருத்துக்கள்

கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு. அதுவும் ஒவ்வொரு காங்கிரசு எடுபிடிகளும் தங்களை வருங்கால முதல்வர எனக் கனவு காண்பதிலும் தடையில்லை. ஆனால் அனைவரையும் திடீரென்று சேர்க்க விரும்பினால் கீழ்ப்பாக்கத்தில் இடம் இருக்காது. கூரைஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம். அப்படித்தான் கனவு உள்ளது. கூட்டணி ஆட்சியில் பதவி வாங்கத் தெரியாதவர்கள தனித்து ஆட்சி அமைக்கப் போகிறார்களாம். இந்தியாவிலும் ஈழத்திலும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடராதிருக்க காங்கிரசு அடியோடு மண்ணைக் கவ்வ வேண்டும். இந்தியா வலிமையான கூட்டரசு நாடாகத் திகழ காங்கிரசுக் கட்சி இந்தியாவில் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டும். அதில் மனித நேயம் மிக்கவர்கள் இருப்பின் அதனை விட்டு வெளியேற வேண்டும். காங்கிரசு மறைந்த இந்தியா துன்பம் மறைந்த இந்தியா!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 10:26:00 AM

Mudiyala..............

By raj
3/20/2010 10:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்