sarathkumar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sarathkumar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார்

First Published : 19 Sep 2010 01:02:20 AM IST


தூத்துக்குடி, செப். 18:  தி.மு.க.வில் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும் என, அக் கட்சியின் தலைவர் ஆர். சரத்குமார் கூறினார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் சரத்குமார் பேசியதாவது:÷தமிழகத்தில் காமராஜர்  ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு சமத்துவ மக்கள் கட்சி செயல்பட்டுக்  கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்களைப்  பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்கள் எப்படி  வாழ்கிறார்கள் என்பதை ஒரு குழுவை அனுப்பி கண்காணிக்க வேண்டும். இங்கே பேசியவர்கள் சமத்துவ கட்சியை ஜாதி கட்சியாக மாற்ற வேண்டும் என்றார்கள். இது அவர்களுடைய குமுறல். அவர்களது கருத்தை நான் எதிர்க்கவில்லை. பா.ம.க., புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் ஜாதி கட்சிகள்தான். அதே நிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியும் வந்துவிடக்கூடாது என்று நான் எண்ணுகிறேன். சரத்குமார் தி.மு.க.வில் இணைந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். அந்தப் பேச்சுக்கே இடமில்லை. உணர்ச்சியோடு இந்த இயக்கத்தை நடத்தி வருகிறோம். கூட்டணி குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும். சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து செயல்படும். வெற்றி காணும் என்றார் அவர்.
கருத்துக்கள்

யார் யாரெல்லாம் இல்லாதவர்களின் பெயரைக்கூறி அவர்களின் ஆட்சியைக் கொண்டுவருவதாகக் கூறுகிறார்களோ அவர்களைப் பிடித்து உள்ளே போட்டால் நன்று. தன் கொள்கையைக் கூறி அதனை நிறைவேற்ற ஆட்சிக்கு வருவேன் என்றால் அது பொய்யாக இருந்தாலும் ஏற்கலாம். மாறாக மறைந்தவர்கள் பெயரைக் கூறுவோர் ஏமாற்றுப் பேர்வழிகளே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2010 3:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 27 ஜூலை, 2010

நடிகர்கள் இலங்கை செல்வதை தடுக்கக் கூடாது: நடிகர் சங்கம் தீர்மானம்


சென்னை,ஜூலை 25: தொழில் ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லும் நடிகர்களை யாரும் தடுக்க கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை செல்லும் நடிகர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 58-வது பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அசின் உள்ளிட்ட சில நடிகைகளின் இலங்கை பயணம், திரைப்படங்களின் தோல்விகளுக்கு நடிகர்கள் பொறுப்பேற்பது குறித்த திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கை, படப்பிடிப்பு மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்காக இலங்கை செல்லும் நடிகர்களின் நிலைமை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  கூட்டத்தில் கலந்துக் கொண்ட ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நடிகர், நடிகைகள் அசினின் இலங்கை பயணத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசினார்கள். இன உணர்வு இல்லாமல் இலங்கை சென்றுள்ள அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சிலர் வலியுறுத்தினார்கள். துணைத் தலைவர் மனோரமா, துணைச் செயலாளர்கள் காளை, கே.ஆர்.செல்வராஜ், நடிகர்கள் ஓய்.ஜி.மகேந்திரன், சார்லி, எஸ்.வி.சேகர், சீதா, நளினி, மும்தாஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் நடிகர்கள் இலங்கை செல்வதை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். திரைப்படத்தின் வர்த்தகத்தில் ஏற்படும் லாப, நஷ்டங்களுக்கு நடிகர்கள் பொறுப்பல்ல. நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல் இருப்பவர்கள் ஆகஸ்ட் 15-க்குள் உறுப்பினர் ஆக வேண்டும். திரைப்படங்களின் தோல்விகளுக்கு நடிகர்கள் நஷ்டஈடு தர முடியாது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்

கேரள நங்கை மீதான மயக்கமா? ஆளும் தலைமையின் அறிவுறுத்தலா? சரத்குமாரின் தடுமாற்றததின் காரணம் என்ன? எந்த மாதிரி இலங்கை சென்றால் தடுக்கலாம எனக் கூறுகிறது தென்னிந்திய நடிகர் சங்கம். தமிழ் நடிக நடிகையர் சங்கம் உருவானால்தான் தமிழ் நலம்பேணப்படும்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/27/2010 3:32:00 AM
சினிமாக் கலைஞர்களை மிரட்டுவது அவரகளிடம் இருந்து பணம் பறிக்கும் வேலைதான் .சட்டம் ஒழுங்கை பாதிக்கும் படி எதாகிலும் எதிர்ப்பு என்கிற பெயரில் ஒரு கூட்டம் தமிழ் நாட்டில் இலங்கை தமிழர் பெயரில் நம் நாட்டவரை மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது .நம் நாடு விடுதலைப்புலிகள் மீது தடி வித்தித்துள்ளது கணேச முர்த்தி எம் பி .தன் ஈரோடு ஆபீஸ் முன்னாலே பிரபாகரன் படத்தி வைத்து வீர வணக்க அஞ்சலி செலுத்துகிறார் ,ஒரு எம் பி என்பவரே சட்டத்தை மீறுகிறார் .இந்தியா அரசு வேடிக்கை பார்க்கிறது இந்த துணிச்சல்தான் இவர்களை மேலும் தீவிர வாதிகளுக்கு ஆதரவாக தூண்டுகிறது
By தேசநேசன்
7/26/2010 8:27:00 PM
என்ன மானக்கேடு? தமிழ் மக்களுக்கு உதவவே தான் யாழப்பாணம் சென்றதாக அசின் சொல்கிறாள். கருணாஸும் அதைத்தான் சொல்லப்போகிறார். சினிமா சங்கத்தினரின் தீர்மனாம் அசினின் செயல் சரியனாதென்றும் தாங்கள் தவறு செய்து விட்டோம் என்று ஒப்புக்கொள்வது போலும் இருக்கின்றது. அது போகட்டும் யார் யாருக்கு உதவுவது என்ற் விவஸ்த்தையே கிடையாதா?
By Daniel
7/26/2010 6:51:00 PM
இந்த சினிமா எப்படி தமிழனை அடிமை படுத்துது பாருங்க, எம்ஜியார், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், இப்ப இவரு, இவங்கள பார்த்த சிங்களன், அதையே வச்சு தமிழன அடிமையாக்க பார்க்கிறான், நான்கூட என் இனத்திற்கு உதவ தயார், அதை சிங்களன் அனுமதிப்பானா?. ஏன் இதுபோன்ற சில சினிமாகாரன மட்டும் அனுமதிக்கிறான்.?.காரணம், இதுபோன்ற சினிமாக்காரன் காசு மற்றும் ஆள்மைக்காக நடிக்க தெரிஞ்சவன், அவனைவைத்து தமிழன ஏமாத்தலாம். ஆனால் அந்தசினிமாவிலும், நல்ல சிந்தனையாளர்கள் உள்ளனர், அவர்களை சினிமா போதை ஏறிய தமிழர்கள் நினைத்துபாற்பதில்லை.
By Moorthi
7/26/2010 6:05:00 PM
ராஜபஷவின் எச்சி சோற்றை தின்பதற்கு அத்தனை ஆசையா? கேரளத்து சிங்காரியின் அறிவுரையா?
By yakkubai
7/26/2010 6:03:00 PM
நீங்க தனிப்பட்ட முறையில் இலங்கைக்குப் போங்க, ஷூட்டிங் செய்ய போங்க, பிரச்சனையே கிடையாது. ராஜபக்ஷ பொண்டாட்டியோட சீலை தொங்கலைப் பிடிச்சுக்கிட்டு யாழப்பாணம் போய்சமூக சேவை செய்ய வேண்டாம். அம்புட்டுதா! ஏன் சரத் அண்ணே, யாரு பின்னாலிருந்து செடில் பிடிக்கிறாங்க? இந்த ஆட்டம் போடுறீங்க
By வாடா மன்னாரு
7/26/2010 4:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 2 டிசம்பர், 2009

இடைத் தேர்​தல்:​ திமு​க​வுக்கு சரத்​கு​மார் கட்சி ஆத​ரவு



சென்னை,​ டிச.1: இடைத் தேர்த​லில் ஆளும் திமு​க​வுக்கு ஆத​ரவு அளிக்க அகில இந்​திய சமத்​துவ கட்சி முடிவு செய்​துள்​ளது.​ இடைத் தேர்த​லில் கட்​சி​யின் நிலைப்​பாடு குறித்து விவா​திக்க,​ தலைமை நிர்​வா​கி​கள் குழுக் கூட்​டம் சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்​றது.​ இந்​தக் கூட்​டத்​தில் கலந்து கொண்ட பெரும்​பா​லா​னோர் ஆளுங்​கட்​சி​யான திமுக வேட்​பா​ளர்​களை ஆத​ரிக்​க​லாம் என்று கருத்து தெரி​வித்​த​தால்,​ அதன் அடிப்​ப​டை​யில் அந்​தக் கட்​சியை ஆத​ரிக்க வேண்​டு​கி​றேன் என்று சமத்​துவ மக்​கள் கட்​சித் தலை​வர் சரத்​கு​மார் செவ்​வாய்க்​கி​ழமை வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளார்.
கருத்துக்கள்

சரி.சரி. அப்படியே இளைய தளபதி முன்னிலையில் திமுக வில் இணைந்து பெட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/2/2009 4:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழ் வேண்டும்: சரத்குமார்



சென்னை, அக். 24: "நீதிமன்ற வழக்காடும் மொழியாக தமிழை நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தமிழர்களுக்கு மருந்திடக் கூடிய வகையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அமைய வேண்டும். உயர் கல்விகளில் தமிழை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறைக்கென தனி அமைச்சகத்தையும், அமைச்சரையும் உருவாக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழுக்கு முக்கியத்துவம் வேண்டும். சட்டம் இயற்றுவதும், சட்டங்களால் வாதாடுவதும் சட்டங்கள் அளிக்கும் தீர்ப்பிலும் தமிழ் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்'' என்று தனது அறிக்கையில் சரத்குமார் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

இன்றைய சூழலே நீடித்தால் நமது கொள்ளப் பேரன்களுக்குக் கொள்ளுப் பேரன்களும் இதே கோரிக்கைகளைத்தான் வைப்பர். எல்லாம் தமிழ் என்பது வீட்டளவில் கூட இல்லை; ஏட்டளவில்தான்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2009 7:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *