புதன், 31 ஆகஸ்ட், 2011

ramdoss opposed salman: சல்மான் குர்சித் கருத்துக்கு இராமதாசு எதிர்ப்பு

சல்மான் குர்ஷித் கருத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு

First Published : 31 Aug 2011 02:32:45 PM IST


சென்னை, ஆக.31: 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மூவருக்கும் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அனைவரும் பாராட்டி வரவேற்றுள்ளனர். ஆனால் சல்மான் குர்ஷித் அந்த தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறியிருப்பதன்மூலம் தண்டனையை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் முயற்சிகளைக் கைவிட்டு, தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை மதித்து மூவரின் தூக்குத் தண்டனையும் ரத்து செய்ய மத்திய அரசும் பரிந்துரைக்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் அளிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் மூவரின் தண்டனையைக் குறைப்பதற்கான தீர்மானத்தை தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றி புதிய ஆளுநரிடம் முதல்வர் நேரில் வழங்க வேண்டும். புதிய ஆளுநர் ரோசய்யா பிறக்கும் முதல் உத்தரவே மூவரின் தூக்குத் தண்டனையும் ரத்து செய்வதாகத்தான் இருக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக