dmk govt லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
dmk govt லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 டிசம்பர், 2010

Govt. will change-raghul said: ஆட்சி மாற்றம் வரும்: ராகுல் காந்தி

உடனே ஆட்சிக்குக் காங். வரும் என  இராகுல் பேசவில்லை. முதலில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றால்தான் அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும்  என்கிறார். அவரைப் பொறுத்தவரை அவரது எண்ணம் சரிதான். ஆனால், மக்கள்  நலன் அடிப்படையில் காங்.அடியோடு வீழ்த்தப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஆட்சி மாற்றம் வரும்: ராகுல் காந்தி

First Published : 24 Dec 2010 01:08:53 AM IST


திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வியாழக்கிழமை நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற பிறகு அரங்கில் இருந்து வெளியேவரும் ராகுல் காந்தியை வாழ்த்த
திருப்பூர், டிச.23: "தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இளைஞர் சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். அதன்மூலமே ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் வரும். தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் உள்ளதை விரும்பவில்லை' என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல்காந்தி கூறினார்.  இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்த ராகுல், திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர் ஆகிய இடங்களில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியது:  125 ஆண்டுகள் வரலாறு கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி கடந்த 40 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இளைஞர் சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். அதன்மூலமே ஆட்சிமாற்றமும், அரசியல் மாற்றமும் வரும். இப்போது தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் உள்ளதை விரும்பவில்லை.  காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை ஏற்படுத்தி முதல்வர் பொறுப்புக்கு வர வேண்டும்.  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களாகியுள்ளனர். ஆனால், ஊராட்சித் தலைவர் பதவிகளை தவறவிட்டுவிட்டோம். எல்லா இடங்களிலும் காங்கிரûஸ முன்னிலைப்படுத்தும்போதுதான் ஆட்சியைப் பிடிக்க முடியும். அதற்கு கிராமப்புற ஏழை மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கப் போராட வேண்டும். அதைச் செய்யாமல் ஆட்சியைப் பிடிக்க முடியாது. தொடர்ந்து, ஊராட்சி, வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியினர் பொறுப்புக்கு வர வேண்டும். அதற்கடுத்து, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமின்றி முதல்வர் பதவியையும் கொடுப்பது எனது வேலை.  காங்கிரஸ் கட்சியிலிருந்த காந்தி, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் எளிமையாக வாழ்ந்து மக்களுக்காகப் பாடுபட்டனர். அத் தலைவர்களைப் போல் இங்கு பல இளைஞர்கள் உள்ளனர்.  தமிழக அரசியலில் மாற்றம் வர அத்தகையோர் முன்வர வேண்டும். தமிழகத்தில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்றினால் முதல்வர் பதவி தானாகவரும் என்றார்.  கூட்டத்தில் மிகக் குறைந்த அளவிலேயே பெண்கள் இருந்ததைக் கவனித்த ராகுல், இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்த இளம் பெண்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். பெண்கள் சக்தி இல்லாமல் எந்தவொரு இயக்கமும் வலுப்பெறாது. தமிழகத்தில் நடைபெறும் ஊராட்சி, வார்டு தேர்தல்களில் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றார்.  முன்னதாக திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:  கக்கன் தலித் சமூகத்துக்கு மட்டும் தலைவர் அல்ல; இந் நாட்டுக்கே தலைவர். அவர் எளிமையாக வாழ்ந்து காட்டினார். அவர் பணத்தையோ, புகழையோ சேர்க்கவில்லை. அதனால்தான் இன்றும் நாம் அவரைப் புகழ்ந்து பேசுகிறோம். அடுத்தமுறை நான் இங்கு வரும்போது உங்களில் பல கக்கன்களைப் பார்க்க வேண்டும். கக்கன் சிலைக்கு மாலை அணிவிப்பதுடன் திருப்தி அடைந்துவிட்டால், நாம் தோல்வியடைந்து விட்டோம் என்றே பொருள்.  முதுபெரும் தலைவர்களை பின்னுக்குத் தள்ள...: இளைஞர் காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டால், முதுபெரும் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ள முடியும். அதற்கு நாம் அடிப்படையில் பலமாக வேண்டும். அஸ்திவாரம் பலமாக இருந்தால்தான், ஒரு கட்டடம் பலமானதாக இருக்க முடியும். எனவே நாம் முதலில் கட்சியின் அடிமட்டத்தைப் பலப்படுத்த வேண்டும்.  தமிழகத்தில் பிற கட்சிகளின் கொள்கைகளை நாம் மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். அது தவறு. நமது கட்சிக் கொள்கையை மட்டுமே மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.  திருச்சியில்.... திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசியது:  அரசியல் மீது தமிழக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். எனவே, நல்ல தலைவர்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் நாம் ஏற்படுத்த வேண்டும்.  பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு சட்ட மசோதா மக்களவையில் விரைவில் நிறைவேறவுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேறினால் தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்ல தேசிய அளவிலும் பெண்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும் என்றார் ராகுல்.  திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசும்போது, எப்போதாவது வந்துவிட்டு போய்விட மாட்டேன். உங்களைச் சந்திக்க இனி அடிக்கடி வருவேன் என்றார் அவர்.

ஞாயிறு, 13 ஜூன், 2010

தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஜெயலலிதா



சென்னை, ஜூன் 12: தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர். விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும், அன்றாடம் கொலை, கொள்ளை ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும் நான் பொதுக்கூட்டங்களிலும், எனது அறிக்கைகளின் வாயிலாகவும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன். இதற்கேற்றாற் போல், சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மலைக்கோட்டை ரயில் இப்பகுதி வழியாக வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு தண்டவாளத்தில் குண்டு வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரும் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கும், தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது என்பதற்கும் இதுவே எடுத்துக்காட்டு. கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு பதிலாக சட்ட விரோதிகளின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைதி கலாசாரம் என்று இருந்த நிலை மாறி, ஆயுதக் கலாசாரம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்காட்லாந்து யார்டு போலீஸýக்கு நிகராக விளங்கிய தமிழகக் காவல் துறை, மற்றவர்கள் பார்த்து கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு இன்று கேலித் துறையாக செயலிழந்து காணப்படுகிறது. போலி மருந்து, காலாவதி மருந்து, போலி உணவுப் பொருட்கள், போலி மருத்துவர்கள், கடத்தல், பதுக்கல், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவைதான் தி.மு.க. ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள். சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு பதிலாக, சட்ட விரோத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டுள்ளது. தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடருமேயானால், சட்டம்-ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விடும். எனவே, மத்திய அரசு தனது கடமையை உணர்ந்து, விரைந்து செயல்பட்டு, தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழ்நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர்.
கருத்துக்கள்

கவிழ்ப்பு முயற்சி அழிவில் இருந்து மக்கள் காப்பாற்றப்பட்டதற்குப் பாராட்ட வேண்டும். நாச வேலைகளுக்காக ஆட்சிக் கவிழ்ப்பு என்றால் எல்லா மாநில ஆட்சியையும் கலைத்தாக வேண்டும். உலகெங்கும் இது போல் நடைபெறும் நாச வேலைகளைப் பார்க்கும் பொழுது உலக நாடுகளின் அனைத்து ஆட்சிகளையும் கவிழ்த்தாக வேண்டும். அஇஅதிமுக எந்த அளவிற்கு நல்ல எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறதோ அந்த அளவிற்குத்திமுக நல்ல ஆளுங்கட்சியாகச் செயல்படும். தமிழின அழிவைக் காப்பாற்ற அஇஅதிமுக முயன்றிருந்தால் நல்ல எதி்ர்க்கட்சியாகச் செயல்பட்டிருந்தால் ஈழத் தமிழர்களின் விதிவேறு வகையாக அமைந்திருக்கும். முதலில் செயலலிதா தன் கட்சியைப் பொறுப்புடனும் தமிழ் நல உணர்வுடனும் நடத்தட்டும். இயல்பாகவே அவர் நினைப்பது ஈடேறும் நாள் வரும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
6/13/2010 4:43:00 AM

DMK government is 1000 times better than ADMK....I would go one step further...it cannot be compared with ADML at all...JJ is losing out his party leaders....it is going get empty soon. DMK should and will win the next election...will continue its progressive policies and take tamilnadu to the next level. Whether we have the mind to accept it or not....but that is the fact. In other words...Truth.

By T.Gene
6/13/2010 3:31:00 AM

Posting the same stupid comment twice in a row doesn't make it the truth, Mr. Truth. Why do you even bother commenting when you don't even have the guts to publish your real name? One of the parasitic, blood sucking, beggar-minded tamil brahmin, Are you??? You can take your comment and shove it up your ass, you 'hapless' moron

By sundar selvaraj
6/13/2010 3:05:00 AM

Hapless DMK government should be sacked immediately. Otherwise terrible times are ahead for TN people in particular and Indians in general.

By Truth
6/13/2010 2:37:00 AM

Hapless DMK should be immediately. Otherwise terrible times are ahead for TN people in particular and Indians in general.

By Truth
6/13/2010 2:36:00 AM

Even if DMK government is dismissed, I don't think Jayalaithaa will win the election. But she will get a busy job in campaigning.

By raa
6/13/2010 1:52:00 AM

ADMK aatchiyai veeda DMK aatchi good. we need to countinue DMK rule in Tamilnadu.

By Paramasivam
6/13/2010 1:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சனி, 19 செப்டம்பர், 2009

திமுக அரசில் பங்கு கேட்பதில் தவறில்லை:
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

First Published : 19 Sep 2009 01:57:04 AM IST

Last Updated : 19 Sep 2009 11:55:08 AM IST

திருச்சி, செப். 18: "மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகிக்கிறது. அதுபோல, தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறல்ல' என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு அண்மையில் நிறைவேற்றிய தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் அமலுக்கு வந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும். இதனால் பெருமளவு பாதிப்பு ஏற்படும். எனவே, இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இலங்கையில் தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோட்டில் பெரியார் படத்துடன் பிரபாகரன் படத்தையும் சேர்த்து வைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பணம் தமிழகத்தில் ஏராளமான தமிழ் சினிமாக்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். நதிநீர் இணைப்பு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி கூறிய கருத்து அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். நதிநீர் இணைப்பது மூலம் ஏற்படும் பயன்களைப் போல, விளைவுகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எதையும் ஆராய்ந்து பார்க்காமல் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. பனையூர் இரட்டைக் கொலை வழக்கில் பிடிபட்டவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்திருப்பது காவல் துறையின் நடவடிக்கைகளில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.


கருத்துக்கள்

1967 இல் விரட்டப்பட்ட கொலைகாரக் காங்.கை அரியணையில் ஏற்றாதது கலைஞர் செய்யும் மிக நல்ல செயலாகும். ஒரு வேளை இவர்களுக்கு அமைச்சர் பதவிகள் அளித்தால் மேலும் புதிய சண்டைக் குழுக்கள் வரும் என சோனியா தடுத்திருந்தால் அவரும் பாராட்டிற்குரியவரே! அடிமைத்தனமும் வன்முறை அரசியலும் உடைய காங். தமிழ் நாட்டில் இருந்தே விரட்டியடிக்கப்பட்டால் அதுவே நமது நாட்டின் பொற்காலமாகும். திராவிடநாடு திராவிடருக்கே என்றும் பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்றும் புரட்சிக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். ஈழத்தமிழ் மக்களுக்கே தமிழ் ஈழம் எனக் குரல் கொடுத்துக் களப்போரில் இறங்கியவர் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். இருவர் படத்தையும் ஒருசேர வைத்தது மிகவும் பொருத்தமான செயலே. இதற்குக் காரணமானவர்களைப் பராட்டுவோம். ஆனால் இருவரின் பெயர்களையும் உச்சரிக்கக் கூட அருகதையற்றவர்கள் இது குறித்து கூறும் தகுதயுடையவர்கள் அல்லர். எனவே, சிங்கள அரசிடம் இருந்து பணம் வாங்கும் கைக்கூலிகள் குறித்து அரசு தக்க உசாவல் - விசாரணை - மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 2:54:00 PM

Maanam Ketta SRB, JJaya-vidam soram ponavane! 8% vote vachikkittu ADMK, DMK mudugila eri savari seyya vendiyathu, appuram kalai varui vittu ethir aniyil seruvathu, Nalla Congress karanna- Mullai periyaru, Cauvery thanni vaangi kodungalendaa paarkalam.. neenga mattum unga appanukke poranthirunthaaaa?????.Nee, intha vethu vettu Junior Ramadass EVKS ELANGOVAN, Dummi Thanga balu, Thothuttu Mandiriyaana PChidambaram, 20 varusama 1991-la irunthu ADMK,DMK dayavaal jeyikkum deposit kooda vaanga mudiyaatha Vellore Gnana Sekaran ungappanukke poranthirunthaa Rameswaram meenavar pirachanayil nalla mudivai vaangi kodungada paarkalam! Keduketta Congresskaranunga! Nanum arasiyalla irukken solla enga AMMA madiri oru arikkai 3 varusathukku appuram!

By Tanjore Tamilan
9/19/2009 2:42:00 PM

who is preventing Congress from insisting on DMK to give berth in TN Ministry? The deal between Congress and DMK is very clear. DMK will rule alone in TN with the support of Congress and at the Centre, coalition government. If Congress has the guts, let them stand alone or without support of DMK or AIADMK. There are plenty of other parties in TN for congress to have alignment under Congress.

By Anbarasi
9/19/2009 12:25:00 PM

அருமைத் தலைவர் எஸ்.ஆர்.பி. அவர்களே, இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள். உங்களைப் போன்ற நேர்மையான காங்கிரஸ்காரர்கள் குறிப்பாக நெல்லைக் கண்ணன், முக்தா சீனிவாசன், தமிழருவி மணியன் போன்றவர்கள் ஒதுங்கிவிட்டதால்தான் பலர் சண்டப் பிரசண்டம் செய்கிறார்கள். காங்கிரஸ் தமிழ் நாட்டில் வளர வேண்டுமானால் நீங்கள் எல்லாம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கூடா நடப்பை ஒழித்துக் கட்டி சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும். வேலூர் ஞானசேகரன், நாகை முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் ஆகியோர் இந்தக் கருத்தை ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியாததா நான் சொல்லப் போகிறேன். பெருந்தலைவரை எவ்வளவு கேவலமாகப் பேசியவர்கள் இவர்கள். இவர்களோடு பதவிக்காக கூட்டு என்றால் அவமானம். காமராஜர் ஆட்சி அமைய வேண்டுமானால் சுயமரியாதையோடு, காங்கிரஸ் பாரம்பரியத்தைக் காத்து தனித்து நிற்க வேண்டும். அது உங்களால் முடியும், செய்யுங்கள் ப்ளீஸ்.

By Adithyan
9/19/2009 11:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தில்லியில் 29 - ல் உண்ணாவிரதம்:
விஜயகாந்த் அறிவிப்பு



சென்னை, செப். 18: ""தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து செப்டம்பர் 29-ம் தேதி தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த அறிவித்துள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அரசின் அத்துமீறல் காரணமாக கடந்த 22 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன்பிறகு தமிழக அரசு தலையிட்டதன் பேரில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். படகுகள், வலைகளை சேதப்படுத்தி, மீன்களை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். செப்டம்பர் 16-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கிக் கட்டையால் தாக்கி கடத்தியுள்ளனர். ஒரு நாட்டின் எல்லையில் இருந்து மற்றொரு நாட்டின் எல்லைக்குள் மீனவர்கள் சென்றால் அவர்களை முறைப்படி கைது செய்து சம்பந்தப்பட்ட நாட்டுக்கு தெரிவிப்பது தான் உலகம் முழுவதும் கையாளப்படும் முறையாகும். சமீபத்தில் வழித் தவறிச் சென்ற தமிழக மீனவர்களை வங்கதேச அரசு கைது செய்து விடுதலை செய்துள்ளது. ஆனால் இலங்கை அரசு எத்தகைய நாகரித்தையும் கடைபிடிக்காத அரசு என்பதை உலகம் நன்கறியும். இலங்கை அரசுடன் 1974-ல் இந்திய அரசு செய்து கொண்ட கச்சத் தீவு ஒப்பந்தமே இத்தனை சிக்கல்களுக்கும் காரணம். இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு வரை இரண்டு நாடுகளின் மீனவர்களும் அமைதியாக மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஒப்பந்தம் போடும்போது சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தறிந்து செயல்படுவதே முறையாகும். ஆனால் தமிழக மீனவர்களைப் புறக்கணித்துவிட்டு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது ஜனநாயக விரோதச் செயலாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றிலும் அழித்து விட்டதாக இலங்கை அரசு பறைசாற்றுகிறது. ஆனாலும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்துகிறது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பறித்துவிட்டது. முதல்வர் கருணாநிதி அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது, இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்று கண்துடைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மெத்தனப் போக்கை மத்திய அரசு கையாண்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து எழும் அழுகுரல் தில்லியின் காதுகளில் விழுவதில்லை. தமிழக மீனவர்களின் அவலங்கள் தில்லியின் கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே செப்டம்பர் 29-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தில்லியில் தேமுதிக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் தமிழக நலனில் அக்கறை கொண்டவர்களும், மீனவர்களும் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுகொண்டுள்ளார்.

கருத்துக்கள்

விடுதலைப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை என்பது ஒரு போர்வையே தவிர சிங்கள அரசின் நோக்கம் தமிழர்களை ஒழிப்பதே. எனவே, விசயகாந்த்தின் போராட்டத்தில் பிறரும் பங்கேற்க வேண்டும். ஆனால் இவ்வாறு எத்தனையோ போராட்டங்கள் நடத்திய பின்பும்தான் இந்திய அரசின் உதவியால் ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்தது சிங்கள அரசு. எனவே, இதனால் பயன் ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசின போக்கு தொடரத்தான் செய்யும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *