editorial லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
editorial லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 டிசம்பர், 2013

அகரமுதல இணைய இதழ் 3 - இதழுரையும் பிறவும் akaramuthala editorial

சாதிக்கொரு நீதி- சரிதானா? முறைதானா? அறம்தானா? – இதழுரை


தண்டனை என்பது குற்றச்  செயலுக்கு என்பதே உலக நடைமுறை. அதுவும் “ஓர்ந்து கண்ணோடாது யார்மாட்டும் தேர்ந்து செய்”வதாக இருத்தல் வேண்டும் என்பதே தமிழ்மறையாம் திருக்குறள்(541) நமக்கிட்டுள்ள கட்டளை. ஆனால், யாரையேனும் தண்டித்தாக வேண்டும் என்பதற்காக அப்பாவிகளைத் தண்டிப்பதும் குறிப்பிட்ட யாரையாவது தண்டிக்கக்கூடாது என்பதற்காகக் குற்றவாளிகளை விடுதலை செய்வதுமான போக்கே நம் நாட்டில் நிலவுகிறது. sankararaman murder
இதற்கு அண்மையில் உள்ள சில சான்றுகளைக் குறிக்கலாம். இதனைத் தெரிவிப்பதன் காரணம், நீதிமன்றத்திற்கு எதிரான போக்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதல்ல. நீதி மன்றங்கள் தன்னளவில் ஆராய்ந்து, பிறரைச் சார்ந்து இயங்காமல், சிறப்பாக அறம் வழங்க வேண்டும் என்பற்குத்தான்.
   இறை நம்பிக்கை உடையவர்களையும் இந்து சமயத்தினரையும் மனிதநேயர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது  காஞ்சிபுரம் வரதராசபெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமர் படுகொலை செய்யப்பட்டது. 03.09.2004 மாலை 5.30 மணியளவில் இப்படுகொலை நடைபெற்றது.
     முதலில் போலிக்குற்றவாளிகள் சரணடைந்திருந்தாலும் பின்னர் உண்மையான குற்றவாளிகள் யார் என அறியப்பட்டது. அவர்கள்தான் செயேந்திரன், விசயேந்திரன் முதலான  25 பேர்கள் என நன்கறியப்பட்டது. மடத்தில் நடைபெற்ற தில்லுமுல்லுகளையும் கொலைகளையும் மடத்தலைவரின் கூடா ஒழுக்கங்களையும் கற்பழிப்புகளையும் அரசிற்கும் இதழ்களுக்கும் தெரிவித்து இறை நெறியைக் காப்பாற்றத் துடித்த சங்கரராமர் யாரால் கொலை செய்யப்பட்டிருக்க முடியும் என்பது எளிதில் ஊகிக்கத் தக்கதே! சங்கர மடம் உண்மையில் பிற்காலத்தைச் சேர்ந்த மடமே! பொதுவாக இதுவரை தெலுங்கு பேசுபவர்களே மடத்தின் தலைமைப்பீடத்தில் அமர்ந்து உள்ளமையால் தமிழர்கள் நலனுக்குச் சார்பானது எனச் சொல்ல முடியாது. இந்து சமயத்தின் தலைமை மடம் என்றும் சொல்ல இயலாது. ஒரு சாதிக்குரிய தனி மடம் என்றும் சொல்ல முடியாதபடி அதன் ஒரு பிரிவிற்கு உரியவர்களால் கொண்டாடப்படுவதே! ஆனால், தொடர் பரப்புரை மூலம் தேவையற்ற முதன்மை இதற்கு அளிக்கப்பட்டு வருகிறது.  செயேந்திரன் பெண்ஒருத்தியுடன் நேபாளம்  சென்றபொழுதே நல்ல முடிவாகக் கருதி ஏற்றிருக்க வேண்டும். கட்டாயப்படுத்தி மீண்டும் பொறுப்பேற்கச் செய்ததும் தவறுதான். ஆனால், உண்மையில் இந்து சமயத்தின்மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களும் இறைப்பற்று உள்ளவர்களும் அவதூறுகளுக்கு ஆளாகுவோரைப்  பொறுப்பிலிருந்து விலகச் செய்திருந்தால்  பெருமையாக இருந்திருக்கும். ஆனால், இவர்கள்தாம் இந்து சமயத்தைக் கட்டிக்காப்பதாக எண்ணி இவர் களைக்காப்பாற்ற முயன்றதுதான் தவறு.
   ஆக, இத்தகைய சூழலில் யார் குற்றவாளி எனப் பார்ப்பதைவிட யார் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்கான கருத்தோட்டத்தைச் செல்வாக்கு மிக்கவர்கள் திணித்து விட்டனர். சாதிப்பற்று இல்லாமல் இன்றைய முதல்வர் தம் முந்தைய ஆட்சியில் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்னும் நிலையை மதித்து நடவடிக்கை எடுததார். எனவேதான் செயேந்திரன்  தளையிடப்பட்டதும் செயேந்திரன், விசயேந்திரன் முதலானோர் மீது வழக்கு தொடுத்ததும் நிகழ்ந்தன. ஆனால், அடுத்து வந்த தலைவரோ, சூழலுக்கேற்ப ஆரியமும் தமிழும் முதன்மைப்படுத்தப்பட்டால் போதும் என்ற எண்ணத்தில், குற்றவாளிகள் கூறியதுபோல், தனிப்பட்டத் தகராறே வழக்கிற்குக் காரணம் என்பதுபோல் கருத்து தெரிவித்தார்.  அவர் தன் ஆட்சியில் செய்தக்க செய்யாமையால், சான்றுகூற வேண்டிய அனைவருமே தடம் புரண்டனர். கொலை செய்யப்பட்ட சங்கரராமரின் மனைவி,   தன்னிடம் மூவர்,  “சான்றுரையை மாற்றிச் சொல்லாவிட்டால் பிள்ளைகளை அமிலத் தொட்டியில் மூழ்கடித்து இல்லாமல் ஆக்கிவிடுவோம்” என  நீதிமன்ற  வளாகத்தி்லேயே  மிரட்டியதால் பிள்ளைகளையாவது காப்பாற்ற வேண்டும் என மாற்றிச் சான்று சொன்னதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு மிரட்டலுக்கும் செல்வாக்கிற்கும் அஞ்சி ஏறத்தாழ அனைவருமே பிறழ் சான்றுரையாளர்களாக மாறியதால், தீர்ப்பு சொல்வது கடினம்தான். ஆனால், போலிக்  குற்றவாளிகளைக் கண்டறிந்து உண்மைக்  குற்றவாளிகள் மீது வழக்கு தொடுக்கக் காரணமாக இருந்த  காவல்  கண்காணிப்பாளர் பிரேம்குமார் மீது கண்டனம் தெரிவிக்க தெரிந்த நீதி மன்றத்திற்கு -  அனைவரும் பிறழ் சான்றுரைஞர்களாக மாறியதில் இருந்தே குற்றவாளிகள் செல்வாக்கு மிக்கவர்கள் எனத் தெரிய வருவதைச் சுட்டிக் காட்டத் தெரியாமல் போனது ஏன்?  காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டிக்க மனம் வராதது ஏன்? குற்றவாளிகளின் நடவடிக்கைகளே குற்றத்தில் அவர்களுக்குப் பங்கிருப்பதை உணர்த்துவதாகக் குறிப்பிடாதது ஏன்? குற்றவாளிகளின் எந்தப் பிரிவினருக்கும் சிறு தண்டனைகூட வழங்காதது ஏன்? நீதிபதியுடனான பேரம் வெளிவந்த பின்னும் உரிய நடவடிக்கை  எடுக்காத காவல்துறையைப் பற்றி ஒன்றும் சொல்லாதது ஏன்?
 jayenthiran
   மக்கள்மன்றத்தில் எழுப்பப்படும் வினாக்கள் இவைதாம்.  எழுதப்பெற்ற சட்டங்களைவிட எழுதப்பெறாத  சாதிச்செல்வாக்கால் உருவாக்கப்பட்ட வழக்காறுதான்  மேலோங்கி உள்ளது என்பதற்கு இத்தீர்ப்பும் ஒரு சான்று. இது போன்ற எத்தனையோ தீர்ப்புகள் இதற்கு முன்னரும் வந்துள்ளன. சாதி ஒழியாதவரை  பின்னரும் வர இருக்கின்றன. சான்றுக்கு ஒன்றைமட்டும் சுட்டிக்காட்டினால் போதுமானதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
       இதேநாளில் 16 ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற படுகொலைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பீகாரில் உள்ள இலட்சுமண்பூர் பாத்தே என்னும்  சிற்றூரில், 1.12.1997  இரவு 58 தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள் 27 பெண்களும் 16 குழந்தைகளும் அடங்குவர். பூமிஃகார்கள் எனப்படும்  ஆரியவகுப்பினரின்  ஆயுதப் படையான இரண்வீர் சேனாவால்  இவர்கள் படுகொலைசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வந்தன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 7.10.2010 அன்று, பாட்னா அமர்வு நீதிபதி விசய் பிரகாசு மிசுரா, குற்றம் சாட்டப்பட்டவர்களில் பதினாறு பேருக்கு மரணத்தண்டனையும் பத்துபேருக்கு வாணாள்சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். ஒன்பது பேர்  குற்றம் மெய்ப்பிக்கப் படவில்லை என விடுதலை செய்யப்பட்டனர்.
  தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பாட்னா உயர் நீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்தனர்.  அந்தப் படுகொலை நடந்து 16 ஆண்டுகளுக்குப் பின் 9.10.2013 அன்று பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.என்சின்ஃகா, ஏ.கே. இலால் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர். சான்றுரைத்தவர்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி, தண்டிக்கப்பட்டவர்களுக்கு  ஐயத்தின் பயனை வழங்கி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளனர்.
       கடவுளின் குழந்தைகள் எனச் சொல்லப்படுபவர்களைக் கடவுளே காப்பாற்ற வராத பொழுது, பாவம், நீதிபதிகள் என்ன செய்ய இயலும்?
இவ்வாறெல்லாம் சாதிச் செல்வாக்காலும் பணப்  பேரத்தாலும் பதவி மிரட்டல்களாலும்  அறம் தவறுவதால் குற்றவாளிகள் தப்பிக்கின்றனர். என்றாலும் இதைவிடப் பெரும் அவலம், அப்பாவிகள் தண்டிக்கப்படுவதாகத்தானே இருக்க முடியும்? குற்றவாளிகள் என்று நன்கு அறியப்பட்டவர்களுக்கு ஐயத்தின் பயனை  வழங்கி  விடுதலை  செய்து தொலைக்கட்டும்! ஆனால், குற்றவாளிகள் இல்லை எனத் தெரிந்தும் ஏதோ நீதித் தேவதையைத் தாங்கள்தான்  காப்பாற்றுவதுபோல் அப்பாவிகைளத் தண்டிப்பது பெருங்கடேல்லவா?
இதற்கு எடுத்துக்காட்டாகப் பேரறிவாளர் முதலான  மூவர் நிலையைக் கூறலாம்.
   இராசீவு படுகொலை வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான நிகழ்வுதான். ஆனால், தமிழ்நாட்டில் கொலை நடந்ததென்பதற்காகத் தமிழ்ச்சாதியினர் தாக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும் இன்படுகொலைக்கு ஆளாவதும்  நாம் இவற்றிற்கு அமைதி காப்பதும் பெருங்கொடுமை அல்லவா? யாரையேனும் தண்டித்து ஆக  வேண்டும் என்பதற்காக அப்பாவிகளை வதைத்துக் கொடுமைபுரிந்து தூக்குத்தண்டனையும் வாங்கித் தந்துள்ளது மிகப்பேரவலம் அல்லவா?  அவர், கொலையுண்டபொழுது திடீரென்று காணாமல் போய் மிள வந்தவர்கள், மனித வெடிகுண்டிற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்,  அவரின் கூட்ட இடத்தை மாற்றியவர்கள் எனப்பலரும் வழக்கு வளையத்திற்குள் சிக்காத பொழுது அப்பாவிகளை மட்டும் தொடர்ந்து வதைப்பதேன்?  வழக்கு தொடர்பான பல ஆவணங்கள் மறைக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டும் கண்டுகொள்ளாமல போனது ஏன்? தீர்ப்பளித்த நீதிபதி, தலைமை வழக்கு அலுவலர் எனப் பலரும் இம்மூவரும் மரணத் தண்டடனைக்குரியவர்கள் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்ட பின்பும் விடாப்பிடியாகத் தூக்கு மரத்தில் இவர்களை ஏற்றச் சிலர் துடிப்பது ஏன்? ச.சாமிகள், சு.சாமிகள் என வழக்கில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் கட்டுப்பாடற்றுத் திரியும் பொழுது,  ஒரு பாவமும் அறியாத இவர்கள், மரணக்குழியில் தள்ளப்படுவது ஏன்?
அண்மையில் மத்தியப் புலனாய்வுப்பணியகத்தின் கண்காணிப்பாளராக இருந்த தியாகராசன் என்பார் தான்தான் பேரறிவாளரின் வாக்குமூலத்தில்  -  வெடிகுண்டிற்குப் பயன்படும் என அறிந்தே மின்கலன் வாங்கித் தந்ததாகத் -தவறான தகவலைச் சேர்த்ததாகவும் அதனால்தான் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்றும் திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுபோல்தான் பிற குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் பொய்யான வாக்குரைகளாலும், இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாலும் மரண வாயிலில் நிற்கின்றனர்.
எனவே, பேரறிவாளர், முருகன், சாந்தன், நளினி ஆகியோர் உடனே விடுதலை செய்யப்படுவதுதானே முறை! சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்றால் அவ்வாறுதானே நிகழ வேண்டும்!
மாறாக, ஒருபுறம் உண்மைக் குற்றவாளிகள் விடுதலை ஆவதும்,  அப்பாவிகளின் உயிர் பறிக்கப்படுவதும்  சரிதானா? முறைதானா? அறம்தானா?
“அகர முதல”
இதழ் 3
கார்த்திகை 15, தி.பி.2044
திசம்பர் 1, கி.பி.2013
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


இலங்கைக்குப் படைப்பயிற்சி – முதல்வர் எதிர்ப்பு

  இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சியளிப்பது தொடர்பான,  படைத்துறை ஒத்துழைப்புக் கொள்கையை மறு  ஆய்வு செய்யுமாறு  முதல்வர் செயலலிதா  தலைமையாளர் மன்மோகன்சிங்கிற்கு மடல் அனுப்பி உள்ளார். இந்தியக் கடற்படை சார்பில், நடத்தப்பெறும்  கடல்சார் பாதுகாப்பு தொழில் நுட்ப  நான்கு ஆண்டுகள்  பட்டப்படிப்பில் (பி.டெக்.), இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும்  மத்திய அரசு  இடம் அளிக்க உள்ளது.  . . .
. . . . . ..

தொழிற்பயிற்சி(ஐடிஐ) முடித்தவர்களுக்குக் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி

மொத்த  ஒழிவிடங்கள்: 402 அகவை வரம்பு : 30-11-2013  நாளன்று 35க்குள் இருக்க வேண்டும். . கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உரிய  பிரிவில்  தொழிற்பயிற்சி(ஐடிஐ) முடித்து தேசியப் பயிற்சிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 14000 நேர்முகத் தேர்வு,   செயல்முறைத் தேர்வு நடைபெறும்  நாள்: 16.12.2013 – 21.12.2013 வரை. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cochinshipyard.com <http://www.cochinshipyard.com> என்ற இணையத்தளத்தின் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி(ஆன்லைனில்) விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 15.12.2013

பாரத மின்நிறுவனத்தில்(BHEL) பொறியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள்

மொத்த  ஒழிவிடங்கள்:   38 அகவை வரம்பு 33 இற்குள் கல்வித்தகுதி பொறியாளர் பணி (15 இடங்கள்):  பொறியியல் துறையில் ஏதாவதொருபிரிவில் பட்டம்( B.E/ B.Tech) முடித்திருக்க வேண்டும். சம்பளம்:ரூ.43,550 மேற்பார்வையாளர் பணி(23 இடங்கள்):  60 %மதிப்பெண்களுடன் பட்டயம்  முடித்திருக்க வேண்டும். சம்பளம்:ரூ.21,690 இணைய வழி (ஆன்லைனில்) விண்ணப்பம் தொடங்கும் நாள் : 30.11.2013 இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 21.12.2013 அச்சுப்படி அஞ்சலில் சென்று சேரக் கடைசி  நாள்: 28.12.2013 முழு  விவரங்கள் அறிய www.bhel.com என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.

புதன், 17 ஏப்ரல், 2013

முற்பகல் செய்யின்...

நடுநிலையுடன் எழுதப்பட்டுள்ளது. கண்ணோட்டம் கொண்டு கனிவு காட்ட வேண்டியவர்களிடம் சட்டத்தைக்  கையிலெடுத்துக் கொண்டு தண்டிப்பதும் அறநெறியைப் பின்பற்றித் தண்டிக்க வேண்டியவர்களிடம் இன்னார்க்கு இனியர் என்னும்  சார்பு கொண்டு விடுவிப்பதும் நீதித் துறைக்கு அழகல்ல.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

முற்பகல் செய்யின்...

1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், ஆயுதம் பதுக்கிட உதவியதற்காக தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத், தான் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.
 இதற்காக அவர் சொல்லும் காரணம், திரைப்படம் எடுப்பதற்காக தன்னை ஒப்பந்தம் செய்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பணம் முதலீடு செய்துள்ளனர்; அவர்களுக்கான படத்தில் தனது காட்சிகள் ஒளிப்பதிவான பிறகு சிறை சென்றால், யாருக்கும் பொருளாதார இழப்பு ஏற்படாது என்பதால், காலஅவகாசத்தை நீட்டித்துத் தர வேண்டும் என்பது.
 இவரைப் போலவே, இதே மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதம் பதுக்கிட உதவிய குற்றத்துக்காக "தடா' நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜைபுன்னிசா காஸி என்கிற 71 வயது பெண்மணியும், தான் குடியரசுத் தலைவரிடம் தனக்கு பொதுமன்னிப்பு கோரியிருப்பதாகவும், அதன் முடிவு தெரியும்வரை தனக்கு  காலஅவகாசம் தேவை என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
 71 வயதான பெண்மணியின் மனுவை நிராகரித்துள்ள நிலையில், சஞ்சய் தத் மனுவையும் நீதிமன்றம் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், சஞ்சய் தத்துக்காகக் குரல் கொடுக்கவும், அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, படங்களை முடித்துக்கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளவும் "பாலிவுட்' (மும்பைத் திரையுலகம்) தயாராக இருக்கிறது. வடஇந்திய அரசியல் தலைவர்களும் ஆதரவாக இருக்கிறார்கள். ஆகவே, சமூகக் கருத்தும், ஊடகக் கருத்தும் எத்தகைய தாக்கத்தை நீதிமன்றத்துக்கு அளிக்கும் என்பதைச் சொல்வதற்கில்லை.
 இவ்வாறு தொழிலில் நட்டம் ஏற்படும் என்பதற்காக ஒருவர் சிறை செல்லும் காலத்தைத் தள்ளி வைக்கலாமா? இவ்வாறு ஒவ்வொரு குற்றவாளியும் தான் ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளை, உறுதிகூறிய ஒப்பந்தங்களை நிறைவேற்றிவிட்டு பிறகு வந்து சிறையில் இருக்கிறேன் என்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?
 சஞ்சய் தத், பிரபலமான திரையுலகக் கலைஞர்கள் சுநீல் தத்-நர்கீஸ் தம்பதியின் மகன் என்ற காரணத்தால்தான், அவர் மீது ஆயுதப் பதுக்கல் சட்டத்தில் மட்டும் தண்டனை அளிக்கப்பட்டது. மேலும், இவருக்கு நீதிமன்றம் அளித்த 6 ஆண்டு சிறைத் தண்டனை 5 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. இவருடைய திரையுலகப் புகழ்தான் இதற்குத் துணையாக இருந்தது.
 ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ள நிலையில், மேலும் சில ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நன்கு தெரிந்திருந்தும், அவர் ஏன் புதிய படவாய்ப்புகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்? இது தெரிந்தே ஒப்பந்தம் செய்ய திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்வந்திருந்தால், அது அவர்கள் எத்தகைய பொருளிழப்புக்கும் தயாராக இருந்திருக்கிறார்கள் என்றுதான் கொள்ளமுடியும்.
 தான் பொதுமன்னிப்பு கேட்கப் போவதில்லை, சிறைத் தண்டனையை அனுபவிப்பேன் என்று சஞ்சய் தத் பேட்டி அளித்தார். நீதிமன்றம் அனுமதித்துள்ள காலத்தில் சரணடைவேன் என்றும் கூறினார். தற்போது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நட்டம் ஏற்பட்டுவிடுமே என்பதற்காக அவர் ஏன் கவலைப்பட வேண்டும்?
 நடித்து முடிக்காவிட்டால் தயாரிப்பாளர்களுக்குப் பல கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்பது மெய்யாக இருந்தாலும், இதுபோன்ற கடப்பாடுகள் ஒரு நடிகருக்கு மட்டுமல்ல, குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை செல்லும் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கிறது. எல்லாரும் சிறை செல்வதற்குக் கால அவகாசம் கேட்கத் தொடங்கினால் என்ன ஆகும்?
 தன்னுடைய தற்காப்புக்காகத்தான் "ஏகே-56' துப்பாக்கியைத் திருட்டுத்தனமாக வாங்கியதாக சஞ்சய் தத் தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள திரையுலகப் பிரமுகர், மக்களவை உறுப்பினரின் மகன் சட்டவிரோதமாக லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கூடாது என்பதுகூடத் தெரியாமல் இருந்திருக்கிறார் என்பதை நம்பவா முடிகிறது? கேட்டால், தனிநபர்களுக்கு "ஏகே-56' துப்பாக்கிக்கு  "லைசென்ஸ்' வழங்கப்படாது என்பதால் அனுமதி பெறவில்லை என்று காரணம் வேறு கூறுகிறார்.
  அப்படியானால், தற்காப்புக்காக ஆளுக்கு ஆள் திருட்டுத்தனமாக ஆயுதங்கள் வாங்கி வைத்துக் கொள்வதா? அப்படியானால் தீவிரவாதிகள் பிடிபட்டால், தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக் கொண்டிருந்ததாக வாதிடலாமே, இது என்ன முட்டாள்தனமான வாதம்.
 தற்காப்புக்காகத் துப்பாக்கி வைத்திருந்ததால் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 96-வது பிரிவின்கீழ் சஞ்சய் தத் குற்றமற்றவர் என்று சாந்தி பூஷண் போன்ற பிரபல வழக்கறிஞர்கள் அவருக்கு வக்காலத்து வேறு வாங்குகிறார்கள்.
 லைசென்ஸ் இல்லாமல் தற்காப்புக்காக ஓர் ஆயுதம் வைத்துக் கொண்டிருந்ததற்காக ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையா என்று கேள்வி எழுப்புவது அபத்தம். "கலாஷ்னிகோவ்' எனப்படும் "ஏகே-56' ரகத் துப்பாக்கியைத் திருட்டுத்தனமாக வைத்திருந்தால், அதற்காக குறைந்தபட்ச சிறைத் தண்டனை ஆறு ஆண்டுகள்.  அதையேகூட ஐந்தாகக் குறைத்திருக்கிறார்கள்.
 அதிலும், மும்பை தொடர் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களில் ஒன்று சஞ்சய் தத்திடமிருந்த "ஏகே-56' எனும்போது, தண்டிக்கப்படுவதுதானே நியாயம்? இந்த ஆயுதம் மும்பை குண்டு வெடிப்பு கும்பலுக்கான ஆயுதங்களில் ஒன்று என்று தனக்குத் தெரியாது என்கிறார் சஞ்சய் தத். இருக்கலாம். "லைசென்ஸ்' இல்லாமல், திருட்டுத்தனமாக ஆயுதங்களைப் பெறுபவர்கள் அப்படியொரு சிக்கல் வரக்கூடும் என்று எதிர்பார்க்காதது யார் தவறு?
 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட வேண்டுமானால், சஞ்சய் தத் போன்ற பிரபலங்கள் தவறு செய்தால் இரட்டிப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவரவர் லாப நஷ்டங்களுக்காகத் தண்டனையைத் தள்ளிப்போடக் கேட்பதும் அதற்கு ஆதரவுக் குரல் எழுப்புவதும் சட்டத்தின் ஆட்சியையே கேலிக்கூத்தாக்கும் செயல்!

கருத்துகள்(13)

நடுநிலையுடன் மக்களின் பக்கம் நின்று தலையங்கம் எழுதியதுக்காக தினமணிக்கு நன்றி! பிரபலமாக இருந்தால் எந்த சட்டத்தையும் வளைத்துவிடலாம் என்று இருப்பது ஒருவகை திமிர்த்தனம். அப்படிப்பட்டவர் மாட்டிக்கொண்டால் சிறைக்கு செல்லாமல் சப்பை கட்டு கட்டிக்கொண்டிருக்கிருப்பது கோழைத்தனம். இவருக்கு வக்காலத்து வாங்கி அனுதாபம் தேட முயற்சி செய்வது அயோக்கியத்தனம். உண்மை குற்றவாளியை மட்டுமல்லாமல் இவர்போன்ற அலட்சிய மனோபாவம் உள்ளவரையும் சிறையிலடைத்தால் தான் சாமான்யர்களுக்கு சட்டத்தின் மீதும் தெய்வத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும்.
நல்ல தலையங்கம் ! ஒரு சினிமா நடிகர் தன்னை நம்பி முதல் போட்டவர்கள் நட்டம் அடையக்கூடாஹு என்பதற்காக கோர்ட்டில் சரண் அடைய " டைம் " கேட்டகிறார் ! இதை " கட்ஜு " போன்றோர் ஆதரிக்கின்றனர் ! இதே போல் " குடும்பத்தை காப்பாற்ற சின்ன குற்றம் புரிந்தவர்கள் சாதாரண மக்கள் தாங்கள் தனனையை "தன மகன் படிக்கிறான் ,மகள் படிக்கிறார்,அதனால் அவர்கள் படித்து முடிந்து வேலை கிடைத்தப்பின் ஜெயில் வாசம் செய்கிறேன் " என்றால் ""கோர்ட் " ஒப்புக்கொள்ளுமா ?
சஞ்சய் தத் ஒரு நடிகன் என்பதால் கருணை காட்டுவது மிகவும் கேவலமான செயல் . குற்றவாளி குற்றவாளிதான் . இன்னும் சொன்னால் இவரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகள் முருகன் , பேரறிவாளன் ஒரே மாதிரி தான் . ஏன் சஞ்சய் தத்துக்கு தூக்கு தண்டனை வழங்கவில்லை ? நடிகன் என்பதாலா ? அல்லது மும்பையில் இறந்தவர்கள் சாதாரண குடிமக்கள் என்பதாலா ? அல்லது முருகன் , பேரறிவாளன் தமிழர்கள் என்பதால் தூக்கு தண்டனையா ? வடநாட்டு அரசியல்வாதிகள் , மார்கண்டேய கட்ஜு சஞ்சய் தத்துக்கு ஆதரவு ஏன் ? பிராந்திய பற்றா ? முருகன் , பேரறிவாளன் ஆகியோருக்கும் 5 வருட தண்டனை வழங்கவேண்டும் .
சில சமயம் பெரிய மனிதர்கள் என்றும், அறிவு நிரம்பியவர்கள் என்றும் நாம் நினைதிர்க்கும் பலர், சிறு பிள்ளை தனமாக, அல்லது வெண்டுமெண்டெயொ பேசுவது போல் இருக்கிறது. சந்தர்ப்ப வாதம் , பிழைக்கும் வழி என்பது இது தான் போலிருக்கிறது . பணமும், பதவியும், ஆள் பலமும் உள்ளவர்கள் எதையும் கேட்பார்கள். சில பாறைகளை உடைக்கும் detonator வைத்திருப்பதே தப்பு என்னும்போது AK 56?
இந்திய நீதித்துறை செயற்படும்விதமே கேலிக்குரியது. ஏகே-56 துப்பாக்கி மற்றும் ஆயதங்களை பதுக்கி வைத்திருந்த சஞ்சய் தத்திற்கு 5 ஆண்டுகள் மட்டுமே சிறை. அதிலும் சிறைத்தண்டனையை பிற்போடக் கோரும் மனு பரிசீலனையில். ஆனால் ஒரு பற்றறி வாங்கிகொடுத்த பேரறிவாளனுக்கு தூக்குத்தண்டனை (நிச்சயமாக ராஜீவ் காந்தியின் கொலையாளிகள் தங்கள் திட்டத்தை பேரறிவாளனுக்குத் தெரிவித்திருக்க மாட்டார்கள்).
..நல்ல தலையங்கம் ! தான் ஜெயில் வாசம் செய்ய வேண்டிய காலத்தில் கோடி கோடி பணம் சம்பாதிக்க சஞ்சய் தத் பண முதலீட் செய்தவர்களை இழுக்கிறார் ! " இந்தியர்கள் முட்டாள் வாக்காளர்கள் " என்று கூறிய கட்ஜு அவருக்கு சப்போர்ட் !! " ஏழ்மை நிலையால் தன குடும்பத்தை காப்பாற்ற சின்ன திருட்டு செய்த ஒருவரும் இனி ஜட்ஜ் இடம்' தான் ஜெயிலுக்கு போவதை தான் குழந்தைகள் படித்து முடிக்கும் வரை போஸ்ட் போன் செய்ய வேண்டலாம் ' !
..நல்ல தலையங்கம் ! தான் ஜெயில் வாசம் செய்ய வேண்டிய காலத்தில் கோடி கோடி பணம் சம்பாதிக்க சஞ்சய் தத் பண முதலீட் செய்தவர்களை இழுக்கிறார் ! " இந்தியர்கள் முட்டாள் வாக்காளர்கள் " என்று கூறிய கட்ஜு அவருக்கு சப்போர்ட் !! " ஏழ்மை நிலையால் தன குடும்பத்தை காப்பாற்ற சின்ன திருட்டு செய்த ஒருவரும் இனி ஜட்ஜ் இடம்' தான் ஜெயிலுக்கு போவதை தான் குழந்தைகள் படித்து முடிக்கும் வரை போஸ்ட் போன் செய்ய வேண்டலாம் ' !
அடுத்து இந்திய குற்றவியல் சட்டம் நடிகர்களுக்கு பொருந்தாது என சட்டமியற்ற கோருவார்கள்
இது எல்லாம் அரசியல் விளையாட்டு . நாம் என்னதான் கூறினாலும் செவிடன் காதில் ஊதூம் சங்கு போல தான். சஞ்ச தத் சிறை செல்லத்தான் வேண்டும். இதில் மாற்று கருத்து என்பது இல்லை.
இவருக்காக நம் சூப்பர் ஸ்டார் ரஜினி வேறு வக்காலத்து வாங்கி இருக்கிறதை என்னவென்று சொல்வது..

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

இனியும் ஏன் தயக்கம்?

இனியும் ஏன் தயக்கம்?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள ஆவணப் படங்கள், இங்கிலாந்தின் "சேனல்-4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி, உலகமெங்கும் தமிழர் மனங்களில் அதிர்ச்சி, வேதனை, கோபம் என உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னிரண்டு வயதுச் சிறுவன், கைதொடும் தொலைவில் துப்பாக்கியால் சுடப்படுவதை, "தாக்குதலுக்கு இடையே சிக்கி' இறந்ததாக யாராலும் சொல்ல முடியாது. ஆனாலும் இலங்கை அரசு இதை மறுக்கிறது. இலங்கை அரசின் இந்தியத் தூதரக அதிகாரி கரியவாசம், "இந்தப் படங்கள் கணினித் திரிபு படங்கள்' என்கிறார். இந்தப் பிரச்னையில் சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறிய அவர், பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொல்லவில்லை என்றும் சொல்கிறார்.
என்னதான் சொல்ல வருகிறார் இலங்கைத் தூதர் கரியவாசம்? உலக அனுதாபம் பெறுவதற்காக, விடுதலைப்புலிகளே பாலசந்திரனைக் கொன்றிருக்கலாம் என்று சொல்கிறாரா? அது நம்பும்படியாகவா இருக்கிறது?
"போர்நிறுத்தப் பகுதி: இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் காட்சிகள் குறித்த தடயவியல் ஆய்வுகள் சொல்லும் உண்மை- "இவை கணினித்திரிபு படங்கள் அல்ல; இவை ஒரே கேமராவில் எடுக்கப்பட்டவை' என்பதுதான்.
அம்பலம் ஏறியுள்ள இந்த ஆவணத்தை, "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டார்' என்பதைக் கடந்து, இலங்கை ராணுவத்திடம் சிக்கிய சிறுவர்களும் பெண்களும் இவ்வாறுதான் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான போர்க்குற்ற ஆவணமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கை ராணுவம், தனது கடைசி கட்டப் போரில், வெற்றியைத் தொட்டுவிட்ட மமதையுடன், எந்த வரையறையும் கட்டுப்பாடும் இல்லாமல் வெறித்தனமாகச் செயல்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியமாக இது பார்க்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று காரணம் கூறிக்கொண்டு, ஒட்டுமொத்தமாக அனைவரின் மீதும் தாக்குதல் நடத்திய இலங்கை ராணுவத்தின் வெறியினால்தான் குழந்தைகளும் பெண்களும் மிக அதிக எண்ணிக்கையில் இறந்தனர். இலங்கை அரசின் பாஷையில் சொல்வதாக இருந்தால் - "காணாமல் போயினர்'!
அப்பட்டமான போர்க்குற்றத்தின் சாட்சியாக, பாலச்சந்திரன் கொல்லப்பட்ட நிழற்பட ஆவணங்கள் அமைந்துள்ளன. இலங்கையின் கடைசிநேர அழித்தொழிப்புப் போரின் அத்துமீறல்கள் குறித்து முழு விசாரணை நடத்திடவும், இத்தகைய போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவும் வேண்டும் என்பதே அனைவரின் குரலாக இருக்கிறது.
இந்த ஆவணப்படத்தைக் கண்ட தமிழ்நாட்டின் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, இலங்கையில் நடப்பது "ஹிட்லர் ஆட்சி' என்று கடுமையாகக் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கொண்டுவர இருக்கும் கண்டனத் தீர்மானத்தின்போது "இலங்கையை இந்தியா காப்பாற்ற முயலக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தப் போர்க்குற்றம் குறித்து இந்திய அரசின் கருத்து என்ன என்பது பற்றி இதுவரை மத்திய அரசு கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் சொல்லிலடங்கா போர்க்குற்றங்கள் செய்த அமெரிக்காவே, இலங்கை அரசின் போர்க்குற்றத்துக்காக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரும் என்றால், ஏன் இத்தீர்மானத்தை எந்தப் போர்க்குற்றமும் செய்யாத இந்தியாவே கொண்டுவரக்கூடாது? இலங்கைத் தமிழர்களைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா?
இலங்கையில், குறிப்பாக வட இலங்கையில் மறு நிர்மாணப் பணிக்காகப் பல நூறு கோடி ரூபாய் நிதியுதவி செய்வதோடு இந்தியாவின் கடமை முடிந்து விடாது. போர் ஓய்ந்த நிலையிலும், தமிழர்கள் வீடுகள் இல்லாமல், பள்ளிகளும் ஆசிரியர்களும் இல்லாமல், மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இல்லாமல் வடகிழக்கு மாகாணத்தில் இப்போதும் வேதனை தொடர வாழ்கிறார்கள்.
தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபட்ச வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அத்தோடு தமிழர் ஆட்சியும், தமிழர் அரசியலும்கூட இல்லாமல் செய்யும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி, எல்லாப் பகுதியிலும் அவர்கள் சிறுபான்மையினராக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
வடகிழக்கு மாகாணத்தில் தமிழர் மட்டுமே இருப்பதால்தான் தமிழ் எம்.பி.-க்கள் தேர்வாகிறார்கள். இந்த நிலைமையைத் தகர்க்க, சிங்களர்களைக் குடியேற்றி, தமிழர் வாக்குவங்கியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இலங்கை அரசு. ஊர்களின் தமிழ்ப் பெயர்களை சிங்களத்துக்கு மாற்றி, சிங்களர் குடியேற ஊக்கப்படுத்துகின்றது. அடுத்த பத்தாண்டுகளில் வடகிழக்கு மாகாணத்தில் தேர்வு செய்யப்படும் எம்பி-க்களில் தமிழர்கள் பாதியாகக் குறைந்துபோவார்கள். அரசியல் பங்களிப்பிலும் தமிழர்கள் இல்லாமல் ஒடுக்குவதுடன் நின்றுவிடாமல், தமிழர்களை வெறும் மொழிச் சிறுபான்மையினராக மாற்றும் பணியில் ராஜபட்ச அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
ஒட்டுமொத்தத் தமிழகத்தின், உலகளாவிய தமிழர்களின் கோரிக்கையை மன்மோகன் சிங் அரசு ஏற்று செயல்படப்போகிறதா, இல்லை போர்க்குற்றவாளியாக உலகமே கருதும் இலங்கை அதிபர் ராஜபட்சவின் பாதுகாவலர்களாக இருந்து அவரைக் காப்பாற்றப் போகிறதா என்பதுதான் கேள்வி. இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பிறகும் இனியும் ஏன் தயக்கம்?

வியாழன், 11 அக்டோபர், 2012

விதியே... விதியே...!

விதியே... விதியே...!

First Published : 10 October 2012 01:51 AM IST
காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்படும் (வினாடிக்கு 9,000 கனஅடி) நீரின் அளவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கர்நாடகத்தின் கோரிக்கையை, நீதிமன்றமும் பிரதமரும் நிராகரித்த அதே நாளில், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறந்து விட்டுக்கொண்டிருந்த, வினாடிக்கு 9,823 கனஅடி தண்ணீரை நிறுத்தியுள்ளது கர்நாடக அரசு!
 இச்செயல் நீதிமன்றத்தையும், காவிரி நதிநீர் ஆணையத்தையும் ஒருசேர அவமதிக்கும் செயல் என்று மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தும் கர்நாடக அரசு இந்த அளவுக்குத் துணிந்திருக்கிறது என்றால் அந்த தைரியம் எங்கிருந்து வந்தது? இச்செயலை முன்வைத்து ஆட்சியைக் கலைக்கலாம், அணையை மத்திய அரசு தன்பொறுப்பில் எடுத்துக்கொள்ளலாம் என்கிற அச்ச உணர்வே இல்லாமல் அடாவடி நடவடிக்கையில் கர்நாடக அரசு இறங்கியது ஏன்?
 "இது பிரதமர் என்ற நிலையில் அளிக்கப்பட்ட உத்தரவு அல்ல, உடனே மாற்றுவதற்கு; காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவு. அக்டோபர் 11-ஆம் தேதி மீண்டும் கூடும்போது, இதுகுறித்துப் பேசுவோம், நிலைமைகளை ஆராய்ந்து முடிவு எடுப்போம்' என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
 "காவிரி நதிநீர் ஆணையத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியவர் அதன் தலைவர்தான்.  உச்ச நீதிமன்றம் அல்ல; அவரது உத்தரவுக்கு நீதிமன்றம் இடையூறாக இருக்காது' என்று உச்ச நீதிமன்றமும் தெளிவாகக் கூறியதுடன், காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்துக்கு மறுநாள் (அக்டோபர் 12-ஆம் தேதிக்கு) இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தது.
 அக்டோபர் 11-ஆம் தேதிக்கு மூன்று நாள்களே உள்ள நிலையில், ஏன் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் விடுவதை நிறுத்த வேண்டும்?
 கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை என்று காரணம்காட்டித் தங்கள் செயலைக் கர்நாடக அரசு நியாயப்படுத்தவே முடியாது. அக்டோபர் 8-ஆம் தேதி மாலை நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 104.92 அடி தண்ணீர் இருந்தது. (மொத்த உயரம் 124.8 அடி). கபினி அணையில் (கடல்மட்டத்திலிருந்து) 2268.50 அடிக்கு தண்ணீர் இருந்தது. மொத்த உயரம் 2284 அடி. ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 72.05 அடியாகத்தான் இருந்தது. கடந்த ஒரு மாதமாக இந்த உயரத்துக்கு மேலாக நீர்மட்டம் உயரவே இல்லை.
 அக்டோபர் 8-ஆம் தேதி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கனஅடி வந்து கொண்டிருந்ததற்குக் காரணம், பருவமழையால் வந்த மிகைநீர். மழை நின்றவுடன் இந்த நீர்வரத்தும் நின்றுபோகும். மேட்டூர் அணையின் நீர் மட்டம் இந்தப் பருவமழையால் ஒரே நாளில் 100 அடிக்கு உயர்ந்துவிடும் என்பதுபோல கர்நாடக அரசு சொல்வதும் உண்மையல்ல.
 கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் அது தனக்கு மட்டுமே சொந்தம் என்ற மனநிலையில், இத்தனை தைரியத்துடன், பிரதமர் ஆணையை மீறி, தண்ணீரை நிறுத்தக் காரணம், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கன்னட அமைப்புகளும் மட்டுமே!
 கர்நாடக ஆளும் கட்சியான பாஜக தலைவர்கள் 16 பேர் குழுவாகச் சென்று பிரதமரைச் சந்திக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மாநிலத்தின் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், தான் பாஜக கட்சி என்பதைப் பொருட்படுத்தாமல், காங்கிரஸ் கட்சித் தலைவரான மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்திக்கிறார். மல்லிகார்ஜுன கார்கேயும் கிருஷ்ணாவும் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் பிரதமரைச் சந்தித்து தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை நிறுத்துங்கள் என்று வலியுறுத்துகிறார்கள்.
  அதேவேளையில், இங்கே தமிழக அரசியல் கட்சிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? ஆளும்கட்சி அதிமுக தனித்துவிடப்பட்டுள்ளது. புதுதில்லியில் அதன் குரலுக்கு வலு இல்லை. மற்றபடி, தமிழகத்தைச் சேர்ந்த வேட்டி கட்டிய மத்திய அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்?
 கர்நாடக அரசியல் கட்சிகள் பிரதமரைச் சந்தித்தால் அவர்களும் தமிழகத்தின் பிரதிநிதிகளாகச் சென்று, எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டாமா? ஆளும் அதிமுகவுக்கு கெட்டபெயர் வரட்டும் என்று வாளாவிருப்பார்கள் என்றால், கர்நாடகம் எப்படி தமிழ்நாட்டை மதிக்கும்? தண்ணீரைத் திறந்துவிடும்?
 கர்நாடகத்தில் காங்கிரஸ் அல்லது பாஜக இரு கூட்டணிகளைத் தவிர வேறு கட்சி ஆட்சி வருவது அரிது; விரைவில் கர்நாடக மாநிலத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மக்களைச் சந்திக்க ஏதுவாக இத்தகைய நாடகங்களை நடத்துவதாகச் சொல்லலாம். அந்த வாதம் உண்மையாகவே இருப்பினும்கூட, காவிரிப் பிரச்னையில் மக்களைச் சந்தித்தாக வேண்டும் என்ற எண்ணம், அங்குள்ள பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியோருக்கு இருப்பதைப்போல, ஏன் தமிழக காங்கிரஸýக்கும், திமுகவுக்கும் இல்லை?
 ஏனென்றால், "காவிரிப் பிரச்னையில் அதிமுக ஒன்றும் செய்யவில்லை என்பது கிடக்கட்டும், மத்திய அரசில் ஆட்சிச் சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்த நீங்கள் செய்தது என்ன?" என்று காங்கிரûஸயும், திமுகவையும் கேள்வி கேட்கும் தமிழன் தமிழ்நாட்டில் இல்லை.
 மாநிலத்தில் ஆட்சிசெய்தபோதும், மத்திய அரசில் இடம்பெற்ற போதும் அரசியல் சுயலாபத்துக்காகத் தமிழனை பலவீனப்படுத்தி, கர்நாடகமும், கேரளமும் நம்மை ஏளனம் செய்யும் நிலைக்கு ஆளாக்கிய அரசியல் கட்சிகளைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாத தமிழன்தான் தமிழ்நாட்டுக்கு எதிரி.
 மூத்த அமைச்சர்களான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் உள்ள உணர்வு, ப. சிதம்பரத்துக்கும், ஜி.கே. வாசனுக்கும், ஜெயந்தி நடராஜனுக்கும், திமுக தலைவரின் மூத்த வாரிசு மு.க. அழகிரிக்கும், ஏனைய திமுக அமைச்சர்களுக்கும் ஏன் இல்லை? இவர்களைத் தேர்ந்தெடுத்த நம்மை நாமே நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
 கர்நாடகத்தில் அரசியல்சட்டப் பிரிவு 356-ஐ பிரயோகித்து அரசைக் கலைத்திட வேண்டும் என்று  அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும், அதை மத்திய அரசை ஆளும் கூட்டணியினால் செய்ய முடியாது என்பதும், அப்படிச் செய்தால் அது காங்கிரஸýக்கு எதிராக அங்கே பாஜகவைப் பலப்படுத்திவிடும் என்பதும் மற்ற கட்சிகள் எதிர்க்கும் என்பதும்! நாளை யாரும் திமுகவைக் குறை சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு காகித ஓடத்தை வறண்ட காவிரியில் விடுகிறார் திமுக தலைவர் கருணாநிதி.
 தமிழகம் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சொல்லப்படும் தீர்ப்பினால் நன்மை ஏற்படலாமே தவிர, தமிழக அரசியல் கட்சிகளால் தமிழனுக்கு நன்மை கிடைக்காது.
  அன்று மகாகவி பாரதி இந்த நடிப்பு சுதேசிகளுக்காகத்தான் "நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வாரடீ, கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி...!' என்று பாடினான் போலிருக்கிறது!


கருத்துகள்(36)

"நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வாரடீ, கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி...!' என்று பாடியது மட்டும் இல்லாமல் அவர்தம் முகத்தில் காரி உமிழ்ந்து இர்ருப்பன்,
தமிழகம் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சொல்லப்படும் தீர்ப்பினால் நன்மை ஏற்படலாமே தவிர, தமிழக அரசியல் கட்சிகளால் தமிழனுக்கு நன்மை கிடைக்காது.மாநிலத்தில் ஆட்சிசெய்தபோதும், மத்திய அரசில் இடம்பெற்ற போதும் அரசியல் சுயலாபத்துக்காகத் தமிழனை பலவீனப்படுத்தி, கர்நாடகமும், கேரளமும் நம்மை ஏளனம் செய்யும் நிலைக்கு ஆளாக்கிய அரசியல் கட்சிகளைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாத தமிழன்தான் தமிழ்நாட்டுக்கு எதிரி.

ஒட்டுண்ணிகள்!

ஒட்டுண்ணிகள்!

First Published : 09 October 2012 05:17 AM IST
காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா என்ன தொழில் செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அவரை ""வெற்றிகளைக் குவிக்கும் வியாபாரி. அரசியலுக்கு மாற மாட்டார்'' என்று பிரியங்கா தெரிவித்தபோது என்ன தொழில் செய்கிறார் என்று யாரும் கேட்கவில்லை. இப்போது "உங்கள் தொழில் என்ன? உங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள் வந்தன?' என்று "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் தலைவர் கேஜரிவால் மற்றும் பிரசாந்த் பூஷண் இருவரும் கேட்கிறார்கள் என்றால், அதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.
 "வெறும் ரூ. 50 லட்சம் முதலீட்டில் தொடங்கிய தொழில் இப்போது ரூ.300 கோடிக்கும் மேலாக மதிப்பு பெற்றது எப்படி?' என்று கேட்கும் கேஜரிவால், இதுவரை ராபர்ட் வதேரா நடத்தும் நிறுவனங்கள் வாங்கியுள்ள சொத்துகள் குறித்த விவரங்களையும், "இந்த சொத்துகள் ஏன் சந்தை மதிப்பைவிடக் குறைவான விலையில் உங்களுக்கு விற்கப்பட்டன? எந்த அடிப்படையில் இந்தச் சொத்துகளை வாங்கக் கடன் அளிக்கப்பட்டது?' என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்கின்றார்.
 இந்தியாவின் மிகப்பெரும் வீடு, மனை, நிலம் விற்பனை நிறுவனம் டி.எல்.எப். இந்த நிறுவனம் வதேராவுக்கு நம்பிக்கையின் பேரில் வியாபார ரீதியாக ரூ.65 கோடி முன்பணம் கொடுத்ததை ஒப்புக்கொள்கின்றது. ஆனால், ஏன் முன்பணம் கொடுக்கவேண்டும்? அதற்காக அவரிடம் செய்துகொண்ட தொழில் ஒப்பந்தம் என்ன? என்று அதுகுறித்து விளக்கம் கேட்டால் சொல்ல மறுக்கிறது.
 "நாங்கள் கொடுத்த பணத்தில் ரூ.15 கோடியைத் திருப்பிச் செலுத்திவிட்டார். ரூ.50 கோடிக்கு நிலப் பரிமாற்றம் நடந்துள்ளது' என்று மட்டும் சொல்கின்றது டி.எல்.எப். நிறுவனம். இந்த நிறுவனத்தின் பதில் சட்டப்படியாக சரியாக இருந்தாலும்கூட, ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை, அந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த இரு நாள்களில் அடைந்துள்ள வீழ்ச்சியே சொல்லும்!
 டிஎல்எப் நிறுவனம் - ராபர்ட் வதேரா இடையிலான கொடுக்கல் வாங்கல், வியாபாரம் ஆகியவை சட்டப்படி கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது என்கிறார் வதேராவுக்காக வக்காலத்து வாங்கும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித். ஆனால், இதேபோன்று எல்லா நிறுவனங்களுக்கும், எந்தப் பிணையும் இல்லாமல் ரூ.65 கோடியை முன்பணமாக டி.எல்.எப். அள்ளிக் கொடுத்துவிடுமா? இந்தப் பரிவர்த்தனை அவர் ராபர்ட் வதேரா என்பதற்காக அல்ல, அவர் சோனியா காந்தியின் மருமகன் என்பதற்காகத்தான் என்று விவரம் தெரியாத குழந்தைகூடச் சொல்லிவிடுமே!
 இந்தியாவில் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் என்று யார் பெயரிலும் பெருமளவு சொத்து கிடையாது. அரசியல்வாதிகள் வேட்புமனு தாக்கலின்போது தெரிவிக்கும் சொத்துகளைத் தவிர வேறு ஏதும் சேர்த்துக்கொண்டதில்லை. சிலர் பாவம், சொந்தமாக ஒரு கார்கூட இல்லாதவர்கள்!
 ஆனால், இவர்களது மனைவிமார்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள், மாப்பிள்ளைகள், அண்ணன், தம்பி, மைத்துனன் எல்லாரும் பெருந்தொழிலதிபர்களாக மாறிவிடுகிறார்கள். இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் இத்தகையவர்களைப் பட்டியல்போட்டால், அதில் விதிவிலக்காக இருப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
 பெரிய இடத்துத் தொடர்புடைய யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். அவர்கள் எல்லோருமே தங்கள் "திறமையால்' வளர்ந்ததாகத்தான் சொல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் மிரட்டவில்லை, தொழில்போட்டியை ஒடுக்கவில்லை, அதுவாக வளர்ந்தது என்கிறார்கள். இதை நாம் நம்புவோம் என்றும் நம்புகிறார்கள்.
 உரிய ஆவணம் அல்லது தொழில் திட்டம் இல்லாமல் கடன், முன்பணம் பெறுவது ஊழலாகக் கருதப்படுவதில்லை; ஒரு தொழில் முனைவோருக்கான வாய்ப்பாகப் பேசப்படுகிறது. ஒரு இணை நிறுவனத்தின் வளர்ச்சியை நசுக்கினால் அதனை தொழில்போட்டியில் இயல்பானதாகப் பார்க்கிறார்கள். அதிகாரிகளைத் தங்கள் நிறுவன மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டால், அது நட்பு ரீதியிலான ஆலோசனையாகப் பார்க்கப்படுகிறது. இவை யாவும் "ஊழல்' என்ற வட்டத்துக்குள் வருவதே இல்லை.
 ஒருவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினால் குற்றம் சொல்லும் இந்திய அரசியல் சட்டம், அவரது உறவினர்கள், அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை அப்பதவி வகிப்பவரின் குற்றமாகப் பார்ப்பதில்லை. இதுதான் சட்டத்தின் ஓட்டை. ஆகவே எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துகளில் மாற்றம் இருப்பதே இல்லை. அவர்களைச் சுற்றியுள்ள ரத்த உறவுகள் மலையென சொத்துகளைக் குவித்துக்கொண்டே இருக்கின்றன.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், சந்தைப் பொருளாதார அடிப்படையிலான கார்ப்பரேட் சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் பங்குகளை இன்னொரு நிறுவனம் வாங்குவது சட்டப்படி சரி என்கிற நியாயத்தைப் பயன்படுத்தித்தான் முறைகேடு நிகழ்ந்தது. வதேரா விவகாரத்தில் மட்டுமல்ல, பிரமுகர்களின் வாரிசுகள் சம்பந்தப்பட்ட பணப் பரிமாற்றங்கள் சட்டத்தின் போர்வையில் சரியாகத்தான் இருக்கிறது. நேர்மைக்கு விடைகொடுத்துவிட்டு பணத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க முற்பட்டிருக்கும் சந்தைப் பொருளாதார அவலத்தின் வெளிப்பாடுதான் சுற்றி இருப்பவர்கள் சொத்து சேர்க்கும் சாமர்த்தியம்.
 அரவிந்த் கேஜரிவாலும், பிரசாந்த் பூஷணும் கூறுவதுபோல, லோக்பால் அமைப்பு என்று ஒன்று இருந்திருந்தால், வதேரா மீதான குற்றச்சாட்டை அங்கே தாக்கல் செய்திருக்கலாம். நீதிமன்றத்தில் சட்டம்தான் எடுபடுமே தவிர தர்மத்துக்கு இடம் கிடையாதே...
 வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அதிகாரிகள், அமைச்சர்கள் கைது செய்யப்படுவதைப்போல, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அவர்தம் உறவுகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலைமை வராமல் போனால் இந்திய ஜனநாயகம் தீவிரவாதிகளின் பிணைக்கைதியாகிவிடும் துர்பாக்கியம் ஏற்படும், ஜாக்கிரதை!

கருத்துகள்(21)

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுடமையாக்கப்பட்ட உள்ளூர் வங்கியில் கல்விக்கடன் வேண்டி அணுகிய நினைவு ஏனோ இப்போது வந்து தொலைக்கிறது.படிப்பது அரசுப் பொறியியல் கல்லூரி ;அப்பா அரசில் ஊதியம் பெறும் ஆசிரியர்.ஆனாலும், 'சிதம்பரம் சொல்லுவார்;ஆனால் வசூல் யார் செய்வது?' என்றார் மேலாளர்.வாங்கவில்லை கடன்.வளாகத் தேர்வில் தேர்வு பெற்றார் அவர்.வீட்டுக்கடனைக் கூட உரிய நேரத்தில் கட்டும் நாணயம் இன்று வரை தொடர்கிறது...இதே போல் ஐ.டி.துறையில் கணிசமான ஊதியம் பெறும் மருமகனுக்கு வீட்டுக்கடன் கோரிய போது சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் நடைமுறைகள் வியப்பளிக்கிறது.ஆனாலும் ஊரார் பணம் என்பதில் உள்ள நேர்மையும் மறுக்கவில்லை.ஆனால் வதேரா போன்ற "தொழிலதிபர்கள்" எப்படியெல்லாம் கடன் பெற முடிகிறது?

சனி, 14 ஜூலை, 2012

தினமணி : தலையங்கம்: இராசபட்சவின் தப்புக்கணக்கு

தினமணி : தலையங்கம்:   இராசபட்சவின் தப்புக்கணக்கு

அதிபர் ராஜபட்சவைப் பொருத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.அண்மையில் இங்கிலாந்து சென்ற ராஜபட்ச, அங்கு வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுத் திரும்பியதன் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வாழும் இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலை 2013 செப்டம்பருக்குப் பிறகு நடத்தலாம் என்கின்ற முடிவை அறிவித்திருக்கிறார்.தேர்தலைத் தள்ளிப்போட அவர் அளித்துள்ள முக்கியக் காரணம் வாக்காளர் பட்டியல்தான். தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 30 ஆண்டுகள் பழமையானது. தற்போது இப்பகுதியில் அமைதி திரும்பியுள்ளதால், முன்பு புலிகளின் அச்சத்தால் வெளியேறிய தமிழர்கள் திரும்பிவந்து மெல்ல மெல்லக் குடியேறத் தொடங்கியுள்ளனர். ஆகவே புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்த பிறகு இங்கே முறையாகத் தேர்தல் நடத்தப்படும் என்கிறது ராஜபட்ச அரசின் அறிவிப்பு. இது விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா என்பதுதான் நமது சந்தேகம்.கடந்த மூன்று ஆண்டுகளில், வடக்கு மாகாணத்தில் இலங்கை அதிபருக்கான தேர்தல் நடந்தது. தமிழர்கள் வாக்களித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதிலும் தமிழர்கள் வாக்களித்தார்கள். அதிக இடங்களில் தமிழ் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றது. சென்ற ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் தமிழர்கள் வாக்களித்தார்கள். இப்போது மட்டும் ராஜபட்சவுக்கு ஏன் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்கிற திடீர் அக்கறை?யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளைக் கொண்ட வடக்கு மாகாணத்தில் தமிழர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆகவே வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றால், அங்கே ஒரு தமிழர் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்பது நிச்சயம். அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசு இல்லாத நிலையில், இலங்கை அரசே நேரடியாக நிர்வாகம் செய்யும் தற்போதைய அதிகாரம் குன்றிப்போகும். மாகாண அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். இந்த அச்சம்தான் ராஜபட்சவைத் தேர்தலைத் தள்ளிப்போட வைக்கிறது.இலங்கையில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறிவிட்டால், ""மேலை நாடுகளின் தீயசக்திகள்'', வடக்கு மாகாணத்தைப் பயன்படுத்தி இலங்கையைப் பிளவுபடுத்தும் என்ற பொய்க்கருத்துகள் இலங்கைப் பத்திரிகைகளில் கசியவிடப்படுகின்றன. இது ராஜபட்சவை நியாயப்படுத்தும் ஏற்பாடுகள்.இத்தகைய கருத்து, குறிப்பாக இங்கிலாந்து சென்று எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் ராஜபட்ச நாடு திரும்பிய பிறகு உருவாக்கப்பட்டது. அதாவது, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வடக்கு மாகாண அரசை இலங்கைக்கு எதிராகத் திருப்பிவிடுவார்கள் என்கின்ற அச்சத்தால் ""மேலை நாடுகளின் தீயசக்திகள்'' என்றெல்லாம் பேசுகிறார்கள்.வடக்கு மாகாணத்தில் தமிழர் ஆட்சி ஏற்பட்டால், உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சகோதரர்கள் வாழுரிமை பெற்றதற்காக மகிழ்வார்கள். எனினும், அவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்பும் நிலையில் இல்லை. இரண்டாவது தலைமுறையின் விழுதுகள் புலம்பெயர்ந்த மண்ணில் வேர்கொண்டிருக்கின்றன. புதிய தொழில், வேலை என்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிட்ட அவர்களின் இன்றைய விருப்பம் ஈழ மண்ணில் எஞ்சியுள்ள தாயகத் தமிழர்கள், சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான். தங்கள் சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்க முடியுமே தவிர, அரசியல் செய்வது அல்ல. ராஜபட்ச சொல்லும் காரணத்தை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், ஒரு தமிழரின் தலைமையில் வடக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும்போது மட்டுமே, புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் தாயகம் திரும்புவார்களே தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதற்காகத் தாயகம் திரும்ப மாட்டார்கள்.அதிபர் ராஜபட்சவின் உண்மையான நோக்கமே வேறாக இருக்கக்கூடும். ஏற்கெனவே, கடந்த மூன்றாண்டுகளில் வடக்கு மாகாணப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் பணி அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாகாணத் தேர்தலுக்கு முன்னால் கணிசமாகக் குடியேற்றம் ஏற்பட்டுவிட்டால், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் குறைவாக இருக்கச் செய்துவிட முடியும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவின் திட்டமாக இருக்கக்கூடும்.இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டு இந்தியாவைப்போல நாடாளுமன்ற ஜனநாயக முறை அமலுக்கு வராதவரை, பெருவாரியான சிங்களர்களின் பிரதிநிதி மட்டுமே சர்வ வல்லமை பெற்ற அதிபராக முடியும் என்கிற நிலைமை தொடரும்வரை, இலங்கைவாழ் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. இதை வலியுறுத்த அங்கேயும் யாருமில்லை, இந்திய அரசும் தயாராக இல்லை, சர்வதேசத் தலைவர்களும் அக்கறை காட்டுவதில்லை.இலங்கையின் அடிப்படைப் பிரச்னையே இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் முழுமையான பங்கு அளிக்கப்படவில்லை என்பதுதான். அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால்தான், ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டவர்களை வன்முறையால் ஒடுக்கி, மனித உரிமைகள் மிதிக்கப்பட்டபோதுதான், அந்த மண்ணில் மிதிவெடிகள் பரவலாகின.இத்தனை காலத்துக்குப் பின்னர் அங்கே இயல்பான அரசியல் சூழல் தானாகவே எழுகிறது. அதை ஏன் ராஜபட்ச மறுக்க வேண்டும்? அவருக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது மரியாதையும், தமிழர்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால், அவர் வடக்கு மாகாணத் தேர்தலைத் தள்ளிப்போடாமல் உடனடியாக நடத்த வேண்டும்.நடத்தாமல் போனால்? ஒருவேளை, சரித்திரம் திரும்பக்கூடும்!
கருத்துகள்

கருணாநிதி தனதும் தந்து குடும்ப நலுனுகாகவும் ஒரு இனத்தை அழிக்க துணை நிண்டு தமிழகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் அதன் பயனை அவருக்கு இயற்கை அன்னை நிச்சயம் கொடுப்பாள்
By pillai
7/14/2012 3:52:00 PM
Well said, GoSL is lying, breaking promises and deceiving. The Srilanka constitutional act gives powers to the tyrannicaL state to annihilate its minority community. Unless the UN must take effective steps to ensure the rights of the Tamil community. Otherwise no assurance of political rights. Every GoSL will never bring justice and rule of law to restore everlasting peace and harmony in the country.
By வசந்தகுமார்.
7/14/2012 2:37:00 PM
நல்ல தலையங்கம், தினமணி, தேவை படும் பொது நல்ல கருத்தை வேலிடுகிறது
By babu
7/14/2012 1:22:00 PM
காஷ்மீரில் நாம் செய்கிறோம், சீனாவும் சின்சியாங்கில் செய்கிறது, பாகிஸ்தான் அசாத் காஸ்மீரில் செய்கிறது, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்கிறது, ராசபக்சே வடக்கு கிழக்கு மாகாணத்தில் செய்கிறான். இதில் என்ன புதியது உள்ளது. விடுங்கப்பா.
By பெரும்பான்மை
7/14/2012 1:06:00 PM
இது எல்லா நாட்டு அரசியல் தலைவர்களும் செய்யக் கூடிய ஒன்றே இந்திய பாகிஸ்தான் சீனா மற்றும் பலநாடுகளில் சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பெரும்பான்மை சமுதாய மக்களை குடியேற்றி அவர்களின் அரசியல் பலத்தை குறைப்பார்கள். இந்திய நாட்டில் கூட தொகுதி மறு சீரமைப்பு செய்யும்போது முஸ்லிம்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளை பிரித்து பெரும்பான்மை சமுதாய மக்கள் வாழும் பகுதிகளோடு இணைத்து முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்தை தடுக்கும் வேலையும் நடந்தது. அதை பின்பற்றி ராஜபக்சே செய்கிறார் போலும். இது இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் நடக்கும் ஒன்றே அச்சப்பட ஒன்றுமில்லை
By அப்துல் காதர்
7/14/2012 12:33:00 PM
நல்ல தலையங்கம். தன்னலம் பாராத எம்.ஜி.ஆர் அவர்கள் இல்லாததும், ஈழப்பிரச்சனையை அரசியலாக்கி ஆட்சியில் அமரத்துடிக்கும் ஜெயா, கருணாநிதி இருக்கும் வரையிலும், ஈழப்பிரச்சனைக்கு முடிவு ஏதும் ஏற்படப்போவதில்லை. வைகோ ஆட்சிக்கு வந்தால் நிலைமை மாறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
By தஞ்சை ராஜு
7/14/2012 12:14:00 PM
தனியே சிங்கள படைகள் ..போராளிகளை வெல்வது இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும் நடக்க முடியாதது ஒன்று ...மொத்தம் 33நாடுகள் இந்திய தலைமையில் இலங்கைக்கு கேடத்ல்லாம் கொடுத்து இறங்கியதால் ..இந்த செயற்கை தற்காலிக மகிழ்ச்சி சிங்களவனுக்கு ...உண்மையில் பலன் அடைந்தது சீனா ...அதரவு தரும் மக்களை ஒழித்தான் மூலம் ..தனது பாதுகாப்பையே கேள்விகுறியாகிவிட்டது இந்தியா ...முட மன நோயாளி கருணாநிதி தமிழ் துரோகி என்னும் பெயரை சரித்திரத்தில் பெறப்போகின்றான் ...
By KOOPU
7/14/2012 12:10:00 PM
ராஜபட்சே அவர்களே உங்கள் மண்ணின் வளர்ச்சிக்கு பாதி காரணம் இலங்கை வாழ் தமிழர்களே. அவர்களுக்கு உண்டான உரிமையை கொடுத்து நீங்களும் உங்கள் மக்களும் (தமிழர்களையும் சேர்த்து)அமைதியுடன் என்றும் வாழலாம். இல்லையேல் நீங்கள் தப்பு கணக்கு போட்டால் தலையங்கத்தின் கடைசி வரி ப்படி சரித்திரம் நிச்சயமாக திரும்பும்.
By நீ. girivasan
7/14/2012 10:02:00 AM
ராஜா கோட்ச வை சொல்லி குட்ட்ரமில்லை தப்பு இர்ருக்குமிடம் சோனியாவிடம.அரச பயங்கரவாததின் மொத உருவம் சோனியா ஆட்டுது ரஜெபட்ச அடுரான்
By MURUGAN
7/14/2012 9:59:00 AM
Mr.Rajapakshe is One Murder.He was given sharpened knife by India. He did maximum Job(Murder's work) But he is worrying for rest ofthe innocent. But India does not knows to get back knife. Because It gives (knife)on dark back ground to achive single woman's revenge. Now Dinamani only all the time decipate Tamils problem. Vazhga Dinamani Velgha Dinamani's Aim
By vaisu
7/14/2012 9:41:00 AM
...அருமையான தலையங்கம் ! முந்தைய முதல்வர் ஈழம் போர் கடை கட்டத்தில் எவ்வாறு சுய நலத்தால் தமிழர் லக்ஷக்கணக்கில் மடிய, கொல்ல உடந்தையானார் என்பது நிதர்சனம் ! அவர் செய்தது அவரது மனசாக்சியே அவரை வருத்தும் ! இப்போது அவருக்கு இன்னொரு வாய்ப்பு நல்ல பெயர் செய்ய கிடைத்துள்ளது ! அவர் தனக்குள்ள சக்த்தியை பயன்படுத்தி மத்திய அரசை ராஜபக்சேயின் கடிவாளத்தை பிடித்தால் அவர் தன் இழந்த கௌரவத்தை மீண்டும் பெறலாம் .அவர் செய்வாரா என்பது கேள்விக்குறி !
By ர.Krishanmurthy
7/14/2012 8:32:00 AM
நல்ல தலையங்கம் .தேர்தல் நடந்தாலும் நட்டகமல் போனாலும் நிச்சயம் சரித்திரம் திரும்ப கூடும். இதனை துரித படுத்தும் வகையில் வரும் 2014 இந்திய தேர்தல் இதனை சாதிக்க உரு துணையாக இருக்கும் அடுத்த ஈழ போர்ர் தான் இலங்கை யில் இன உறவுக்கு வழிகோலும் இதனை புலம் பியென்ற தமிழர்கள் சாதித்து காட்டுவார்கள் இந்தியர்களை நம்பி இருக்காமல் இவர்களின் போராட்டம் தனித்து இயங்க வேண்டும் இனி தேர்வு செய்யப்படும் எம்பீக்கள் இன துரோகத்திற்கு துணை போக விட போவதில்லை .தினமணி அம்மா போன்ற நல்ல உள்ளங்கள் தமிழ் ஆர்வலர்கள் ஈழத்தின் புதிய விடியலுக்கு துணை நிற்பார்கள் அம்மாவின் விசுவாசி
By அம்மாவின் விசுவாசி
7/14/2012 8:15:00 AM
காங்கிரசும் அப்போது தரித்திரமாகியிருக்கும்.எனவே சரித்திரமும் மாறும்.
By labamsivasamy
7/14/2012 6:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *



வியாழன், 26 ஏப்ரல், 2012

சென்றார்கள், திரும்பினார்கள் – தலையங்கம் (புரட்சிப்பெரியார் முழக்கம்)

சென்றார்கள், திரும்பினார்கள் – தலையங்கம் (புரட்சிப்பெரியார் முழக்கம்)

congress_mps
இந்திய நாடாளுமன்ற குழு எதிர்க்கட்சித் தலைவர் பாரதிய ஜனதாவைச் சார்ந்த சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைச் சென்று, தமிழர் வாழும் பகுதிகளையும் சில அகதிகள் முகாம்களையும் பார்வையிட்டு, ராஜபக்சேவை சந்தித்துவிட்டு திரும்பியுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கட்சிகள் இதில் இடம் பெறவில்லை. இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் கடுமையாக விமர்சித்து வரும் இந்திய கம்யூனி°ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதிகள், இக்குழுவில் இராசபக்சேவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது.
ஈழத்தில் இறுதி கட்ட இனப் படுகொலையின்போது போரை நிறுத்தி, தமிழினத்தைக் காப்பாற்றுங்கள் என்று தமிழகமே திரண்டு நின்று குரல் கொடுத்தபோது, அதை காதில் போட்டுக் கொள்ள காங்கிர° ஆட்சி தயாராக இல்லை. இனப் படுகொலை வெற்றிகரமாக நடந்து முடியட்டும் என்றே அதற்கான உதவிகளை செய்து கொண்டு காத்திருந்தார்கள்.
இப்போது போரின் பாதிப்புகளைக் கண்டறிய குழுவை அனுப்புகிறார்கள். ஏதோ, ராஜபக்சே ஜனநாயக ஆட்சியை நடத்தி வருவது போலவும், குற்றங்குறைகளை சுட்டிக் காட்டினால் அவரது கருணை உள்ளம் அதைக் களைவதற்கு துடித்து எழும் என்பது போலவும் ஒரு பம்மாத்து காட்டப்படுகிறது. இந்தக் குழு இப்போது அவசரமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பது ஏன்? எதிர்வரும் நவம்பரில் இலங்கையின் மனித உரிமை தொடர்பான விவாதம் அய்.நா. மனித உரிமைக் குழுவில் விவாதத்துக்கு வரவிருக்கிறது. அப்போது இந்திய நாடாளுமன்றக் குழு நேரில் பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக கூறிவிட்டதாக இலங்கை அரசு கூறிக் கொள்ளலாம். அதற்கு வேண்டுமானால் இக்குழுவின் பயணம் பயன்படலாம். இனப்படுகொலை நடந்து முடிந்து மூன்று ஆண்டுகளான பிறகும் ராணுவத்தின் ஆட்சியே தமிழ்ப் பகுதிகளில் தொடருவது மிகப் பெரும் கொடுமை.
இலங்கை அரசு நியமித்த விசாரணை ஆணையமே (எல்.எல்.ஆர்.சி.) இதை ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை அரசு ஒப்புக் கொண்ட உண்மையைத்தான் இந்தக் குழுவினரும், திரும்பி வந்து கூறிக் கொண்டிருக் கிறார்கள். காங்கிர° உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்க ராஜன் போன்றோர், செய்தியாளர்களிடம் கூறிய கருத்துகள் எல்லாம், ராஜபக்சே தமிழர் பிரச்சினையில் கவலையுடன் இருப்பது போன்ற தோற்றத்தையே உருவாக்கிக் காட்டுகின்றன. இதை எவரும் நம்பத் தயாரில்லை. அதிலும் டி.கே. ரங்கராஜன், தமிழ் ஈழத்தை, ஈழத்தில் தமிழர்கள் எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருப்பது தலைசிறந்த நகைச்சுவையாகும். “எங்கள் மார்க்சிய கம்யூனி°ட் கட்சி கோழிக்கோடு மாநாட்டில் ஈழப்பிரச்சினை தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தைத்தான், அகதி முகாம்களில் வாழும் தமிழர்களிலிருந்து நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் வரை அப்படியே ஆதரித்தார்கள்” என்று சொல்லாமல் விட்டாரே! அதற்காக நன்றி கூறலாம்.
இப்போதும் சிங்களவர் பகுதிகளிலே சுதந்திரமான சிவில் நிர்வாகமும், தமிழன் பகுதிகளிலே சிங்களர்களை மட்டுமே கொண்ட ராணுவ நிர்வாகத்தையும் சித்திரவதை முகாம்களையும் கொலை பீடங்களையும் நடத்தி வரும் ஆட்சியில் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் “வாழவேண்டும்” என்று பேசுவதில் ஏதேனும் நியாயம் இருக்க முடியுமா?
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, தமிழ் ஈழத்தை ஆதரித்து கருத்துக் கூறியதால், ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் நெருக்கடிதான் உருவாகும் என்று ‘இந்து’ பார்ப்பன ஏடு தலையங்கம் தீட்டுகிறது. ராஜபக்சே என்ற சர்வாதிகாரிக்கு கோபம் வந்துவிடாமல், ‘தாஜா’ செய்து கை கட்டி வாய்ப் பொத்தி தமிழர்கள் வாழும் உரிமைகளை மன்றாடிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதுகிறார்கள் போலும்! இனப் படுகொலையும் போர்க் குற்றங்களும் நடக்கும் எந்த ஒரு நாடும் இறையாண்மை பெற்றது அல்ல என்று சர்வதேச சட்டங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
ராஜபக்சே என்ற போர்க் குற்றவாளிக்கு சர்வதேச அழுத்தங்களும் நெருக்கடிகளும் உருவாக்கப்படும் முயற்சிகளே ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமே தவிர, கருணை மனுக்களைப் போடுவதால் எதுவும் நடக்காது என்பதைப் புரிந்து கொண்டாக வேண்டும்.
மற்றபடி இந்திய குழுவினர் சென்றார்கள்; திரும்பினார்கள் என்பதைத் தவிர எந்தப் பயனும் இல்லை என்று உரத்துக் கூற முடியும்.
- தலையங்கம் (புரட்சிப்பெரியார் முழக்கம் 26.04.2012)

வியாழன், 19 ஏப்ரல், 2012

இராசபக்சே விரித்த வலை

மிக அருமையான ஆசிரியவுரை. எனினும் இராசபக்சே விரித்த வலை என்பதை விட அவரும் இந்திய அதிகாரிகளும் மத்திய அரசும் சேர்த்துப் பின்னிய வலை என்பது பொருத்தமாக இருக்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


தலையங்கம்: ராஜபட்ச விரித்த வலை...

First Published : 19 Apr 2012 03:39:20 AM IST

Last Updated : 19 Apr 2012 05:27:05 AM IST


இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்கள்கிழமை இலங்கை சென்று சேர்ந்தவுடன், மாற்றியமைக்கப்பட்ட பயணத் திட்டத்தை வெளியிடுகிறது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். புதிய பயணத் திட்டத்தின்படி, 21-ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் சிற்றுண்டி உண்பதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு, 20-ஆம் தேதி மாலை அவரைச் சந்தித்து உரையாடுவதாக மாற்றப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் இந்தப் பயணத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டதால், இலங்கை அதிபர் ராஜபட்சவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் மாற்றி அமைத்திருப்பார்களோ என்னவோ!  இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அதிமுக சார்பில் யாரும் இடம் பெறமாட்டார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவித்ததன் காரணமே, இந்த நிகழ்ச்சி நிரல் குறை கேட்கச் செல்வதாக இல்லை, விருந்து உண்ணச் செல்வதாக இருக்கிறது என்பதால்தான். ""போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாகக் கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறலைக் கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாமல் பயணத் திட்டம் அமைந்துள்ளது. விருந்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்குச் சாதகமான கருத்து இந்தியாவில் ஏற்படத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போன்று உள்ளது'' என்று இடம் பெறாததற்கான காரணத்தை முதல்வர் ஜெயலலிதா கூறி இருந்தார்.  அதிமுக இத்தகைய கருத்து மாறுபாடு தெரிவித்தவுடனேயே இந்தப் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்து, பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் அதிக நேரம் செலவிடுவதற்கும், அதிபர் ராஜபட்சவை நேருக்கு நேராக, பத்திரிகையாளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் கேள்வி கேட்பதற்கும் இந்திய அரசு வகை செய்திருக்க வேண்டும். அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுகூடக் கோரவில்லை. அதிமுக வராவிட்டால் நல்லது என்கின்ற ரீதியில்தான் மத்திய அரசு செயல்பட்டது.  திடீரென்று இக்குழுவில் திமுக சார்பில் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று ஏப்.15-ஆம் தேதி அறிவிக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. "எந்தப் பயனும் இல்லை என்பதற்கு பழைய கால உதாரணங்கள் இருக்கின்றன' என்பதுதான் அவர் தரும் விளக்கம். இது உண்மையென்றால், அவர் இந்தக் குழு அமைக்கப்பட்டபோதே இதைத் தெரிவித்திருக்கலாம். ஜெயலலிதா தனது முடிவை அறிவித்த பிறகு இதை அறிவித்திருக்க வேண்டியதில்லை.  மேலும், 2010-இல் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் குழு இலங்கை சென்று முள்வேலிக்குள் இருக்கும் மக்களின் துயரங்களைப் பார்த்து வந்தது. இந்தக் குழுவில் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். நியாயமாகப் பார்த்தால், 2010-க்கும் 2012-க்கும் இடையிலான காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிய, முன்பு சென்ற இருவரில் யாரேனும் ஒருவரை அனுப்பி வைத்து, நிலைமையை ஒப்பிட்டு பார்ப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருந்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பையும் தவற விட்டது திமுக தலைமை.  திமுகவும், அதிமுகவும்தான் தமிழகத்தைக் கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்துவரும் கட்சிகள். இந்த இரு கட்சிகள்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்சிகள். இவர்கள்தான் உண்மை நிலையை நேரில் கண்டுவந்து ஈழத் தமிழர்களின் சார்பில் மத்திய அரசின் முன் குரல் கொடுக்க வேண்டியவர்கள். மத்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருக்குமேயானால், இந்தப் பயணக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு முக்கிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் இடம்பெறுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அதை அவர்களும் செய்யவில்லை.  பாஜக சார்பில் சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பிரச்னை இருமுனை கத்தி என்பதை உணர்ந்தவர். நாளைக்கு மத்தியில் பாஜக அரசு அமையுமானால், அப்போது இலங்கையுடனான ராஜ்ஜீய உறவுகளை எப்படி எதிர்கொள்வது என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் பேசுவார், கருத்து சொல்வார்.  காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வார்த்தைகூடப் பேசப்போவதில்லை. கேள்வி கேட்கப் போவதும் இல்லை.  இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான். அதிபர் ராஜபட்ச விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் உண்மை.  திமுகவும், அதிமுகவும் இல்லாத குழு, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பற்றிக் கேட்கப் போவதில்லை. அதிகபட்சம் போனால், இந்தியாவின் நிதியுதவி பயன்படுத்தப்படுகிறதா என்கிற புள்ளிவிவரங்களைக் கேட்டுப் பெறுவார்கள், அவ்வளவே!  இலங்கையிலிருந்து திரும்பி வரும் இந்தக் குழுவின் கைகளில் விருந்தின் மணம் இருக்குமே தவிர, ஆற்றொணாது அழுத ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைத்த ஈரம் இருக்கப் போவதில்லை.  அப்படியானால் அவர்தம் துயரங்களை எப்படித்தான் அறிந்துகொள்வது? பாரதி காட்டிய வழிதான்.....  "அவர் விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே. துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் மீட்டும் உரைப்பாயோ...'  
கருத்துகள்

கழகங்களிடையே உள்ள போட்டா போட்டியை ராஜபக்ஷே நன்கு அறிந்துள்ளார்! அதைப் பயன்படுத்தவும் செய்கிறார்!
By முத்துக்குமார்
4/19/2012 9:15:00 AM
மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான்.////////இப்படியான ஒரு கருங்காலி நாட்டுக்கு என்ன மரியாதை வேறு வேண்டிகிடக்கிறது. தமிழர்கள் என்றால் உங்களுக்கு என்ன கிள்ளுகீரையா... ஒரு நாள் நாங்களும் காஷ்மீர் பிரிந்து தான் போகப்போகிறோம். அது வெகு சீக்கிரம் நடக்கத்தான் போகிறது.`
By தமிழன்
4/19/2012 9:12:00 AM
அருமையான கருத்துக்கள் உள்ளடக்கிய தலையங்கம் படிக்க வேண்டியவர்கள் படிப்பார்களா ? இன்று சுஷ்மா ஸ்வராஜ் யாழ் வளர்ச்சியை கண்டு பிரமித்துவிட்டாராம் டக்லஸ் தேவானந்த கருத்து பூனை குட்டி வெளியே வந்தாச்சு ! சுஷ்மா ஸ்வராஜ் புத்தர் சிலையை பார்த்து பிரமிச்சு போயிருப்பரோ n
By tamilar
4/19/2012 8:59:00 AM
நல்ல பயனுள்ள கருத்துகள் சுஷ்மா ஸ்வராஜ் தனது கடமை களை நல்ல பாங்குடன் செய்து வருகிறார். ஆதீமுக திமுக இல்லாத குறையை இவர் கவனித்து கொள்ளுகிறார் . வழக்கம் போல் காங்கிரஸ் உறுபினர்கள் மன்மோகன் ,ராஜா பக்ஷ நலன்களை கவனித்து கொள்ளுகின்றனர் .சுஷ்மா தனது கருத்தகளை முதல்வர் ஜெயலலிதா உடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் இவர் திருப்பி வந்ததும் சென்னை ,மதுரை திருச்சி நாகர்கோயில் கோவை போன்ற இடங்களில் இவரது கட்ச் கூடங்களை கூட்டி இவரது பயணத்தை எடுத்து சொல்ல வேண்டும். இவரது மதுரை கட்சி மகாநாட்டில் இப்பிரச்சனை இவர் அலசி பேச வேண்டும். இவரை நம்பி இலங்கை தமிழர்கள் உள்ளனர் இந்த நம்பிக்கையை இவர் காக்க வேண்டும். ப. விஸ்வகர்மன்
By ப. விஸ்வகர்மன்
4/19/2012 8:58:00 AM
உருப்படியா கலைஞர் ஒன்னும் செய்தது இல்லை. இப்போ வழக்கமான நாடகம். வசனம் கூட மாறவில்லை.
By மனுநீதி சோழன்
4/19/2012 8:57:00 AM
கபட நாடகம் ஆடும் கலைஞர் .. தமிழனை பழி வாங்க துடிக்கும் சோனியா. கண்டும் கனாதுபோல் இருக்கும் ஜெயா.. பல ஆயிரம் கோடி ஊழல் செய்து திகார் அடைபட்டுக்கிடந்த அம்மணி தற்பொழுது மேடைகள் பல ஏறி சிறகடித்து கொண்டிருக்கும் அம்மணி இவர்களா திமிழனையும் தமிழையும் காக்க போகின்றவர்கள்.. அல்லது வாய் வார்த்தை மட்டும் கொண்டு பெட்டிக்குள் ஒளியும் வைகோ காப்பாற்ற நினைகின்றார ?.. "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க " நல்ல நேரம் வரும் வரும் வரும்....வேற வழி... நாமெல்லாம் முன்னேற்ற பாதையை மறந்து இலவசங்களுக்கு அடிமையகிவிட்டோம்.. நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..
By ஜி
4/19/2012 8:42:00 AM
அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறதோ அதனை சரியாக பிரதிபலித்திருக்கும் அற்புதமான தலையங்கம்.
By venkat-neyveli
4/19/2012 8:04:00 AM
தினமணிக்கு மிக்க நன்றி. தினமணி அச்சு பதிப்பில் பக்கம் 11 லும் ( இலங்கை தமிழர்களிடம் இந்தியி எம்.பி க்கள் குறை கேட்ப்பு " ), இந்தியன் எக்ஸ்பிரஸ் அச்சு பதிப்பில் பக்கம் 1-ல் ("ARMY GO BCAK: Jaffnaa tamils") திரு.பால சந்திரன் அவர்கள் தந்துள்ள ஓரளவு விரிவான செய்திகள் தினமணி =-யின் வலைதள பதிப்பில் தற்ச்சமயம் வரை வெளிவரவில்லை. ஆயினும் தினமணி சொல்லயுள்ள "இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான்.(மேலும் ஒரு செய்தி)
By P .Padmanaabhan
4/19/2012 7:44:00 AM
தலையங்கம் தங்ககுடத்தில் வைக்கப்பட்ட போட்டு ...தி மு க மற்றும் அ தி மு க கட்சிகள் ஒதுங்கி இருந்திருக்ககூடாது ..
By நாகை ஜெகத்ரட்சகன்
4/19/2012 6:38:00 AM
கலைங்கருக்கு ஒடனே இதயம் கனத்து கண்கள் பணித்துவிடும் .
By ThamilMannan
4/19/2012 5:48:00 AM
தினமணியின் கருத்துப்படி அ தி மு க , தி மு க வில் மட்டும்தான் தமிழர்களின் குறையை கேட்க ஆட்கள் இருப்பதாகவும் மற்றைய கட்சிகளில் இல்லாததுபோலவும் காட்டப்படுகிறது. காங்கிரசில் திரு சுதர்சன நாச்சியப்பன் இல்லையா, அல்லது தமிழர்களுக்குதான் மனிதாபிமானம் இருக்கிறதா? மற்றவர்களுக்கு அது இருக்கமாடாத? அ தி மு க மற்றும் தி மு க நாடகம் ஆடுகிறார்கள். நேரிலே போய் உண்மையை அறியாமல் வெறும் பிரசார செய்திகளை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதற்கு தினமணி போன்ற பத்திரிகைகள் வக்காலத்து வாங்குகின்றன. தயவு செய்து இப்படியான தலையங்கங்களை தவிருங்கள். உண்மை எழுதுவதாக உளறிக்கொட்டாதீர்கள்.
By Moorthy
4/19/2012 5:42:00 AM
உலக அரசியலில் மறுபடியும் தவறான நிலையை எடுத்திருக்கிறது இந்தியா.. மறைமுகமாக பல நாடுகள் சைனாவிற்கு எதிர் நிலையை எடுத்திருக்கும் இந்த சமயத்தில் இந்தியா அதற்க்கு சாதகமான நிலையை எடுத்துள்ளது பின்னால் நமக்கு எதிராக திரும்பும்!
By அன்வர்ஷா
4/19/2012 4:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *