president லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
president லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 ஜனவரி, 2013

US-based former GTF President becomes advisor to SL colonial governor

US-based former GTF President becomes advisor to SL colonial governor

[TamilNet, Wednesday, 16 January 2013, 00:16 GMT]
US-based Dr Nagalingam Ethirveerasingam, the first president of the Global Tamil Forum (GTF), accepts an ‘advisor’ position to G.A. Chandrasiri, Sri Lanka’s colonial governor and retired Major General of the war crimes accused SL military. The website of SL run Northern Provincial Council on Saturday indicated that Dr Ethirveerasingam is already functioning as Advisor on Education and Sports to the SL Governor. A doctorate in Agriculture education from the Cornell University in the USA, Ethirveerasingam, now 78, is also a recognised sportsman who represented Ceylon in the Olympics of 1950s.
Ethirveerasingam
The International Crisis Group (ICG) in its report no 186, dated 23 February 2010 on “Sri Lankan Tamil Diaspora after the LTTE”, said that “hardliners in the GTF, such as the British Tamil Forum (BTF), have reportedly forced out the GTF president, Dr Nagalingam Ethirveerasingam, for moderating his stance on separatism” (page 14).

Rev Fr Dr S.J. Emmanuel replaced Dr Ethirveerasingam as the president of the GTF earlier in 2010.

In the post-war scenario, Dr Ethirveerasingam was interested in contesting elections in the island, informed political sources said.

He managed to find the space to work in Vanni on children and sports after the war.

Writing a comment in Groundviews website in 2008, Ethirveerasingam said:

“The Sinhala and the Tamil communities are like the right and left half of a brain. They were joined with a connective tissue, the “corpus collosum”. Mr. B and his majority blocked communication between the two brains with the Sinhala Only Act in 1956. Mrs B and her leftists performed the surgery to cut the connective tissue in 1972. It is foolish for the right-half to pronounce that there is no left half and that both are one, the right. It is best not to harm each others independent existence until such time we are creative enough to grow a new connective tissue better than the old one, to make both halves benefit equally from each other.”

Dr Ethirveerasingam in his recent comments has come out with appreciating words on TNA’s nominated parliamentarian M.A. Sumanthiran.
SL governor's meeting on sports
[Photo courtesy: np.gov.lk]


External Links:
np.gov.lk:Discussion on Development of NP Sports Sector

சனி, 22 டிசம்பர், 2012

Jaffna University Teachers' Union President summoned

Jaffna University Teachers' Union President summoned to Vavuniyaa

[TamilNet, Friday, 21 December 2012, 17:38 GMT]
Sri Lankan ‘Terrorist’ Investigation Department (TID) has placed a phone call to the head of Jaffna University Teachers Association (JUTA) Lecturer A Rajakumaran and summoned him to the notorious TID office in Vavuniyaa, informed circles at the University of Jaffna told TamilNet on Friday. The JUTA has been firm in defending the rights of the students and has extended support to the protest by the students. It has also held its own protests against the detention by the TID.

The TID from Vavuniyaa takes direct instructions from SL Defence Secretary and presidential sibling Gotabhaya Rajapaksa.

Mr Rajakumaran is the head of the department of the English Language Teaching Centre at the University of Jaffna.

A caller from the TID has reportedly told Mr Rajakumaran that they needed to record statement from him regarding the incidents on 26 and 27 November, the sources further said.

Earlier, the TID has also been against the Bishop of Mannaar Rt. Rev. Dr. Rayappu Joseph, who had established that 146,679 people had gone unaccounted for in the Vanni by citing the statistics of the SL government itself.

Chronology:

செவ்வாய், 20 நவம்பர், 2012

கொலைகாரனை உயிர் இழந்தோர் பிள்ளைகள் கொண்டாட வேண்டுமாம்!

இலங்கை  அதிபரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: தேர்வுகள் நிறுத்தம்

First Published : 20 November 2012 12:36 PM IST
இலங்கை ஜனாதிபதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், முல்லைத்தீவு மாவட்டப் பள்ளிகளில் நடக்கவிருந்த மாகாண அளவிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மாணவர்களைப் பங்கு பெறச் செய்வதற்காகவே இவ்வாறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முல்லைத்தீவு மாவட்ட பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு வருகை தந்த அரசு அதிகாரிகள், ஜனாதிபதியின் பிறந்த நாளைக் கொண்டாடுமாறு உத்தரவிட்டனராம்.
இதை அடுத்து, அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

திங்கள், 5 நவம்பர், 2012

அமெரிக்கத் தலைவர் தேர்தலில் நாளை வாக்குப்பதிவு


அமெரிக்கத் தலைவர் தேர்தலில் நாளை வாக்குப்பதிவு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாளை வாக்குப்பதிவு
வாஷிங்டன், நவ.5-

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பதவி அமெரிக்க ஜனாதிபதி பதவி. அமெரிக்காவை ஆள்வது மட்டும் இன்றி பிற நாடுகளிலும் அதிகாரம் செலுத்தும் சக்தி கொண்டது அந்த பதவி. அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமைக்கு பிறகு வரும் முதலாவது செவ்வாய்க்கிழமையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்.

தற்போது ஜனாதிபதியாக இருந்து வரும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒபாமாவின் பதவிக்காலம் அடுத்து ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய இருப்பதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் கவர்னர் மிட் ரோம்னி நிறுத்தப்பட்டு உள்ளார். இருவரும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்து வந்தனர். டெலிவிஷனில் நேரடி விவாதமும் நடத்தினார்கள். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் ஒபாமாவுக்கு சில மாநிலங்களிலும், மிட் ரோம்னிக்கு சில மாநிலங்களிலும் அதிக ஆதரவு உள்ளது. அமெரிக்காவின் மக்கள் தொகையில் 22 சதவீதம் மக்களை கொண்ட நெவடா, கொலராடோ, லோவா, விஸ்கான்சின், ஓயோ, நியூஹாம்ஷைர், விர்ஜினியா, வடகரோலினா, புளோரிடா ஆகிய 9 மாநிலங்களின் வாக்குகள் தான் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் என்று கருதப்படுவதால், இருவரும் அந்த மாநிலங்களின் தேர்தல் சபை வாக்குகளை பெறுவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். இருவரும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனித்தனியாக தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையான மக்கள் வாக்குகளை யார் பெறுகிறார்களோ, அவர்களுக்கே அந்த மாநிலத்தின் தேர்தல் சபை வாக்குகள் அனைத்தும் வழங்கப்படும்.

இவ்வாறு தேர்ந்து எடுக்கப்படும் தேர்தல் சபை உறுப்பினர்கள் பின்னர் கூடி அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பார்கள். யார் அதிக தேர்தல் சபை வாக்குகளை பெறுகிறாரோ. அவர் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார். மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. இதில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறுபவர் ஜனாதிபதி ஆவார்.

தேர்தல் சபைக்கு தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்கள் டிசம்பர் மாதத்தில் கூடி புதிய ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் தேர்ந்து எடுப்பார்கள். இந்த முடிவுகள் ஜனவரி 6-ந் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும். புதிய ஜனாதிபதி ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பார்.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

சுசில் குமார் சிண்டே தேர்வு

மக்களவை முன்னவர் எனக் குறிப்பிடுங்கள். மக்களவைத் தலைரவாக திருவாட்டி மீராகுமார்தான் தொடருகிறார்.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


தற்போதைய செய்திகள்
மக்களவைத் தலைவராக சுசில் குமார் சிண்டே தேர்வு

First Published : 03 Aug 2012 04:46:53 PM IST தினமணி


புது தில்லி, ஆக., 3 : நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.முன்பு மத்திய நிதியமைச்சராக இருந்த பிரணாப் மக்களவைத் தலைவராக இருந்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவராக பதவியேற்றதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது.இந்நிலையில், உள்துறை அமைச்சராக 2 நாட்களுக்கு முன்பு பதவியேற்றுக் கொண்ட சுஷில் குமார் ஷிண்டே மக்களவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளி, 22 ஜூன், 2012

மூவரின் மரணத்தண்டனையை விலக்க உறுதியளித்தால் பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்கலாம்: சீமான்

பொய்யான வாக்குறுதி கொடுப்பதில் அரசியல்வாதிகளுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. காங்.கிற்குக் கேட்கவே வேண்டா. எனவே, இவ்வாறு சொல்லாமல்,  காங்.அரசு இப்பொழுது மூவர் தண்டனையையும் நீக்கினால் அதன் வேட்பாளரான பிரணாப்பை ஆதரிப்பதாகக்  கூறலாம் எனத் தெரிவிக்கலாம். இப்படியெல்லாம் வெளிப்படையான பேரம் பேசுவது தலைமைக்குப் பழக்கமில்லை. எனவே,  மறைமுகப்  பேரத்தின்அடிப்படையில் பிரணாப்பைத்தான் ஆதரிக்கும்.  எனவே, போக விரும்பாத ஊருக்கு வழிகாட்டிப் பயனில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய உறுதியளித்தால் பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்கலாம்: சீமான்

First Published : 22 Jun 2012 12:13:39 PM IST

Last Updated : 22 Jun 2012 12:17:51 PM IST

ராமநாதபுரம், ஜூன் 22: ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதாக உறுதி அளிக்கும் பட்சத்தில் திமுகவும், திருமாவளவனும் பிரணாப் குடியரசுத் தலைவராக ஆதரவு அளிக்கலாம் என்றார் திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான்.இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கூறியது...குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவும், திருமாவளவனும் பழங்குடி இனத்தவரான சங்மாவுக்கு ஆதரவு தரவேண்டும். பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம். அப்படி இல்லாவிடில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வேன் என்ற உறுதிமொழியின் பேரில் வேண்டுமானால் ஆதரவு அளிக்கட்டும். இதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்தால் அவர்களுக்கு 20 வருடங்கள் வரை சிறை அளிக்கும் வகையில் ராஜபட்ச பேசியிருக்கிறார். அப்படி இந்திய எல்லைக்கு வந்து கைதாகும் இலங்கை மீனவர்களையும் 20 வருடங்கள் சிறையில் அடைக்கும்படி நாங்கள் கூறினால் அது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்கு போடுவார்கள் என்றனர் இருவரும்.முன்னதாக, ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான், அமீர் ஆகியோர் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. அது தொடர்பாக இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். இந்த வழக்கில் மீண்டும் ஜூலை 20ம் தேதி இருவரும் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்



சனி, 16 ஜூன், 2012

தமிழக நா.உ., ச.உ. கள் கொலைக்கூட்டாளி பிரணாப்பிற்கு வாக்களிகக்கூடாது. - சீமான் வேண்டுகோள்

திங்கள், 23 ஏப்ரல், 2012

அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராகிறார்?

நாம் பெருமைப்படவோ மகிழ்ச்சி யடையவோ ஒன்றும் இல்லை. தமிழன் என்ற முறையில் இல்லா விட்டாலும்  மனித நேயத்துடனும் நடந்து கொள் ளவில்லை. சிறுவர்களுடனோ மாணாக்கர்களுடனோ உரையாடக் குடியரசுத்தலைவர் தேவையில்லை. ஒரு வேளை இதற்காகத்தான் இலங்கை சென்று வந்தாரோ எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பிறந்த ஒரே காரணத்திற்காகத் தமிழ்நல எதிராளிகளை வரவேற்காதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராகிறார்?

First Published : 23 Apr 2012 03:17:28 PM IST

மும்பை, ஏப்.23: அரசியல் சார்பில்லாத ஒருவரை அடுத்த குடியரசுத் தலைவராக தேர்வுசெய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் யோசனை கூறியுள்ளார்.பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்ததாக அரசியல் சார்பற்றவர் ஒருவரை தேர்வு செய்வதுதான் சிறந்த தேர்வாக இருக்கும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் தனது சார்பில் யாரையாவது வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுவரும் நிலையில் சரத்பவாரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி அந்த பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நம்புகின்றனர்.இந்த நிலையில் பவார் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதால் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே மீண்டும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.அவரை வேட்பாளராக நிறுத்த முலாயம்சிங்கின் சமாஜவாதி, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் ஒருவர் போட்டியிடுவதை நமது அரசியலமைப்பு தடை செய்யவில்லை. அணுசக்தித் துறையில் பெரும் பங்களிப்பு மற்றும் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரின் செயல்பாடு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது கலாமை வேட்பாளராக நிறுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து சரத்பவார் கருத்து: அப்துல்கலாமுக்கு ஆதரவு அதிகரிப்பு
ஜனாதிபதி தேர்தல் குறித்து சரத்பவார் கருத்து: அப்துல்கலாமுக்கு ஆதரவு அதிகரிப்பு
புதுடெல்லி, ஏப். 23-

ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற ஜூலை மாதம் 25-ந்தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற எம்.பி.க் கள் மற்றும் மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.

காங்கிரஸ் கட்சி தன் விருப்பப்படி ஜனாதிபதியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது. அந்த கட்சி கூட்டணிக்கு 8 சதவீத ஓட்டுக்கள் குறைவாக உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் இதே நிலையில்தான் உள்ளது. எனவே காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகளின் கைகளில்தான் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான சக்தி உள்ளது.

இந்த கட்சிகளிடம் 24 சதவீத வாக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, ஜெயலலிதாவின் அ.தி.மு.க., மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.

இதில் உத்தரபிரதேசத்தில் மட்டும் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் 1 1/2 லட்சம் வாக்குகளை வைத்துள்ளன. எனவே மாநில கட்சிகள் யாரை அடையாளம் காட்டும் என்று காங்கிரஸ், பா.ஜ.க. எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றன. வேட்பாளர் பற்றி இதுவரை எந்த கட்சியும், எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக உள்ளன. கடைசி நிமிடத்தில் வேட்பாளரை களம் இறக்கலாம் என்று காங்கிரஸ் பொறுமையாக உள்ளது.

இந்த நிலையில் அரசியல் சார்பு இல்லாதவர் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். அவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை மனதில் வைத்து இப்படி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்துல்கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என்று முலாயம்சிங் யாதவ் கூறி வருகிறார். அவருக்கு ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மற்ற மாநில கட்சிகளும் அப்துல் கலாமை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. மாநில கட்சிகளின் ஒருமித்த கருத்தால் அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Monday, April 23,2012 06:07 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
நாம் பெருமைப்படவோ மகிழ்ச்சி யடையவோ ஒன்றும் இல்லை. தமிழன் என்ற முறையில் இல்லா விட்டாலும் மனித நேயத்துடனும் நடந்து கொள் ளவில்லை. சிறுவர்களுடனோ மாணாக்கர்களுடனோ உரையாடக் குடியரசுத்தலைவர் தேவையில்லை. ஒரு வேளை இதற்காகத்தான் இலங்கை சென்று வந்தாரோ எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பிறந்த ஒரே காரணத்திற்காகத் தமிழ்நல எதிராளிகளை வரவேற்காதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


செவ்வாய், 15 நவம்பர், 2011

சந்தையில் காலணி விற்கும் பேரூராட்சி தலைவர்





மேட்டூர்:கொளத்தூர் பேரூராட்சி தலைவர் சின்னக்கண்ணு (எ) பழனிச்சாமி, வாரந்தோறும் சந்தையில் கடை போட்டு, காலணி விற்பனை செய்கிறார்.

சேலம் மாவட்டம், கொளத்தூர் பேரூராட்சி தலைவர் பதவி, ஆதி திராவிடருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், கொளத்தூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு, 16 பேர் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சின்னக்கண்ணு (எ) பழனிச்சாமி வெற்றி பெற்று தலைவரானார்.கொளத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தையில் சின்னக்கண்ணு கடை போட்டு, காலணி வியாபாரம் செய்வது வழக்கம். பேரூராட்சி தலைவரான பின்பும் சந்தையில் சின்னக்கண்ணு காலணி வியாபாரம் செய்கிறார்.

அவர் கூறியதாவது:கடந்த, 20 ஆண்டுகளாக, காலணி வியாபாரம் செய்கிறேன். அந்தியூர், மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ்., மற்றும் கொளத்தூர் வாரச்சந்தைகளில் கடை போடுவேன். காலணி வியாபாரத்தின் மூலமே கொளத்தூர் பேரூராட்சியின் பெரும்பாலான மக்கள் எனக்கு அறிமுகம் ஆகினர்.தற்போது கொளத்தூர் பேரூராட்சி தலைவராக இருந்தபோதிலும், 20 ஆண்டாக காப்பற்றிய தொழிலை விட மனமில்லை. தலைவரான பின், வெளிசந்தைகளில் கடை போடுவதை நிறுத்திவிட்டு, கொளத்தூர் சந்தையில் மட்டும் கடை போட்டு காலணி விற்பனை செய்கிறேன்.இவ்வாறு சின்னக்கண்ணு கூறினார்.

புதன், 31 ஆகஸ்ட், 2011

ramdoss opposed salman: சல்மான் குர்சித் கருத்துக்கு இராமதாசு எதிர்ப்பு

சல்மான் குர்ஷித் கருத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு

First Published : 31 Aug 2011 02:32:45 PM IST


சென்னை, ஆக.31: 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மூவருக்கும் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அனைவரும் பாராட்டி வரவேற்றுள்ளனர். ஆனால் சல்மான் குர்ஷித் அந்த தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறியிருப்பதன்மூலம் தண்டனையை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் முயற்சிகளைக் கைவிட்டு, தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை மதித்து மூவரின் தூக்குத் தண்டனையும் ரத்து செய்ய மத்திய அரசும் பரிந்துரைக்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் அளிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் மூவரின் தண்டனையைக் குறைப்பதற்கான தீர்மானத்தை தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றி புதிய ஆளுநரிடம் முதல்வர் நேரில் வழங்க வேண்டும். புதிய ஆளுநர் ரோசய்யா பிறக்கும் முதல் உத்தரவே மூவரின் தூக்குத் தண்டனையும் ரத்து செய்வதாகத்தான் இருக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

cmaniyarsan condemed central law minister: மத்திய சட்ட அமைச்சருக்கப் பெ.மணியரசன் கண்டனம்

மத்திய சட்ட அமைச்சருக்கு 
பெ.மணியரசன் கண்டனம்

First Published : 31 Aug 2011 10:25:35 AM IST


சென்னை, ஆக.31: தமிழக அரசின் சட்டமன்றத் தீர்மானம் மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளதற்கு தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் மறுஆய்வு செய்து தமது முந்தைய நிராகரிப்பு முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களது மரண தண்டனையை நீக்கி வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளார். இந்த மனிதநேய முடிவை இந்தியாவெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனைக்கெதிரான இயக்கங்களும் வரவேற்றுள்ளன.சென்னை உயர்நீதிமன்றம் மூன்று தமிழர்களுக்கும் நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து நிறுத்தி வைத்துள்ளது.  இந்தச் சிறப்பு மிக்க உயர்நீதிமன்ற முடிவை உலகெங்கும் வாழும் தமிழர்கள் வரவேற்று ஒட்டு மொத்தத் தமிழினமும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.இந்த நிலையில் புதுதில்லியில் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்றும் அது ஒரு தீர்மானம் என்பதைத் தாண்டி அதற்கு முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை ஒரு கருத்துதான் என்றும் உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களும் கூறும் கருத்துகளைவிட குடியரசுத் தலைவர் ஆணையே இறுதியாக நிற்கும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து பதில்மனு தாக்கல் செய்வோம் என்றும் சொல்லியுள்ளார்.  சட்ட அமைச்சர் சல்மான் குருஷித்தின் மேற்கண்ட கருத்துகள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தைச் சவாலுக்கு அழைக்கும் முரட்டுத்தனமான வாதங்களாகும்.தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று நடுவண் அமைச்சர் கூறுவது ஏழு கோடித் தமிழ் மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் இழிவுபடுத்தும் செயலாகும். ஏற்கெனவே புண்பட்டுள்ள தமிழினத்தை மேலும் புண்படுத்துவதாகும்.  அத்துடன் சட்டமன்றத்திற்கு இருக்கின்ற அரசமைப்புச் சட்டப்படியான அங்கீகாரத்தையும் மதிப்பையும்  கேவலப்படுத்துவதாகும்.அடுத்து நீதித் துறையையும் கொச்சைப்படுத்தும் முறையில், உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ கருத்துகள் சொல்லலாம். ஆனால் இறுதி முடிவு குடியரசுத் தலைவரிடம் இருக்கிறது என்று அவர் கூறியிருப்பது நீதித்துறையின் தற்சார்புத் தன்மையை மறுப்பதாகும்.இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கூட்டம்கூட்டமாகக் கொன்று குவிக்க எல்லா வகையிலும் சிங்கள இனவெறி அரசுடன் பங்கெடுத்த இந்திய ஏகாதிபத்தியம், குற்றமற்ற மூன்று தமிழ் இளைஞர்களையும் காவு கொள்ளத் துடிக்கிறது என்பது தெரிகிறது. இந்த நிலையில் மூன்று இளைஞர்களைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டு உரிமைகளை மீட்கவும், தமிழர்கள் தொடர்ந்து ஓய்வின்றி போராட வேண்டிய தேவை இருக்கிறது.தமிழக சட்டப் பேரவை தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று இந்திய ஏகாதிபத்தியம் ஏகடியம் செய்தால் இந்திய அரசின் சட்டங்கள் தமிழினத்தைக் கட்டுப்படுத்தாது என்ற நிலைக்குத்தான் தமிழர்கள் செல்லவேண்டி வரும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனித நேயமற்ற மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இந்திய அரசு தமிழ் மக்களின் உணர்வுகளையும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால ஆணையையும் உரியவாறு கவனத்தில் எடுத்து அவற்றிற்குட்பட்டு செயல்படவேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மணியரசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சனி, 30 ஜூலை, 2011

இயல் இசை நாடக மன்றத்துக்குப் புதிய தலைவர்: முதல்வர் நியமனம்

கலைமிகு தேவா, கலைமிகு சச்சு ஆகிய இருவருக்கும் பாராட்டுகள். மன்றத்தைத் திரைப்படக் கலைஞர்களுக்கு மட்டும்உரியது என நடத்தாமல் நாடகம், நாட்டுப்புறக்கலை, இயல்கலை, தமிழிசைக்கலை ஆகியன வளரவும் அனைத்துவகைக் கலைஞர்கள் பயனுறவும் சிறப்பாகச் செயல்பெட வாழ்த்துகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இயல் இசை நாடக மன்றத்துக்கு புதிய தலைவர்: முதல்வர் நியமனம்

First Published : 30 Jul 2011 06:25:46 PM IST


சென்னை, ஜூலை 30: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்துக்கு புதிய தலைவராக இசையமைப்பாளர் தேவா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சச்சு செயல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் தமிழக இயல் இசை நாடக மன்றத்தின் பொறுப்புகளில் நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.

வெள்ளி, 5 நவம்பர், 2010

இந்தியா வரும் 'வெள்ளை மாளிகை'!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய பயணத்தை முன்னிட்டு அவர் மும்பையில் தங்க உள்ள தாஜ் ஹோட்டலின் பாதுகாப்புப் பணிக்காக வியாழக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸôர்.
புது தில்லி,​​ நவ.4: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இந்தியாவுக்கு வருகிறது.​ அதிபர் ஒபாமாவின் இந்திய பயணத்தின்போது வெள்ளை மாளிகை கட்டடம் மட்டும்தான் வாஷிங்டனில் இருக்கும்.​ அதிலுள்ள முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு இடம்பெயர்கிறது.​ ​அதிபரின் தகவல் தொடர்பு சாதனங்கள்,​​ அணு குண்டை பயன்படுத்துவதற்கான பொத்தான்,​​ அதிபர் பயணிக்கும் லிமோசின் கார் இவை மட்டுமின்றி வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய அதிகாரிகளும் இந்தியாவுக்கு வருகின்றனர்.​ அதிபரின் பாதுகாப்புக்காக 34 போர்க் கப்பல்கள் மும்பை கடல் பிராந்தியத்தில் காவல் பணியில் ஈடுபடும்.​ இதில் ஒரு விமானந்தாங்கிக் கப்பலும் அடங்கும்.​ மும்பையில் ஒபாமா தங்கியிருக்கும் 2 நாள்களும் இவை இந்தப் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொள்ளும்.2008-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர்.​ இவர்கள் அனைவரும் கடல் வழியாகத்தான் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.​ இதையடுத்தே கடலோர ரோந்துப் பணியை அமெரிக்க போர்க்கப்பல்கள் மேற்கொள்கின்றன.மும்பைக்கு முதலில் வரும் ஒபாமா,​​ விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தெற்கு கொலாபாவில் உள்ள இந்திய கடற்படைத் தளத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.​ அங்கிருந்து கார் மூலம் தாஜ் ஹோட்டலுக்கு வருவார்.ஒபாமாவின் இந்தியப் பயணத்தை ஒட்டி 2 ஜெட் விமானங்கள்,​​ 40 கார்கள் வந்துள்ளன.​ இத்துடன் அதிக அளவு பாதுகாப்பு அதிகாரிகளும் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.தாஜ் ஹோட்டல்,​​ ஹயாத் ஹோட்டலில் அதிபருடன் வரும் அதிகாரிகள் தங்குவதற்காக 800 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.​ ​÷அதிபர் ஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை அந்நாட்டு புலனாய்வுப் பிரிவு மேற்கொள்கிறது.​ இத்துடன் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்களும் ​(என்எஸ்ஜி)​ மேற்கொள்வர்.​ இவர்கள் தவிர,​​ மத்திய துணை ராணுவத்துடன் உள்ளூர் போலீஸôரும் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வர்.மும்பையைத் தொடர்ந்து தில்லியிலும் இதே அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.​ அதிபர் பயணம் செய்யும் 'ஏர்ஃபோர்ஸ் 1' விமானம் ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலைவரை தயாராக இருக்கும்.​ ​ஒரு நாள் செலவு ரூ. 900 கோடி:​ அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாதுகாப்புக்கு நாளொன்றுக்கு ரூ. 900 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபருடன் பாதுகாப்பு அதிகாரிகள்,​​ பத்திரிகையாளர்கள் உள்பட 3,000 பேர் இந்தியா வந்துள்ளனர்.அதிபருக்கு ஆகும் செலவு குறித்து குடியரசுக் கட்சியின் மைகேல் பாஹ்மன் கடுமையாக விமர்சித்துள்ளார்.​ இதற்கு முன்பு எந்த அதிபருடனும் இந்த அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் அதிகாரிகள்,​​ பாதுகாப்பு வீரர்கள் பயணித்தது கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.​ ​அதிபரின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லும் பாதுகாப்பு வீரர்களின் பட்டியலை அளித்தோம்.​ பொதுவாக அரசு செலவிடும் தொகையை இதுபோல பெரிதுபடுத்திக் கூறுவது வழக்கம் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அமி பிரண்டேஜ் குறிப்பிட்டார்.
கருத்துகள்

ஒரு நாட்டின் தலைவர் தன் நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்குச் செல்கையி்ல் இத்தகைய பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பது அவருக்குப் பெருமையன்று. எங்கும் எளிமையாக இடம் பெயரும் சூழலே எப்பொழுதும் இருக்க வேண்டும்.இல்லாத பொழுது தன் நாட்டிலேயே இருந்து கொள்ளலாம். உலகம் முழுவதும் ஒரே கூட்டரசாக மலரும் நாள் வரும் பொழுதுதான் உலக ஒற்றுமை நிலவும். வல்லரசும் பொல்லா அரசுகளும் இருப்பின் உலகிற்குத்தான் கேடு. அமெரிக்கா தன்னுடைய வெளியுறவு கொள்கைகளை மனித நேய அடிப்படையில் மாற்றி அமைத்தாலே பாதுகாப்புச் செலவு குறையும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

திங்கள், 3 மே, 2010

தமிழ் செம்மொழி மாநாடு; குடியரசுத் தலைவர் பங்கேற்க ஒப்புதல்: கருணாநிதி தகவல்



புதுதில்லி, மே 2: கோவையில் நடைபெறவுள்ள தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தாம் நிச்சயம் வருவதாக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தெரிவித்ததாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இரண்டு நாள் பயணமாக, தில்லி வந்துள்ளார் முதல்வர் கருணாநிதி. ஞாயிற்றுக்கிழமை காலை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் முதல்வர் கருணாநிதிக்கு அன்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:தங்களுடைய தில்லி வருகையின் நோக்கம் என்ன?இந்த ஆண்டுக்கான திட்டக் குழுவின் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தான் வந்திருக்கிறேன். அதோடு, கோவையில் நடைபெற இருக்கின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைத் தொடங்கி வைக்க குடியரசுத் தலைவரை அழைத்திருக்கிறோம். அதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காகவும் வந்திருக்கிறேன்.ஞாயிற்றுக்கிழமை காலையில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தீர்களே, அவர் செம்மொழி மாநாட்டுக்கு வருவதற்கு ஒப்புதல் அளித்தாரா? நிச்சயமாக வருவதாகத் தெரிவித்தார்.சேலம் இரும்புத் தொழிற்சாலையில் அதற்காக நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது பற்றி மத்திய அரசுக்கு எழுதி இருக்கிறீர்கள். பிரதமரை திங்கள்கிழமை சந்திக்கும் போது, அதைப் பற்றி பேசுவீர்களா?பிரதமரைச் சந்திக்கும் போது இதைப் பற்றி பேசுவேன்.இந்த ஆண்டு திட்டக் குழுக் கூட்டத்தில் கடந்த ஆண்டை விட அதிகமாக நிதி ஒதுக்கீடு கேட்டு வலியுறுத்துவீர்களா? புதிய திட்டங்கள் எதையெதை வலியுறுத்துவீர்கள்?திட்டக் குழுவில் எவ்வளவு தொகை கேட்டோம்; எவ்வளவு அனுமதித்தார்கள்; என்னென்ன திட்டங்களுக்காக கேட்டோம் என்பதற்கான விளக்கங்களையும், அதற்கான பதில் என்ன என்பதையும் திட்டக் குழு கூட்டம் முடிந்த பிறகு சொல்கிறேன்.தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக எதிர்க் கட்சிகள் பிரசாரம் செய்கின்றனவே?இந்தியா முழுவதிலுமே மின் பற்றாக்குறை உள்ளது. அதைப் பற்றி நான் விளக்கமாக அறிக்கை கொடுத்து இருக்கிறேன். அதைப் படித்தால் உண்மை புரியும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழகத்தில் மின் வெட்டு அவ்வளவாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.மின் பற்றாக்குறை பற்றி வெள்ளை அறிக்கை அளிக்கப்படுமா?நான் அளித்துள்ள விளக்கமே வெள்ளை அறிக்கை போன்றது தான் என்றார்.ராசாவும், அழகிரியும்...மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, மு.க.அழகிரி ஆகியோரின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி நேரடியாக பதில் அளிக்க மறுத்து விட்டார். அது குறித்து, கேள்வி-பதில் விவரம்:நாடாளுமன்றத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா மீது குற்றச்சாட்டு சுமத்தி, அவரை பதவி விலக வேண்டுமென்று குரல் எழுப்பப்பட்டு இருக்கிறது. அவர் பதவியில் நீடிப்பாரா?உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எதையும் நான் கொண்டு வரவில்லை. (ராசா பதவி விலகத் தேவையில்லை என்பதையே சூசகமாக தெரிவித்தார்.)மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் துறை சம்பந்தப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் இதுவரையில் பதில் அளிப்பதில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாகச் சொல்லப்படுகிறது. மக்களவைத் தலைவர் அழைப்பையும் அவர் புறக்கணித்து விட்டார் என்று சொல்லப்படுகிறதே?இந்த விவரங்களை எல்லாம் நீங்கள் அழகிரியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கட்சித் தலைவர் என்ற முறையில் நீங்கள் விசாரிப்பீர்களா?விசாரித்தால் உங்களுக்குத் தெரிய வருமே!
கருத்துக்கள்

மாநாட்டிற்குக் குடியரசுத் தலைவர் வருவது மகிழ்ச்சி. ஆனால், இந்நாள் வரை செம்மொழி அறிஞர்களுக்கு விருது வழங்காமல் இழுத்தடிக்கும் அவர் இம் மாநாட்டிலாவது அவற்றை வழங்குவதாக அறிவிக்க வேண்டும். தமிழ் நாட்டிற்கு அப்பால் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் கற்பிக்கப்படவும் தமிழர்கள் மிகுதியாக வாழும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழர்களை நியமிக்கவும் அனைத்துத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ் கற்பிக்கவும் வகை செய்ய வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் தமிழுக்குச் சம உரிமை வழங்கி இந்திய ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/3/2010 3:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 29 மார்ச், 2010

நீர்வளத்தில் தமிழகம் பற்றாக்குறை மாநிலம்: கருணாநிதி பேச்சு



சென்னை, ​​ மார்ச் 28:​ ""அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது,​​ நீர்வளத்தில் தமிழகம் பற்றாக்குறை மாநிலமாகவே இருக்கிறது'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மைக் கருத்தரங்கம் மற்றும் செம்மொழி தமிழ் விருதாளர்களுக்குப் பொற்கிழி வழங்கும் விழா ஆகியன சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.​ விழாவில்,​​ கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியது:""இன்றைய பொறியியல் துறை அறிஞர்கள் வியந்து போற்றக்கூடிய தொழில் நுட்பத்தை ஏறத்தாழ 1,800 ஆண்டுகளுக்கு முன்பு கையாண்டு கரிகால சோழன் காவிரி ஆற்றுக்குக் கரை எடுத்தான்.காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி,​​ நீர்ப்போக்கை ஒழுங்கு செய்ததும்,​​ தமிழரின் நீர் மேலாண்மைத் திறனை உலகுக்கு உணர்த்துகிறது.​ இதன்பயனாக,​​ பிற நாட்டு வளங்களை விடச் சோழநாட்டு வளம் செழித்துக் கொழித்தது.நீர் ஆதாரங்களை ஏராளமாக உண்டாக்கி,​​ தங்கள் பெயரை வரலாற்றில் இடம்பெறச் செய்தனர் அரசர்கள்.​ மாமன்னன் ராஜேந்திர சோழன் 11}ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில்,​​ "சோழ கங்கன்' என்னும் தனது பட்டப் பெயரில் "சோழகங்கம்' எனும் ஏரியை உருவாக்கினான்.அந்த ஏரி,​​ இன்று "பொன்னேரி' என அழைக்கப்படுகிறது.​ அந்த ஏரியின் வடிகாலாக தனது சிறப்புப் பெயரிலேயே அமைத்த "வீர நாராயணன் ஏரி' இன்று "வீராணம் ஏரி' என்று புகழ் பெற்றுள்ளது.பற்றாக்குறை மாநிலம்:​​ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இலக்கியங்களாலும்,​​ கட்டுமான அமைப்புகளாலும் நீர்வளத்தில் அந்தக் காலத்திலேயே ஒரு தெளிவு தமிழகத்தில் இருந்தது.இன்றைய நிலையில்,​​ தமிழகத்தின் நீர்வளம் தமிழகத்தைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போது ஒரு பற்றாக்குறை மாநிலமாகவே இருக்கிறது.​ எனினும்,​​ கிடைக்கும் நீர்வளத்தைச் செம்மையாகப் பயன்படுத்திட வேண்டும் என்ற முனைப்போடு பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்,​​ தமிழகத்தில் நீர் ஆதாரங்களைப் பெருக்கிட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.​ மேலும்,​​ பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தின் நீர்வளம் இந்தியாவின் நீர்வளத்தில் 2 சதவீதமாகவும்,​​ மக்கள் தொகை ஆறரை சதவீதமாகவும் அமைந்துள்ளது.​ இதன் காரணமாக,​​ ஓர் இந்தியனுக்குக் கிடைக்கும் நீரில் மூன்றில் ஒரு பாகம்தான் தமிழகத்தில் வாழும் ஒருவருக்குக் கிடைக்கிறது.எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக உலகெங்கும் பிரச்னைகள் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.இந்த நிலையில்,​​ இருக்கும் நீர் வளத்தைச் செம்மையாகக் கையாள்வதற்கும்,​​ பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை உரிய முறையில் சேமிப்பதற்கும் தகுந்த திட்டங்களையும்,​​ நடைமுறைகளையும் வகுத்திட வேண்டும்.வகுக்கப்படும் திட்டங்களின் அடிப்படையில் மக்கள் அவற்றைப் பின்பற்றி வருங்காலச் சமுதாயத்துக்குக் காத்துத் தந்திட வேண்டும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.இந்த நிகழ்ச்சியில்,​​ செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் வா.செ.குழந்தைசாமி,​​ காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் ஆ.மோகன கிருஷ்ணன்,​​ தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன காசிநாதன்,​​ பனைத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.தமிழறிஞர்களுக்கு பொற்கிழிசெம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் சார்பிலான பொற்கிழிகளை முதல்வர் கருணாநிதி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.விருதுகள் தில்லியில் நடைபெறவுள்ள விழாவில்,​​ குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார்.​ பொற்கிழிகள் பெற்றோர் விவரம்:தொல்காப்பியர் விருது ​(2005}2006): பேராசிரியர் அடிகளாசிரியர்}ரூ.5 லட்சம் பொற்கிழிஇளம் அறிஞர் விருது ​(2005}2006):முனைவர் இரா.அறவேந்தன்,​​ முனைவர் ய.மணிகண்டன்,​​ முனைவர் சி.கலைமகள்,​​ முனைவர் வா.மு.செ.​ முத்துராமலிங்க ஆண்டவர்,​​ முனைவர் கே.பழனிவேலு.இளம் அறிஞர் விருது ​(2006}2007): முனைவர் சு.சந்திரா,​​ முனைவர் அரங்க பாரி,​​ முனைவர் மு.இளங்கோவன்,​​ முனைவர் மா.பவானி,​​ முனைவர் இரா.கலைவாணி.இளம் அறிஞர் விருது ​(2007}2008): முனைவர் அ.செல்வராசு,​​ முனைவர் ப.வேல்முருகன்,​​ முனைவர் ஆ.மணவழகன்,​​ முனைவர் ச.சந்திரசேகரன்,​​ முனைவர் சா.சைமன் ஜான்.குறள் பீடம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் எல்.ஹார்டுக்கு ரூ.5 லட்சம் பொற்கிழி அறிவிக்கப்பட்டு இருந்தது.​ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை.​ பின்னொரு நிகழ்வில் அவர் பொற்கிழியைப் பெறுவார் என அறிவிக்கப்பட்டது.
கருத்துக்கள்

நீர்வளம் குறித்த உரை அருமையானது. 2.) தமிழ்ச் செம்மொழியறிஞர்களுக்கான விருது அறிவிப்பிற்குப் பின் குடியரசுத் தலைவரால் சமற்கிருத அறிஞர்களுக்கு விருது வழங்கப் பட்டுள்ளது. தமிழுக்கு ஏன் குடியரசுத் தலைவர மாளிகையும மத்திய காங்கிரசு ஆட்சியும் தடைக் கற்களாக உள்ளன. ஏப்பிரல் 6 அன்று தமிழக முதல்வர் புது தில்லி போகும் நாளில் விருது வழங்கலையும் பொற்கிழி வழங்கலையும் வைத்திருக்கலாமே! தமிழ் மொழிக்கு மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு? விருதாளர்கள் தன்மானத்துடனும் பொறுமையுடனும் இருந்து விருதையும் பொற்கிழியையும் சேர்ந்து பெற்றிருக்கலாமே!

வெட்கக் கேட்டிற்கு வருந்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/29/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்