வியாழன், 17 செப்டம்பர், 2009

தென்கச்சி சுவாமிநாதன் காலமானார்



சென்னை,செப். 16: சென்னை வானொலியில் 14 ஆண்டுகள் தொடர்ந்து ஒலிபரப்பான ""இன்று ஒரு தகவல்'' மூலம் லட்சோப லட்சம் நேயர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தென்கச்சி கோ. சுவாமிநாதன் (63) மாரடைப்பால் புதன்கிழமை காலமானார். அவருக்கு மனைவியும் மகளும் உண்டு. வேளாண்மைப் பட்டதாரியான சுவாமிநாதன், தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கினார். அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்ததால் அந்த ஊரின் பெயரைச் சுருக்கி "தென்கச்சி' என்று அழைக்கப்படலானார். 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஆசிரியராகி சென்னைக்கு வந்தார். பிறகு உதவி இயக்குநராக பணி ஓய்வு பெற்றார். சிறந்த எழுத்தாளராகவும், நகைச்சுவைப் பேச்சாளராகவும் திகழ்ந்த அவர் நல்ல சிந்தனையாளர். அவருடைய ஊரின் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

கருத்துக்கள்

வானொலி மூலம் பொது அறிவை நகைச்சுவையுணர்வுடன் ஊட்டியவர் மறைந்தது பேரிழப்பே! அவரது குடும்பத்தினருக்குத் தினமணி வாசகர்கள் சார்பாக இரங்கல்கள்.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2009 2:17:00 AM

It is a great loss to the radio lovers like me. May his soul rest in peace.

By Rajaguru
9/17/2009 2:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக